Skip to main content

Posts

Showing posts from March, 2011

தேடல்....31.03.2011!

திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவிலாக இருக்கட்டும், அல்லது பிள்ளையார் பட்டி கோவிலாகட்டும் அல்லது காரைக்குடி கொப்புடையம்மன் கோவிலாகட்டும், இல்லை கீழச்சேவல் பட்டி சிவன் கோவிலாகட்டும் கல்லூரி விடுமுறையில் கண்டிப்பாக விடியற்காலையில் அங்கே சென்று விடுவேன். கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற ஈர்ப்பு எப்போதும் எனக்குள் இருந்திருக்கிறது சிறுவயது முதலாகவே, அதுவும் தனியாக கோவிலுக்குச் செல்வதில் எப்போதும் ஒரு லயிப்பும் சந்தோசமும் எனக்கு கிடைத்திருக்கிறது. கோவிலின் பிரகாரத்துக்குள் செல்வதற்கு முன்னாலேயே கொடி மரத்தை வணங்கிவிட்டு வாசல் தாண்டி உள்ளே செல்லும் போது உள்ளே இருந்து வீசும் பழைமையின் வாசமும் பிரமாண்டமான தூண்களுக்கு நடுவே பரவிக்கிடக்கும் இருளும், மனிதர்கள் உரக்க உரக்க பேசுவது கருங்கல் பாறைகளில் பட்டு எதிரொலித்து ஒரு மனக்கிலேசத்தை கொடுப்பதும் தவிர்க்க இயலாதது. பெரும்பாலும் புராதனமான கோவில்களுக்குள் செல்லும் போது அங்கே காலங்கள் கடந்து வந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களின் மன அதிர்களையும் சேர்ந்தே அனுபவித்திருக்கிறேன். கோவில் என்பது ஆழ்மனதினுள் நன்றாகவே பதிந்து போயிருப்பதனாலோ என்னவோ அங்கே ஒரு அதீ

வாக்காள பெருமக்களே...!!!!!

கட்டுரைகளையும், கதைகளையும், கவிதைகளையும் கடந்து நாம் பேசிக் கொண்டிருக்கும் போது கிளர்வில்லாத மனோநிலையில் இயல்பாகவே இருக்க முடிகிறது. சுற்றி நடக்கும் சமூக அவலங்கள் ஆக இருக்கட்டும், வாழ்க்கையின் போக்கில் மனிதர்களுக்கு நிகழும் அனுபவங்களாயிருக்கட்டும், அந்த அந்த கணத்தில் காணும் பொழுதில் ஒரு வித கையறு நிலைக்குப் போய் அங்கே இருந்து துளிர்க்கும் கோபம் சீற்றமாகி, சீற்றத்தில் என்ன செய்யலாமென உற்று நோக்க ஒரு ஆழ்ந்த அமைதியில் வாழ்க்கையில் நிகழும் பெரும்பாலான லாப நஷ்டங்களுக்கும், சந்தோச துக்கங்களும் மனித மனங்களில் உள்ள பிரச்சினைகளும் உற்று நோக்கும் கோணமுமே காரணம் என்பது தெள்ளத் தெளிவாக புரிகிறது. கடந்த வெள்ளியன்று உறவினர் ஒருவரிடம் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது வரவிருக்கும் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்? என்று சாதாரணமாகக் கேட்டேன். நடுநிலையான எண்ணம் இருப்பவர்கள் தான் மிகுதியான குழப்பத்தில் இருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாக்கு கேட்டு வருபவர்களிடம் உச்ச கட்ட எச்சரிக்கையாகவும் இருக்கிறார்கள் என்றும் சொல்ல வெண்டும். இரண்டு பெரும் கட்சிக்காரர்களையும் சொந்த ஊரில் பகைத்துக் கொ

காற்று....!

