Skip to main content

Posts

Showing posts from May, 2011

சப்தமில்லா ஓசைகள்..!

வரம் விழியசைப்பில் ஒற்றை தலையசைப்பில் உதட்டோர புன்னகையில் ஆழமான ஒரு பார்வையில் சொல்லிதான் விடேன் உன் காதலை! *** தவம் மோனலிசாவிற்கு புன்னகையைப் பரிசளித்த லியனர்டோவின் தூரிகை உன்னையொரு முறை ஓவியமாய் தீட்டி விட தவம் கிடக்கிறதாம்...! *** விடியல் நீ சோம்பல் முறித்து எழும்போதுதான் விழித்துக் கொள்கிறது என் நீண்ட இரவுகளும்..! *** பலம் மெளனித்த நிமிடம் முதல் உணர்கிறேன் நீ சப்தமானவள் என்று....! *** தோல்வி வெற்று மையை காகிதத்தில் பரவவிட்டு வார்த்தைகள் ஓடி ஒளிந்து கொள்கின்றன உன் நினைவுகளுக்குப் பின்னால்! *** வெறுமை எனக்கு பிடித்ததெல்லாம் நீ சொன்னாய்... உனக்கு பிடித்ததெல்லாம் நான் சொன்னேன்... பரிமாற முடியாமல் நீ சுற்றிப் பரவவிட்ட காதலை பற்றிக் கொள்ள முடியாமல் பரவிக் கிடக்கிறேன் நிலவின் வெளிச்சம் போல....! தேவா. S

நான், அவள், மற்றும் மழை....!

பார்வைகளால் நீயும், நானும் மின்சாரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை. உன்னிடம் நானும் என்னிடம் நீயும் வழக்கமான மொழிகளில் வார்த்தைகளால் விளையாடிக் கொள்ளவும் இல்லை. தேவைகளின் பொருட்டும் எதுவும் நம்மை இணைக்கவில்லை. நீ இருக்கிறாய். நானும் இருக்கிறேன். இருத்தலை ரசிக்கும் ஒரு கம்பீரத்துக்கு காதல் என்று பெயர் கொடுக்க எனக்கு விருப்பமில்லாதது உனக்கு விருப்பமாயிருந்தது என்றாய்..... ஒரு மழை வர எத்தனித்துக் கொண்டிருந்த மதியத்துக்கும் மாலைக்குமான இடைவெளியில் கருமையான மேகங்களின் அலைதலை இருவருமே உள் வாங்கி நடந்து கொண்டிருந்தோம். இருவருக்குமான இடைவெளிகளில் நமது நெருக்கம் நிரம்பிக் கிடந்தது. மழையை நாமிருவருமே எதிர்பார்த்தவாறு நடந்து கொண்டிருந்த போது உனக்கு மழை பிடிக்குமா? என்று கேட்டாய். கேள்விக்கான பதிலை நான் பகிரும் முன் நீயே சொல்லி விட்டாய் யாருக்குத்தான் மழை பிடிக்காது? என்று...ஆனால் அப்போது அடித்த காற்றில் பறந்த உன் சுடிதாரின் துப்பட்டா மீது நான் மையல் கொண்டிருந்து உனக்கு தெரியாது... காற்றோடு கூடிக் கூடி உயிர் பெற்று விட்டாயா ஒற்றை துப்பட்டாவே? இல்லை..இல்லை.... அவள் உடலோடு ஒட்டிக் கிடந்த உன்னை காற்று கவர

எனக்கு ரஜினி பிடிக்கும்....!

எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு ரஜினி பிடிக்கும். எனக்கு மட்டுமல்ல என்னைப் போல கோடாணு கோடி பேருக்குப் பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்கும் நாக்குகளுக்கு வார்த்தைகளை கொடுத்த மூளைகள் எல்லாம் மனிதர்கள் ஜனித்த பிண்டங்களுக்கு உரியதா? இல்லை இரும்பில் வார்த்தெடுத்து இயக்கங்கள் கொடுக்கப்பட்டதா? ஒரு மனிதனைப் பிடிக்க ஓராயிரம் காரணம் தேவையில்லை. இது மனம் சம்பந்தப்பட்ட விசயம். அறிவுகளின் செழுமையில் சில வக்கிர குரல்கள் தன்னின் சப்தங்களை உயர்த்தி ரஜினியை ஏன் இப்படி சீராட்டுகிறார்கள்? தமிழகம் ஏன் தடம் புரண்டு கொண்டு இருக்கிறது? அவர் ஒரு சுயநலவாதி, எந்த போராட்டத்தில் ஈடு பட்டார்? அவரின் தாடி ஏன் நரைத்திருக்கிறது, தலையில் முடியற்று விக் வைத்து நடிக்கிறார் என்றெல்லாம் சொல்லி தம்மின் கேவலமான மனோநிலைகளை வெளிப்படுத்தி தாமெல்லாம் பைத்தியக்காரர்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அடக் கேவலங்களே! எமக்கு ரஜினையைப் பிடிப்பதில் உமக்கு என்ன சிரமம்? முவ்வேளையும் நீவீர் உண்ணும் சோற்றுப் பருக்கைகளை வயிற்றுக்குச் செல்ல விடாமலா நாங்கள் தடுத்தோம். ஒரு மனிதன் இன்னொரு மனிதனை ந

சொல்லாமல்...!

உணர்வுகளை காதலாக்கி என்னின் ஒவ்வொரு நிமிடத்துக்குள்ளும் பதித்து விட்டு உன்னை தொலைத்துக் கொள்கிறாய்... நீ! என் உதடுகளுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் வார்த்தைகளை உன்னிடம் நேரே சொல்லும் திரணியற்று கவிதைகளில் கடை விரிக்கிறேன் நான்! சப்தங்களில் தொலையும் காதல் மெளனத்தில் வாழும் என்று என்றோ நீ சொன்னது இன்று எப்போதும் எனக்குள் சப்தமாய் ஒலித்துக் கொண்டிருக்கிறது! ஒரு மொட்டை மாடி நிலவை தனியே நான் ரசித்த பொழுதில் ஆழமாய் வந்து உரசி நின்ற உன் நினைவுகளை விட்டுக் கூட நான் தள்ளிதான் நின்றேன்! காணப்படாமலேயே இருக்கும் ஒரு அழகிய கனவாய் என் நினைவுகளில் சிக்கிக் கிடக்கும் ஒரு அழகிய காதலை வார்த்தைகளுக்குள் கொண்டு வரும் என் முயற்சிகள் எப்போதும் தோல்வியைத் தான் தழுவுகின்றன! ஆழமாய் உன் விழிகள் பார்த்து மெளனத்தால் கதைகள் பகின்று மனதால் கரங்கள் பற்றி தூர நிற்கும் இடைவெளிகளிலேயே எப்போதும் சிறகடிக்கும் உன் மீதான உற்சாக காதலை சொன்னால்தான் என்ன....? சொல்லா விட்டால் தான் என்ன? தேவா. S

அதிகப் பிரசங்கி...!

சிரிச்சுகிட்டே இருக்கணும் எப்போ தெரியுமா ...? எப்போ நிறைய சேலஞ்சும் ரிஸ்க்கும் லைஃப்ல வருதோ அப்போ ....!!! எப்பவுமே ஒரு வேலைய திரும்பி திரும்பி செய்றதுல எனக்கு எல்லாம் எப்பவுமே ஒத்து வராது . தினம் தினம் புது புது விசயம் புது புது ரிஸ்க் .... தலைக்கு நேரே பறந்து கத்தி வர்ற வரைக்கும் நான் பாத்துக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டுதான் இருப்பேன் .. ஆனா கத்தி வரதை கவனிக்காம இருக்க மாட்டேன் . வரட்டும் பாத்துக்கலாம் ... கத்திய வீசுனவனுக்கு என்ன பாத்தா அடப் பைத்தியமே இவ்ளோ தூரம் முன்னாடியே பாத்துட்டியே இன்னும் ஏன் கண்டுக்காம இருக்கன்னு நினைப்பு வரும் ... எனக்குத் தேவை ஒரு 2 செகண்ட் அதுல இருந்து எஸ்கேப் ஆக பட் அந்த ரெண்டு செகண்ட் எப்போன்னு நான் முடிவு பண்ற வேகம் இருக்கு பாத்தீங்கன்னா திட்டமிடாம ச்ச்ச்சுமா டக்கு டக்குனு நடந்துடும் . கத்திய எப்பவுமே வீசுறது யாருன்னு கேக்குறீங்களா ?????? மனுசன் எல்லாம் ஏன் பாஸ் நம்ம மேல கத்திய வீசப் போறாங்க .... நம்ம மேல கத்தி வீசுற ஒரே ஆளு வாழ்க்கைதான் ...! ஒரு சப்தமில்லா

கல்லாதது உலகளவு...!

