Skip to main content

Posts

Showing posts from June, 2011

உடையாரின் அதிர்வலைகள்...!

எழுதிக் கொண்டே இருக்கையில் வந்து விழும் வார்த்தைகளோடு தொடர்பற்று எங்கிருந்தோ வரும் வீச்ச்சினை வாங்கி வாங்கி இறைத்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று அவை அழிந்து போயிருக்கிறதா உங்களுக்கு...? முழுப்பக்கம் எழுதி முடித்து விட்டு விசைப்பலகையின் ஏதோ ஒரு சுட்டியை தவறாக தட்ட இணையத்தில் இருந்த எல்லாம் போயே போய் விட்டது. போனால் போனதுதான் அதை திரும்ப எடுக்க முடியாது.....என்ற நிலையில் சிறு கோபமும் இயலாமையும் வரத்தானே செய்கின்றன. திட்டங்கள் மனித மனங்களுக்குச் சொந்தமனவை தன்னிச்சையாக கிளர்ந்தெழும் ஒரு இசையும், கவிதையும், கதையும், ஒரு கருவிக்கான செயல் வடிவங்களும் பிரபஞ்சத்திற்கு சொந்தமானவை. போனால் போனதுதான். அதே போல திரும்ப கிடைக்காமல் போகலாம் இல்லை அதை விட தெளிவான ஒன்றும் கிடைக்கலாம்...... எழுத்து என்பது ஒரு வரப்பிரசாதம் என்று எழுத்துச் சித்தர் பாலகுமாரன் அடிக்கடி கூறுவது உண்டு. பாலாவின் நாவல்களுக்குள் முங்கி முங்கி எழுந்து கொண்டிருந்த காலங்களில் இருந்து இன்று வரை பாலா மீது இருக்கும் ஒரு காதல் என்னுள் இருந்து மறையவே இல்லை. தோழமைகளும், உறவுகளும் பல நாவலாசிரியர்கள், கட்டுரையாளர்கள் என்று அறிமுகம் செய்த

போலாம்....ரைட்........!

பஸ்ல ஏறி உக்காந்தா இந்த சனம் பண்ற அலப்பறை இருக்கே ...யப்பா சாமி முடியல..! என்னைய மாதிரி மிடில் கிளாஸ் ஆளுகள படைச்சி நெருப்ப அள்ளிக் கொட்ற இந்த உச்சி வெயிலுல்ல பஸ்ஸுக்குள்ள ஏத்தி விட்டு....வேகாத வெயிலு வெளில அனலடிக்க உள்ள வேர்க்க விறு விறுக்க..ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா..மாரநாட்டு கருப்பு முடியலை சாமி....! இந்த கண்டக்டர்கார பயலும் டிரைவர்காரப் பயலும் எங்க போய்ட்டாய்ங்க...? வண்டிய எடுத்தாய்ங்கன்னா கொஞ்சம் காத்தாச்சும் வரும்...! அந்தா நிக்கிறாய்ங்க பாருங்க இந்த வேகாத வெயில்ல டிரைவரு சாயா குடிச்சிகிட்டு நிக்கிறான்...அவன் பக்கத்துல் கண்டக்டர்காரப் பய போண்டாவ தின்னுகிட்டு....இப்பத்தானய்ய செத்த வடம் முன்னால கண்டுபட்டி காளையப்பன் மெஸ்ல மல்லுக் கட்டி சாப்டீக....அதுக்குள்ள ஒரு சாயா ஒண்ணு போண்டா ரெண்டு.... எல்லாம் காலவெனை....! இவிங்க வண்டிய கொண்டாந்து நிப்பாட்டினதுக்கு கடைக்காரய்ங்க ப்ரீயா கொடுப்பாய்ங்க போல...ஓட்டல்காரய்ங்களும் காசு வாங்கிருக்க மாட்டாய்ங்கன்னு நினைக்கிறேன்....சரி கெரகம் அதப் பத்தி ஏன் நாம பேசிகிட்டு...வெத்தியூரு வெளக்கு வரைக்கும் நாம போகப்போறோம்....இவ

நானில்லை....!