எந்த ஸ்வரத்தினை ஓதுகிறாய் மரத்திடம் நீ தலைசயசைத்து...தலையசைத்து... ரசனையாய் சிரிக்கிறது எப்போதும்! தண்ணீரைத் தடவிச் செல்லும் ஸ்பரிச சந்தோசத்தில் அலை அலையாய் வெட்கத்தை இறைக்கிறது அந்த மரத்தோரத்து நதி...! பூக்களுக்குள் புகுந்து.. மகரந்தங்களை கலைத்துப் போட்டு வண்டோடு அது கொண்ட காதலை சொல்லிச் சிரித்தபடி செல்லும்... இந்த காற்றின் பயணம்தான் ... எதை நோக்கி...? புல்லாங் குழலுக்குள் புகுந்து இசையாய் உடை உடுத்தி செவிகளுக்குள் பயணப்பட்டு இசையாய் மயங்க வைக்கிறது ... மனித மனங்களை...! ஆக்ரோசங்களை எல்லாம் தன்னுள் அடைகாத்துக் கொண்டு சந்தோசங்களை பரப்பும் காற்றை யார்தான் கட்டிப்போட...? வயல் வெளிகளுக்குள் புகுந்து பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை பகுத்தறிவு கொண்டு நிறுத்தவா முடியும்? மனிதருக்குள் புகுந்து நினைவுகளில் நிறைந்து உயிராய் ஊடுருவியிருக்கும் ஓசையற்ற சூட்சுமத்தினை உணரத்தானே முடியும்...? கையிலெடுத்து காட்டவா முடியும்...! எல்லாம் கூட்டிக் கழித்து விடைகளின் வேரினில் கிடைக்கும் பதில்களில் இருந்து எழும் ஒற்றை கேள்வி..இதுதான்... காற்றுதான் கடவுளா? தேவா. S

ஆகையால்...!

ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை... காற்றில் பறக்கும் இறகு போல எங்கோ ஒரு நாள் நான்... பறந்து போய்விடுவேன்... நீரில் தோன்றும் ஒரு குமிழி போல பட்டென்று என்றேனும்... உடைந்து போய்விடுவேன்...! கற்பூரங்கள் எரிவது எல்லாம்... காற்றில் எரியத்தானே? அன்றி... எரிதலில் இறுமாப்பு கொண்டு எப்போதும் நிற்பதற்கு அல்ல...! ஏதோ ஒரு கட்டுக்குள் சிக்கி அச்சில் ஓடும் பூமிக்கு என்ன கவலை யாரைப் பற்றியும்? அது சுற்றும் வரை சுற்றும் ஈர்ப்புகளில் ஏதேனும் பிழைத்து விட்டால் மீண்டும் தூசுகளுக்குள் தூசாய் தன்னை பரப்பிக் கொண்டு மீண்டும் பரமாணுவாய் வேசமிடும்...! காற்றும், மழையும், வெயிலும் சுழற்சியினால் ஏற்படும் சூழ்ச்சிகளேயன்றி அவையே சூட்சுமங்களா என்ன? சூத்திரங்கள் அறியா அண்டவெளியின் பரந்து விரிந்த பிரேதசங்களில்.... மனித கால் தடங்கள் எல்லாம் மாயையின் உச்சமே...! ஏதோ ஒரு நெருப்பு என்னை... எரித்துப் போடும் இல்லையேல் சிலிக்கனுக்குள் சிக்கி நான் கால்சியங்களின் எச்சத்தை காட்டிக் கொண்டு இல்லாத பூமியின் சொல்லாத பாகமாகப் போகிறேன்.... விலாசமில்லாத இருப்பினிற்குள் எங்கே இருக்கிறது எனது அடையாளம்...? ஆகையால்...இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கி

கத்திக் கப்பல்...!

ஒரு மழைக்காய் செய்த... காகித கத்திக் கப்பல் காத்துகிடக்கிறது பள்ளிக்கூட புத்தகத்துக்கு இடையே...! ஒவ்வொரு நாளும் வானம் பார்த்து ஏக்கமாய் புத்தகம் பிரிக்கும் பொழுதுகளில் கண்ணீரோடு சாய்ந்து கிடக்கும் கத்திக் கப்பல் ஏனோ இதயத்தை ரணமாக்கி சோகமாய் முடங்கியே கிடக்கிறது...! இன்றாவது மழை வருமா? ஏக்கமாய் வானம் பார்த்து பார்த்து சுட்டெரிக்கு சூரியனிடம் ஏனோ ஒரு கோபத்தோடு எப்போதும் நடக்கிறேன் நிலத்தில் தெரியும் என் நிழலை எரித்தபடி! பெய்யாத மழைக்கு வானமா பொறுப்பேற்கும்? ஒட்டு மொத்தமாய் பூமிக்கு சவரம் .. செய்து மொட்டையாக்கி நிறுத்தி வைத்தால் எங்கே இருந்து ஜனிக்கும் மழை? யார் கொடுப்பார் அதற்கு விலை? மரங்களில்லா பூமியில் மழை ஒரு கனவுதான்.... கரங்கள் இல்லா மனிதனைப் போல தட்டுத் தடுமாறி சுற்றும் பூமியில் எல்லா தப்புகளையும் இழைத்து விட்டு இயற்கையை குறை சொல்லும் மனிதனை சுயநலவாதி என்பதா? இல்லை எப்போதும் பொய்க்கும்.. இயற்கையின் பெயரால் இதை... இறைவனின் பிழை என்பதா? காற்றோடு கூடி எப்போது... மேகமாய் சூல் கொண்டு மழைக் குழந்தைகளை பிரசவித்து மண்ணுக்கு அனுப்பும் அந்த வானம்? கனவுகளோடு வழக்கம் போல... ஒரு கருவினைப் போல