நிலவின் அழகை ரசிப்பதில் இருக்கும் சுகம் ஆராய்வதில் கிடைக்குமா? மூலக்கூறுகளும், சமன்பாடுகளும், விதிமுறைகளும் கற்றிருந்தாலும் அதை மறத்தல்தான் சுகம். சைவ சித்தாந்தத்தை கைக் கொண்டு சிவநெறியில் வாழ்ந்து சூன்யமே சத்தியத்தின் மூலம் என்று தெளிந்த சிவவாக்கிய சித்தர் பின்னாளில் வைணவத்தை தழுவி இறைவனுக்கு உருவ வழிபாடு செய்து திருமழிசை ஆழ்வாராக மாறினார் என்று சொல்வார்கள். வாழ்க்கையில் தன்னின் சுயத்தை காண விரும்பும் ஒருவனுக்கு எதிரே ஒரு ஆப்ஜக்ட் தேவைப்படுகிறது. மனோபலம் உள்ளவர்கள் தன்னை உள்நோக்கும் சக்தி வந்தவுடன், தன் உடலை எது இயக்குகிறதோ அதுவே இந்த பிரபஞ்சத்தையும் இயக்குகிறது என்ற உண்மையை உணர்ந்தவர்கள் உருவங்களை கலைந்து விட்டு வெளியே வந்து விடுகிறார்கள் ஆனால் அது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் இல்லை. கடவுள் இல்லை என்று அடித்து மறுப்பவர்களில் எல்லோருமே மன திடமுடன் சொல்கிறார்கள் என்று சொல்ல முடியாது. இல்லை...இல்லை என்று சொல்லும் போது இருக்குமோ என்ற எண்ணமும் கூடவே தொடர்வது மறுக்க முடியாதது. இப்படி சொல்வதாலேயே மனதிடன் இல்லாதவர்கள் இல்லையென்றே சொல்லவும் முடியாது... மனதிடன் - அகங்காரங்கள் அற்றது, நிலையாம

ரஜினி என்னும் மந்திரம்...!

இதோ...இன்றோ, நாளையோ நீ வந்து விடுவாய் என்று நானும் கவனத்தை வேறெங்கோ செலுத்திக் கொண்டிருக்கிறேன். நாள் தோறும் என் கவனத்தை மீறிய செய்திகள் காதில் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. நான் கேட்க விரும்பவில்லை. எனக்கு எதுவும் வேண்டாம் என்று மெளனமாய் நான் கடக்க கடக்க மீண்டும் மீண்டும் காலம் செய்தியாய் என் செவிகளுக்குள் நான் கேட்க விரும்பா செய்தியை ஏன் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்ற எரிச்சல் வேறு... நான் எனக்குள்ளே அழுந்தி, அழுந்தி நான் நேசித்த, நேசிக்கும் ஒரு மனிதனின் உடல் நலன் செம்மையாக வேண்டும் என்று நாளும் பிராத்தனைகளை செய்து கொண்டிருக்கிறேன். இன்று மதியம் கூட ஏதோ சிந்தனையில் இணையத்தினை துருவிக் கொண்டிருந்தேன். உன்னைப் பற்றி ஏதேனும் செய்திகள் இருக்கின்றனவா என்று....! மருத்துவமனையில் நீ இருக்கும் ஒரு புகைப்படம் பார்த்தால் கூட என் மனது திருப்திப் பட்டுப்போகும் என்று..... என் விழிகளுக்கு வந்து கிடைத்த உன்னின் ஒரு புகைப்படத்தைப் பார்த்து நான் கண் கலங்கியது உனக்குத் தெரியாது. எனக்கும், எல்லாவற்றையும் இயக்கும் ஒரு பெருஞ்சக்திக்கும் மட்டுமே தெரியும். முடியாத போதும் நீ அழகுதான்!!!! நிற்க முடியாம

ஐ லவ் யூ....!