எத்தனை நாட்களானதென்று உணர முடியவில்லை எனக்கு. நான் ஆழமாய் உறங்கிக் கொண்டிருந்தேன் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தேன். விழிப்பு வந்தும் அதை உணராமல் உறக்கம் அழுத்திக் கொண்டு இருப்பதை உணராமல் மீண்டும், மீண்டும் நான் உறக்கத்திலிருந்தேன் என்றே..நினைத்தேன். சட்டென உதறி எழ உடம்பு என்ற ஒன்று இல்லாமல் போனதால் உணர்விலேயே புரிந்து கொண்டேன் நான் இறந்து விட்டேன் என்று... இலகுவாய் காற்றில் பறக்கும் இறகு போல அங்கும் இங்கும் அலைய முடிந்த எனக்கு எந்த வடிவமும் இல்லை என்றே எனக்குத் தெரியவில்லை. கை போன்ற ஒரு உணர்விருக்கிறது ஆனால் கையை தூக்க நினைக்கத்தான் முடிகிறது செயலாய் அது நிகழ வில்லை. நகர நினைத்த மாத்திரத்தில் அந்த, அந்த இடத்தில் போய்....அலைந்து கொண்டிருக்க முடிகிறது. உயிரே இல்லை ஆனால் எப்படி யோசிக்க முடிகிறது என்று ஒரு எண்ணம் போல தோன்றியது...! அட உயிர் இல்லையென்று யார் சொன்னது? உடல் இல்லையென்று வேண்டுமானால் சொல்லலாம். உடலாய் இருக்கையில் புத்தியில் தேக்கி வைத்திருந்த அனுபவங்களை எல்லாம் நான் ஒரு பெயராய், உடலாய் நம்பி, நம்பி அதை விஸ்தாரித்து அது அப்படியே அதிர்வுகளாய் திடப்பட்டு அது உடலே இல்லாமல் இன்னும் ம

இது ஒரு ரகசிய நாடகமே...!

கருப்பையில் ஜீவனாய் நான் நிறையும் முன்பு ஜடமாய், உயிராய் எங்கெங்கெல்லாம் விரவிக் கிடந்தது எனது பிண்டத்தின் மூலங்கள்? தாயின் கருமுட்டையோடு, தந்தையின் உயிரணு கலந்து ஒரு தசைக் கோளமாய் கிடந்த என் உடலுக்குள் உயிர் ஊற்றிய பிரமாண்டம் எது? அங்கும் இங்கும் ஒரு சருகைப் போல நான் பறந்து பறந்து என்ன கொண்டு செல்லப் போகிறேன்? எல்லாம் நிறையும், எல்லாம் குறையும் என்றறிந்த மாத்திரத்தில் நான் எல்லாம் விட்டு போகாமல் உழல காரணமான உறவுகளும் என்னை இங்கு கொண்டு வந்த சூத்திரதாரியின் நிகழ்வுதானே? எங்கே தொடங்கியது எனது பயணம்? எப்போது முடியும்? எனக்கு முன்னும் பின்னும் காலம் என்ற ஒன்று இருக்கத்தானே செய்யும்.. சிற்றின்பத்தால் நிறைந்து கிடக்கும் வாழ்க்கையை ஒரு நாய்க்கு போடும் சிறு ரொட்டியைப் போல போட்டு விட்டு பேரின்பத்தை மறைத்து வைத்து அதை அடைய மனமற்று போகும் போது அடையும் சூத்திரத்தை சூசகமாய் பிரபஞ்சத்துக்குள் கரைத்துப் போட்டது யார்? அங்கிங்கெனாதபடி ஆடிக் கொண்டிருக்கும் சக்தி துகள்களின் ஆட்டமே நடராஜ தத்துவமென்று முத்திரை பதித்து சூசக கருத்தை உட்பொருளாய் வைத்து சென்ற மானுடர்களின் மனக்கூட்டு பிரபஞ்சத்தோடு இயைந்தேதான்

முதல் நாள்...அன்று...!