கிராமத்தாய்ங்கதான் நாங்க...!

அட கூட்டம் கூட்டமா சுத்திகிட்டு இருந்த பயலுகப்பா நாங்க....! நீ என்ன நெனைச்சுகிட்டு இருக்க.. டவுனுக்கு வந்து டைய கட்டிகிட்டு டஸ்ஸு புஸ்ஸுனு இங்கிலீசு பேசுறோம்னு பாத்தியா ! அட இது எல்லாம் வேல வெட்டினு வந்ததுக்கு அப்புறமப்பா.. ...! ஊருக்கு பக்கட்டு வந்து பாரு....எப்டி இருக்கோம்னு.... காடு, கரை, வயலு, வாய்க்கா, சேறு, சகதி, வெயிலுன்னு ஒரு மார்க்கமா வாழ்ந்திருக்கோமப்பா....! பாட்டன் முப்பாட்டன்னு மீசைய முறுக்கிகிட்டு திரிஞ்ச பயலுக நாங்க...! அப்டிதானே இருதிருப்பாய்ங்க நெறய ஆளுக....! அட வாழ்க்கை மாத்திபுடிச்சப்பா அம்புட்டையும்....! இங்குட்டு பொழப்பு தலப்ப தேடி வந்தாலும் சாதி சனத்த விட்டுபுட்டு இருக்கமாட்டமப்பா நாங்க....! கோவிலு, திருவிழா, காதுகுத்து, கல்யாணம்னு ஒண்ணு மண்ணுமா சேராம இருக்க மாட்டமப்பா...! வெள்ளன நாங்க எந்திருக்கிறதுக்கு முன்னாடி ஆடு மாடுகளும், கோழி, சாவல்களும் எழுப்பி விட்டுறுமப்பா எங்கள...! கோழிபெட்டிய எங்கப்பத்தா தொறந்து விட்டா கெக்கரிச்சுகிட்டு போகும்யா அம்புட்டும்ம்ம் நாந்தேன் எப்பவோ கூவிட்டேனேன்னு விடிஞ்சது எனக்குதானே முதல்ல தெரியும்னு திமிரா போகும் பாரு அந்த கருத்த சாவ...!

அரிமா...!

எமது பிடரி முடி சிலிர்த்து பறக்கிறது காற்றில்...நிதானமான எமது நடையும் பார்வையின் தீர்க்கமும் அறியப்பெறுதல் சாமானியர்களுக்கு சாத்தியமற்றது. எமது கண்களின் தீர்க்கம் பற்றிய கணிப்புகளைப் பற்றி எமக்கு இரையாகிப் போன ஜீவன்களிடம் யாரும் விசாரித்திருக்க வாய்ப்பே இல்லை. ஆமாம் ஒற்றை பாய்ச்சலில் குரல்வளைகளில் கடிபட்டுப் போகும் உயிர்கள் என்ன ஊர்வலங்களா நடத்தும் எமது பற்களின் கூர்மை பற்றி..... பசிக்கும் போது மட்டுமே புசித்து பழக்கப்பட்டு இருக்கிறோம். எமது இறையையும், இரையையும் யாரும் முடிவு செய்வதில்லை எப்போதும். யாமே கூட தீர்மானிக்க முடியாத எமது தேவையை எப்போதும் எமது பசிதான் தீர்மானிக்கிறது. மெளனத்தில் கழிக்கும் காலங்களில் யாம் எம்மைச் சுற்றி ஊர்வன, பறப்பன தவழ்வன பற்றி எப்போதும் அக்கறைகள் கொள்வதில்லை. இரைப்பயின் இருக்கம் கொடுக்கும் சுகத்தில் எம்முள் சுற்றிப்பாயும் இரத்ததின் ஓட்டம் ஒரு நதியினைப் போல சலனமின்றி பரவி எமது புத்தியை எப்போதும் குளுமைப்படுத்தியே வைத்திருக்கிறது. ஒரு மோன நிலை, ஒரு ஞான நிலையில் எம்மையே மறந்து யாம் லயித்துக் கிடக்கும் பொழுதுகளில் உலத்தில் இருக்கும் எல்லா உயிர்களும் ஜீவித்திரு

நின்னையே ரதியென்று....!