" ஐ லவ் யூ டா............ஐ லவ் யூ சோ மச் டா.........; உன்ன எனக்கு ரொம்பப் பிடிக்குது ' சொல்லி விட்டு அவள் சென்று சில மணித்துளிகளே ஆகின்றன. ஜிவ்வென்று எனைச் சுற்றி அடித்த காற்றின் குளுமை கூடிப் போனது. மேகங்கள் எல்லாம் அங்கும் இங்கும் அவசரமாய் அலைந்து எனக்கான ஒரு மழையைப் பெய்து விடவா என்று சில சில கருமையான மேகங்களின் மூலம் கன்ணசைத்து கேட்டது. கண்கள் சொருக நா வரள ஜெயித்து விட்ட என் காதலை ஜெயித்தது என்று எப்படி சொல்வது அது நிகழ்ந்து விட்டது என்றுதான் சொல்வேன்.... என் உலகத்திற்கு யாரோ வர்ணங்கள் பூசியிருக்க வேண்டும் அத்தனை கண்ணைப் பறிக்கும் வர்ணங்கள். என் தோட்டத்தில் பூத்திருக்கும் பூக்களில் ஒன்று கூட இந்த பூமிக்கு சொந்தமானது அல்ல என்று நான் சொல்லும் போதே என்னை நகைப்போடு நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா? ஆமாம் நம்ப மாட்டீர்கள் உங்களுக்குத் தெரிந்தது எல்லாம் வர்ணக்கூட்டின் ஏழு நிறங்கள் மட்டுமே! ஏழைத் தாண்டின வர்ணம் இல்லை என்பவர்கள் எல்லாம் ஏழைகள்தான்...!!! என் வீட்டைச் சுற்றிலும் பறக்கும் பட்டாம் பூச்சிகள் எல்லாம் என்னிடம் ஏதேதோ பேசுகின்றன...மெல்ல காதோரம் வந்து அவளுக்காக நான் வடிக்கவேண

ஏதேனும் ஒரு ஜென்மத்தில்.....!

கடக்க முடியாத தூரங்களை உடைத்துப் போடும் முயற்சிகளில் தெறித்து விழும் கண்ணீர் துளிகள் உன்னை தேடியே வருகின்றன. கனவுகளை கொடுத்தவள் என்னை நினைவற்றவனாய் போவதற்கு சபித்து விட்டு பொய்யாய் தொலைகிறேன் என்றாள்... மெய்யாய் என்னைச் சுற்றிக் கொண்டு! மெளனத்தால் மெளனத்தை மோதவிட்டு நிசப்தங்களில் கலவரத்தை பரவ விட்டு நெஞ்சுக்குள் அமிலமாய் சுரக்கிறது கடந்த கால நினைவுகளில் கரைந்து கிடக்கும் ஒரு தோற்றுப் போன காதல்! நமது நேசிப்புகளை அழித்துப் போட்ட சூழலை எரித்துப் போட பதத்துப் போன என் உணர்வுகளை உரசி உரசி உயிரைக் கரைக்கும் முயற்சிகளில் கழிந்து கொண்டிருக்கிறது சம காலப் பொழுதுகள்! அகண்ட வெளியின் நாக்குகளில் பரவிக் கிடக்கும் மதுரசமென வழிந்து பெருகும் காதலை ஏடன் தோட்டத்து ஆப்பிளென நான் சுவைக்க நினைக்கையில் ஒரு சாத்தானாய் காலம் உடைகளை பிடுங்கிய நம் பிரிவின் வெற்றியில் நகைத்து நகர்கிறது! ஒரு தண்ணீரில்லா கிணறின் விளிம்பு வரை பயணித்த ஒரு சொறித்தவளையின் தோல்வி போல உன்னை மறக்க முயலும் விளிம்புகளில் சறுக்கி சறுக்கி விழுகிறேன் உன் நினைவுக் கேணிக்குள்! வாராய் என்றறிந்தும்; உனை காணேன் என்றுணர்ந்தும்; ஐந்தெழுத்து மந்திரத