அவள் கவிதையாய் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் படையிழந்த அரசனாய், மொழி மறந்த புலவனாய், நடை மறந்த முடவனாய் உணர்வுக்கும் மூர்ச்சைக்கும் இடையே ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருந்தேன். வழக்கமாய் கண்கள் காண்பதற்காக பயன்படும் ஒரு உபகரணம் என்று அறிவு ஏற்றி வைத்திருந்த கருத்துச் சாரத்தினை நம்பி அவளை நேருக்கு நேராய் பார்த்ததின் அவஸ்தையைத்தான் இப்போது பகிர திக்கித் திணறிக் கொண்டிருக்கிறேன். இன்னுமொரு ஆச்சர்யமும் என்னை மொய்த்துக் கொண்டிருந்தது...ஆமாம்...! இவளின் விழிகளே எல்லா செய்திகளையும் பகிர்ந்து விடுகிறதே....என்று வார்த்தைகளின்றி உணர்வுகளை பரிமாறும் யுத்தியறிந்த சித்தியோடு இவளைப் படைத்து விட்ட கடவுளின் மீது கண நேரம் கோபமும், அவள் மீது பொறாமையும் ஒன்றாய் வந்து சென்றது. மிரட்சியாய் என்னுள் ஆழச் சென்று கொண்டிருந்த அவளின் விழி வீச்சில் சுவாசத்தின் ஏற்ற இறக்கம் மாறிப் போனதில் ஆக்ஸிஜனின் வரத்து சட்டென்று அதிகரித்ததில் இதயத்தின் துடிப்பு அதிகமாகி.... அது உந்தித் தள்ளிய இரத்தம் உடலெல்லாம் பரவ ஜிவ்வென்ற ஏதோ ஒரு உணர்வில் நான் இருக்கிறேனா? இல்லை பறக்கிறேனா என்று மூளையை சரிப்பார்க்க சொன்ன போது அது வெவ்வ

வாழத்தானே வாழ்க்கை...!

ஒவ்வொரு வார்த்தையாய் எடுத்துக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன்! அன்பின் மிகுதிகள் எல்லாம் சொல்லில் வடிக்கப்படாதவையே என்று நாம் அறிந்துதானிருக்கிறோம், இருந்தாலும் கிளர்ந்தெழும் உணர்வுகளை எல்லாம் வெளிப்படுத்த தற்சமயம் என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் எழுத்துதான். ஒரு வானவில்லை ஆச்சர்யமாய் பார்த்து அதில் கிறங்கிப் போய் அதிசயித்து நின்ற வினாடியில் அதன் மொத்த அழகும் என் மெளனத்துக்குள் நிரம்பி ஏக்கத்தின் சாயலில் கொடுத்த சோகங்களில் என் வெறுமை மிகுந்திருந்தது. வானவில் அழகு...! நான் ரசித்தது உண்மை....! ஆனால் நான் யோசித்து முடித்த தருணத்தில் அங்கே அது அழிந்து போய் வெற்று வானத்தை காட்டிக் கொண்டிருந்த இயற்கையின் விதியும் உண்மை....! வானவில் கொடுத்த ஒரு போதையில் கிறங்கிக் கிடந்த மூளையில் ஜனித்த உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளாக்கி கைகளின் வழியே வழிந்தோட விட்டு ஒரு வெள்ளைப் பேப்பருக்குள் அவற்றை கொண்டு வந்த பின்.....என் உணர்வு முழுமைப் பட்டுப் போனது. வானம் வரைந்து போட்ட ஓவியத்தின் அழகில் நான் ஒரு தூரிகையாய் கிறங்கிக் கிடக்கையில் அதை அழித்துப் போட்டது யார்..? *** அவ்வப்போது வானவில்லை உடுத்தி ஆச்சர்யப்படுத்தும்

நியாபகத்தின் வடுக்கள்...!