தண்ணீர் குடத்தோடு நீ தலைகுனிந்துதான் நடக்கிறாய்.... இடுப்பில் இருக்கும்.. குடத்துக்கு என்னவாம் கிண்டல் என்னை பார்த்து...? தளும்பி தளும்பி சிரிக்கிறது! *** இல்லை என்றேன்.... இருக்கிறது என்றாய்! இருக்கிறது என்றேன் இல்லை என்றாய்...! இருந்தும் இல்லாமல் இருக்கும் காதலை எப்படித்தான் கண்டு பிடிப்பதாம்.... செல்லமாய் நீ சிணுங்கினாய்.. கம்பீரமாய் வெளிப்பட்டு சிரித்தது ஒரு ஒய்யாரக்காதல்! *** ஒரு மரம் துளிர்க்கும் தருணம்; சாரலாய் முகத்தில் மழைத்துளிகள் தவழும் பொழுதுகள்; ஒரு ஊதக்காற்று உடல் ஊடுருவி உள்ளம் கலைத்து செல்லும் அந்த அற்புதகணம்; ஒரு கவிதை எழுதி முடித்து நிறைவாய் சாய்ந்து நெஞ்சு நிறையும் நிமிடம்; யாருமே இல்லாமல் அவளோடு இருக்கும் மெளனம்; இன்ன பிற எல்லாம் சேர்ந்ததுதான் காதலா? *** கனவுகளில் வடித்த ஒரு ஓவியத்தை எப்படி உனக்கு பரிசளிப்பேன்? என் கவிதைகளில் ஒளிந்திருக்கும் உயிரை எப்படி நான் அசையவைப்பேன்? சொல்லாமல் தவிக்கும் என் காதலின் அவஸ்தைகள் எல்லாம் ஒரு மழையில் நடுங்கும் குருவியாய் நடுங்கிக் கொண்டிருப்பதை எப்படி உனக்கு உணரவைப்பேன்...? எங்கேயோ இருக்கும் உன்னை துரத்தி துரத்தி சுற்றி கொண்டிருக்கு

காங்கிரசை துரத்துவோம்...!#DefeatCongress

நாட்டின் சுதந்திரத்துக்கு போராடினோம் என்ற முத்திரையை இன்னும் முதுகில் சுமந்து கொண்டு, தேசியம் என்னும் பசுத்தோல் போர்த்திய புலியாய் இந்திய தேசத்தில் தன் ஏகாதிபத்திய கால்களை வலுவாக பதித்துள்ள காங்கிரஸ் என்னும் அரக்கனை இந்த தேர்தலில் தமிழகத்தில் தோற்கடித்தால் தான் ஒரு தொன்மையான இனத்தின் பலம் என்ன என்று சர்வதேச சமுதாயத்திற்கு நாம் அறிவிக்க முடியும். வரலாற்றின் பக்கங்களில் தமிழன் என்ற ஓர் இனமே இருக்காது என்ற அளவிற்கு வீழ்ச்சிகள் வந்த போதிலெல்லாம் வீறு கொண்டு எழுந்திருக்கிறது தமிழினம் . மதம், மொழி, இனம் என்று எல்லா வகையான சவால்களையும் நாம் காலம் காலமாக எதிர்கொண்டு வந்திருக்கிறோம். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை அடித்து விரட்டிய இந்திய சுதந்திரப்போரின் வீர வரலாற்றின் பக்கங்களில் எடுத்தியம்பி இருக்கும் தமிழர்களின் பங்கு என்னவோ மிகக்குறைவுதான்..ஆனால் எதார்த்தத்தில் அதிகபட்ச தமிழர்கள் தம்மை சுதந்திர போராட்டத்தில் ஈடுபடுத்தி தமது இன்னுயிரை கொடுத்த செயலை எல்லாம் சிறு துரும்பாக மறைத்துப் போட்டு விட்டதும் ஒரு அரசியல் சூழ்ச்சியே....! ' வரி என்று வாய் திறந்தால் அது கிழிக்கப்படும் ' என்று அறைகூவல் வி

தி.மு.க. இல்லேன்னா அதி.மு.க அம்புட்டுதானே?

ஒரு காலத்தில் செம்மையாக வாழ்ந்திருக்கிறோம் தோழர்காள்.....! மன்னர்களின் ஆட்சியில் மாண்பும் வீரமும், ஈரமும், கொடையும், நேர்மையும், ஈகையும் கொண்டு, வந்தாரை எல்லாம் வரவேற்று உணவளித்து....யாரேனும் விருந்தினர் வராவிட்டால் சோர்ந்து போயும் இருக்கிறோம். காடு கழனிகளில் ஆடல் பாடலுடன் உழைத்திருக்கிறோம். பெண்டு பிள்ளைகளுடன் ஓடி ஆடி களித்திருக்கிறோம். எதிரி என்றால், போரென்றால் வேலெடுத்து.... வெற்று மார்போடு ஓடிப்போய் எம்மையும் எம் பெண்டுகளையும், ஆ நிரைகளையும் காக்க போர்ப்பரணி பூண்டிருக்கிறோம். உலகம் ஆ.. ஊ.. என்று காட்டுமிராண்டியாய் கத்திக் கொண்டிருந்த போது முத்தமிழில் கவி செய்தோம், கதைசெய்தோம் நாடகம் செய்தோம்.... கனக விசயரின் முடித்தலையை நெறித்து கல் கொண்டு வந்து கண்ணகிக்கு கோவில் செய்தோம்; மலைகளே இல்லாத தேசத்தில் முழுக்க முழுக்க கரும் கற்கள் கொண்டு கோவில் செய்தோம்.... கொங்குதேர் வாழ்க்கை என்று இறைவனே வந்து பாடி நெற்றிக்கண் திறந்து எரிக்கும் தருவாய்க்கு முன்பும் குற்றம் குற்றமே என்று சூளுரைத்திருக்கிறோம்....! எப்படி மாறிப்போனது எமது வாழ்க்கை.....! எமது வாழ்வின் பொக்கிசம் எல்லாம் களைந்து கைக்கூலிகளாய

சூரியன்....!

பாலகுமாரனை புரட்டிக் கொண்டிருக்கும் போதே ஏதேதோ மாற்றங்கள் உள்ளுக்குள் எனக்கு நடைபெற்றது மறுக்கமுடியாத உண்மை. பலருக்கு அவரின் சமூக நாவல்களில் நாட்டம் அதிகமென்றால் நான் பாலகுமாரனை இறுக்கமாக பற்றிக் கொள்ள தொடங்கியது அவரின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு பிறகுதான். கல்லூரி காலங்களில் உடன் படிக்கும் பெண் தோழி ஒருவர் கொடுத்து இதையெல்லாம் படிக்க மாட்டியா நீன்னு கேட்டது கூட முக்கியமாக எனக்கு படவில்லை அந்த பெண் யாரோடும் பேசமாட்டாளா என்று கல்லூரியே சீப்பை எடுத்து சீவிக்கொண்டு அவள் பின்னால் அலைந்து கொண்டிருந்ததுதான் எனக்கு முக்கியமாகப்பட்டது. புத்தகத்தை கையில் வாங்கிக்கொண்டு பாலாவின் புத்தகம் அது என்று சொல்வதை விட்டு விட்டு மாலினி கொடுத்தது அது என்ற பெருமையை என் தலையில் ஏற்றிக் கொண்டு கிட்டத்தட்ட எல்லோரிடமும் சொல்லி முடித்துவிட்டேன். புத்தகத்தை புரட்டவே இல்லை ஆனால் அன்றிலிருந்து பாலாவை படிக்கவேண்டும் என்ற ஒரு ஆவல் என்னுள் கிளைத்து விட்டிருந்தது. இது நடந்தது எனது கல்லூரி முதாலாம் ஆண்டின் இரண்டாம் செமஸ்டரில் அதற்கு முன்னால் தேவிபாலாவும், ராஜேஷ்குமாரும், பட்டுக்கோட்டை பிரபாகரும், சுபாவும் என்னை ஒரு ஏதேச்சதிக

சவால்....!

மெளனமாக இருந்து விடல் சாலச் சிறந்தது என்று சமீபத்திய நாட்களில் கிடைக்கும் அனுபவத்தின் சாரங்கள் என்னுள்ளே ஏதேதோ எண்ணங்களை கிளைக்கச் செய்து கொண்டே இருக்கின்றன. சராசரியான ஒரு வாழ்க்கை ஓட்டத்தின் அங்கமாயிருக்கும் நாம் தெரிந்தோ தெரியாமலோ ஏதோ ஒன்றை தேடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு செயலும் அதன் விளைவுகளும் நமக்கு திருப்தி கொடுப்பதே இல்லை. கொடுக்கிறது என்றூ வாதம் புரிய விரும்புபவர்களுக்கு இந்த இடத்திலேயே பாய் சொல்லிக் கொள்கிறேன். காலம் முழுதும் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்த என் நெருங்கிய உறவினருக்கு இரண்டு மகள்கள். வாழும் வயதில் வாழ்க்கை துரத்த குடும்பத்தை விட்டு விட்டு வெளிநாட்டில் இருந்து உழைத்த அந்த உறவு 24 மாதங்களுக்கு ஒரு முறை இந்தியா வருவதும்.. பின் செல்வது இப்படியான ஒரு 25 வருட வாழ்க்கையிலி ஈட்டி முடித்தது இரண்டு மகள்களின் கல்வியும் அவர்களின் திருமணமும் சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் அருகே உள்ள காமராஜபுரத்தில் ஒரு இரண்டு பெட்ரூம் வீடும் என தனது ஓட்டத்தை முடித்த போது அவரின் வயது 60. ஒரு திருமண விழாவில் சந்தித்த என்னை வீட்டுக்கு வரச்சொல்லி வற்புறுத்த... தாம்பரம் வரை ட்ரெய்னில் போய

தவம்....!

உன்னை தேடும் வேளைகளில்... வழி நெடுகிலும் பரவவிட்ட என் இதயத்தின் சப்தமெல்லாம் மெளனமாய் உன் பெயர் உச்சரிக்கும் பொழுதுகளிலாவது நினைக்க மாட்டாயா என்னை? சராசரியான உன் பார்வை... காதலாய் எனக்குள் பரிணமித்து உற்பத்தி செய்த எழுத்துக்களை சேர்த்துப் பார்க்கும்...பொழுதுகளில்... வந்து விழும் வரி வடிவத்தில்... நடைபயிலும் உன் நளினத்தில் எப்போதும் வார்த்தைகள்... பிடிப்பட்டதில்லை எனக்கு! எழுதிய கவிதைகளெல்லாம் நிராகரிக்கப்படும் பொழுதுகளில்... மூர்ச்சையான என் காதலும்.. மூர்க்கமான உன் நினைவுகளும் ஒன்று கூடி என்னை... கொல்லும் பொழுதுகளிலாவது... என் நினைவுகளை பரப்புமா உன் மூளை? உன் விழிகளுக்குள்... தடுக்கி விழுந்த நானும்.... உனக்காக காத்திருக்கும் என் கவிதைகளும், காத்திருப்புகளில்... கழித்துக் கொண்டிருக்கும்.. நாட்களின் விமோசனங்களை... உன் விழி திறந்து விடுவிக்கும்... காலம்தான் எப்போது? ஒரு காதலைச் சொல்ல... எத்தனை ஜென்மங்களாய் உன்னைத் தொடருவது... ஒவ்வொரு முறையும் ... நிழலாய் என்னருகில் இருக்கிறாய்... அனலாய் என்னை தகிக்கிறாய்.. மெளனமாய்...என்னைக் க

மாத்திப்புடுமா ...உங்க தேர்தலு...?

தேர்தல்ல தொகுதி ஒதுக்கீட்டுக்கே இம்புட்டு குழப்பம் பண்றீகளே..? நீங்களுவோ ஒண்ணா சேந்து குத்தாட்டம் போட்டு செயிச்சு நாட்ட வெளங்க வைக்க போறீகளா? கதர் சட்டை போட்ட சோனியா காங்கிரசுக்கு எம்புட்டு ஆசை ....ஆத்தாடி? தொகுதிய மட்டும் வக்கனைய வாங்கி செயிச்சு என்னாத்த பண்ணி கிழிக்கப்போற ஆயா நீயி...????? ரோட்ல எறங்கி எப்பய்யா போராடீ இருக்கு காங்கிரசு? பாத்தியளா...பாத்தியளா.. தேவையில்லாம சொதந்திரம் வாங்கி கொடுத்தானுவோன்னு சொல்லுறீய? இவனுவளா வாங்கி கொடுத்தானுவ.... பெரிசா தேசிய கொடி கலருக்கு ஒரு கட்சிக்கொடிய வச்சிகிட்டு இவனுவோ அடிக்கிற லூட்டி.....நான் சொல்ல மாட்டேன்.. உங்களுவளுக்கே தெரியும். ஏஞ்சாமி இவனுவொளுக்கு வேற கலர்ல எதுனாச்சும் கொடிய மாத்திவுடுங்களேன்....???? அது மட்டும் இல்ல...காங்கிரசுங்கறது சொதந்திரத்துக்கு போராடின கச்சி, அந்த பேர படுவா பயலுவளா நீங்க இனிமே வைக்கப்புடாது வேற என்னாமாச்சும் பேர வச்சி செயிச்சுக்கோங்கடா பயலுவலா? பொறவு...மாகாத்மா காந்தின்றவரு நம்ம தேசப்பிதா அல்லாருக்கும் பொதுவான ஆளு அவரு போட்டாவ போட்டு ஓட்டுக் கேக்கபடாது...இப்படி ஏதாச்சும் ஒரு சட்ட திட்டத்த

ஜப்பானிய அநீதி.....ஒரு கவிதாஞ்சலி!

ஒரு ஆக்ரோஷ அரக்கனாய் கரையைச் சுவைக்க கால் பதித்தாயா கடலே? ஆடும் மனிதர்களுக்குப்... பாடம் புகட்ட ஆடிக்... களித்தாயா நிலமே...? என்ன செய்தோம் என்றுணரும் தருணம் முன்பே... நிலத்தை அள்ளிக் குடித்துவிட்டு உயிர்களை பெயர்த்தெடுக்கும் உன் அவசரத்தின் மீதான என் கோபத்தை எங்கே அடுக்குவேன்? எத்தனை உயிர்கள் போனது...? கணக்கு வழக்காய் கழித்து அந்த நினைவுகளை மழித்துக் கொள்ளும் காலத்திற்கு தெரியுமா எத்தனை கனவுகளை அழித்தோமென்று? தனிமையில் துளிர்க்கும்... என் கண்ணீர்த் துளிகளின் வேர்களின் மூலம் அறிந்த அண்டமே.... மூலமில்லா பிண்டம் தாங்கிய ஆதியே எல்லாம் எடுத்துக் கொண்டு எம் பூமியில் உயிர்களுக்கான சந்தோசத்தையும் சாந்தியையும் இறைத்துப் போடு; இல்லையேல் மொத்தமாய் பூமிப் பந்தை அகண்டவெளியில் இருந்து.. அறுத்துப் போடு....! இன்னுமொரு முறை கொந்தளிக்காதே கடலே... ஆட எத்தனிக்காதே நிலமே... உன்னை கட்டுக்குள் கொண்டு வர யுத்திகள் அற்றுப் போயிருக்கிறோம்... கால்கள் இருந்தால் கொடு பிடித்து கண்ணீரால் கழுவுகிறோம்......! ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் உயிரிழந்த அத்துனை ஆத்மாக்களும் சாந்தியடைய எல்லாம் வல்ல ஏக இறையிடம் எனது

எனது தேசத்தின் வேர்கள்.....

ரொம்ப நாளைக்கு முன்னால ஒரு படம் போட்டேன், அதோட இறுதி பாகத்தை எழுதிடலாம்னு நினைச்சப்ப மனசுக்குள்ள ஒரு விசயம் இல்லை..இல்லை இனிமே அது தேவையில்லைன்னு சொன்னிச்சு... சரி போகட்டும்னு விட்டுட்டு அடுத்தவேளைய பாத்துட்டு போய்ட்டேன் ஆனா காலம் என்னை இழுத்து பிடித்து நிறுத்தி...நீ எழுதிதான் ஆகணும்னு சொல்லும் போது........அந்த பிரமாண்டத்துக்கு முன்னால நான் என்னதான் பண்றது....? ட்ரெய்லர் I ட்ரெய்லர் II ட்ரெய்லர் III ட்ரெய்லர் IV ட்ரெய்லர் V ட்ரெய்லர் VI ட்ரெய்லர் VII ட்ரெய்லர் VIII ட்ரெய்லர் VIIIB படம் I படத்தின் தொடர்ச்சி. ... சமீபத்தில் அலுவலக பணி நிமித்தமாக ஒரு நிறுவனத்தின் மானேஜிங் டைரக்டரை சந்திக்க சென்றிருந்தேன்...! தொலைபேசியில் பேசும் போதே கணித்து விட்டேன்.. அந்த தோலின் நிறம் வெள்ளை என்று அது அவரின் மொழிப் பிரயோகத்தின் மூலமாக கணிக்கப்படவில்லை மாறாக பேசிய அவர் பேசிய தொனியின் வாயிலாக உணர்ந்தேன்.... அவரின் அலுவலகத்தில் அவரை சந்திக்க நான் உறுதி செய்த நேரம் 10:30 காலை. 10.25க்கு அந்த அலுவலக கார் பார்க்கிங்கில் எனது காரை நிறுத்தி விட்டு நான் அந்த அலுவலக வரவேற்பறைக்குள் நுழைந்த போது மணி 10:27. என்னுடை

காதலா...?

உன் நினைவுகள் விழுங்கிக் கொள்கின்றன.. என் இரவு உறக்கங்களை... எப்போதாவது கண்ணயரும்.. சில நிமிடங்களிலும்... கனவுகளில் ஆக்கிரமிக்கும்.. உன்னை என்னடி செய்வது? *** மழைபெய்யும் பின்னிரவு.. உறக்கம் கொடுக்க முடியா.. தோல்வியில் கிளைத்த.. வெட்கத்தில் என் படுக்கை....! இறுமாப்புடன்...எக்காளமாய் சிரிக்கிறது... அடாவடியாய் என்னை ஆக்கிரமித்திருக்கும்... உன் நினைவுகள்!!! *** எங்கிருந்தோ காற்றில்.... தவழ்ந்து வந்த புல்லாங்குழலின் இசை... கூடவே கூட்டிச் சென்று விட்டது... என் மனதையும்....! *** பாலையின் மழையாய் நீ இல்லாத பொழுதுகளில் எனக்குள் காதலை...பெய்விக்கின்றன உன் நினைவு மேகங்கள்....! *** கண்களால் கேள்வி கேட்கிறாய்.. மெளனத்தால் பதில் சொல்கிறாய் மெலிதான புன்னகை வீசி என் உயிர் கவர்ந்து செல்கிறாய் உன்னையே என்னை சுற்ற வைத்து ஓரக்கண்ணால் பார்த்து ஒய்யாரமாய் நடக்கிறாய்..... கையெழுத்தே போடத்தெரியாதவன் இப்போது கவிதை எழுதுகிறேன்... மொத்தமாய் சொல்லடி.... என்னை என்ன செய்வதாய் உத்தேசம்? தேவா. S

தமிழன் குடி....குன்னக்குடி தானா?

தமிழ் நாட்டு அரசியல் ஒரு பக்கம் ஒரு பக்கம் சூடு பிடிக்குதுன்னா.. பதிவுலக அரசியல் மறுபக்கம் அனலடிக்குது...! ஆமாம் இப்ப எல்லாம் பதிவு எழுதுறதும் அதை வெளியிடுறதுக்கும் மூளை வேணுமோ இல்லையோ டெக்னிக் வேணும் போல இருக்கு. சரி...சரி.. எந்தப்பக்கம் இப்ப பாயப்போறேன்னு தானே கேக்குறீக.... பதிவுலகம் சாரா...வாசகர்கள் மீதுதான்..! ஊரான் வீட்டுப் பிள்ளையா நினைச்சுக்காதீங்க .. உங்க வீட்டுப் பிள்ளையா நினைச்சு (வடிவேலு ஸ்டைல்...) நான் சொல்றத கொஞ்சம் கவனமா கேளுங்க...! ஏன் உங்க ரசனை இப்படி போயிடுச்சு....மக்களே? எப்ப பாத்தாலும் பொழுது போக்குறதுலயே குறியா இருக்கீகளே... எப்ப ஒரு விசயத்தை முழுசா புரிஞ்சு விளங்கிக்க போறீக? " இந்த பக்கம் போகாதன்னு போர்டு போட்டு இருப்பாங்கே........." அங்குட்டுதான் பூரா சனமும் ஓடி ஓடி பாக்கும்...! பாம்பு வித்தையும், குறளி வித்தையும், பாத்து பாத்து உங்களுக்கு சலிக்கவே இல்லையா? ஆபாசத்தையும் அரசியலையும் ரெண்டு கண்ணா நினைச்சு நீங்க காட்ற அபிமானத்த பாத்த.. இன்னும் நூறு வருசம் ஆனாலும், திருந்தித் தொலையப் போறது இல்லனு தெரியுது. இரண்டு திராவிட கட்சிக்கு நடுவுலதானே தமிழனோட மொத்த பொ