அழுந்த கிடக்கும் உறக்கமற்ற அரக்க இராத்திரிகளில் பிதற்றும் மனம் கட்டுக்கடங்கா குதிரையாக இழுத்துச் செல்லும் வெளிகளின் வழிகளில் இரணமாய் கிழிக்கிறது நியாபக முட்கள்...! அடர்ந்திருக்கும் இருளில் படிந்திருக்கும் கருமைகள் ஏக்கங்களாய் நினைவுப்படுத்தும் வெளிச்சப் புள்ளிகள்; சுற்றிப் பரவிக் கிடக்கும் இறுக்கத்தில் குறுக்கும் நெடுக்கும் கோணலுமாய் ஏதேதோ சாயங்களை அப்பிக் கொண்ட நிகழ் கால பொய்கள்...! மூக்குடைந்த பேனாவிலிருந்து வர மறுக்கும் என்... கவிதைகளின் சப்தச் சிரிப்பில் வெடித்து சிதறப்போகும் என் மூளையினூடே பரவி கிடக்கும் ஆசையில் செல்லரித்துக் கிடக்கும் ஒரு காதலின் அதிர்வுகளில் வறண்டு கிடக்கும் நாவுகளுக்குள் அடைபட்டுக் கிடக்கிறது பகிர முடியாத ஓராயிரம் வார்த்தைகள்..! தேவா. S

ஹாய்....18.06.2011!

எப்பவும் சொல்றதுதான் இப்பவும் நியதிகளுக்குள் நின்று கொண்டு முடிக்க வேண்டும் என்பது எல்லாம் வாழ்க்கையின் நடைமுறை செயல்களுக்காகத்தான் செய்தாக வேண்டும். கதையும், கட்டுரையும், கவிதையும் என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலேயே எப்போதும் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இது எனது ஓய்வு இடம். இது என்னுடைய ராஜாங்கம். நான் என் நினைவுகளின் சக்க்ரவர்த்தி. எனக்கு என்ன தோணுதோ அட்லீஸ்ட் அதை இங்கேயாவது செய்ய வேண்டும், ஆனால் வாழ்க்கையில் அப்படி முடியாது. புற வாழ்க்கை எப்போதும் மனிதத் தொடர்புகள் கொண்டது. உங்களுக்கும் எனக்கும் தேவை இருக்கிறதோ இல்லையோ இந்த சமுதாயத்தின் குரல்களையும், அதன் செம்மைகளையும், முரண்களையும், அசிங்கங்களையும் கேட்டுக் கொண்டோ அல்லது பார்த்துக் கொண்டோ தான் நகர வேண்டும். வேறு வழி கிடையாது. புறம் இப்படி இருக்கையில் என் அகத்திற்குள் தேவையென்றால் மட்டுமே நான் மனிதர்களை அனுமதிக்கிறேன். புறத்திலே பற்கள் காட்டி வேறு வழியில்லை என்னை சுற்றி நீங்கள் வந்துதான் ஆகவேண்டும் என்று பழிப்பு காட்டும் மனிதர்களும் சூழல்களும் என் அகத்தில் அடி பட்டு தூரத்தில் தள்ளியே வைக்கப்படுகின்றனர் எப்போதும்... என் ஏ

ராஜபக்சே என்னும் அரக்கன்.....!

என்ன நிகழ்த்தியிருக்கிறாயடா நாயே.....! ராஜ பக்சே பேயே...!!!! என்ன தீங்கு செய்தது என் இனம்....! தொடர்ந்து ஓடும் சானல் 4ன் வீடியோவை என்னால் காண முடியவில்லையே...!!! அவலத்தை அரங்கேற்றி விட்டு அரியாசனத்தில் வீற்றிருக்கும் பேய்களை ஒழிக்க மானம் கெட்ட காலமே உனக்கு ஒரு நேரமில்லையா...! குற்றுயிரும் குலை உயிருமாய் எம் உறவுகள் கதறும் வேதனைக் காட்சிகளை காணவே சகிக்கவில்லையே.. எம்மக்களே எப்படி சகித்தீர்...! அடிப்படை வசதிகளற்ற ஏழ்மை குடி கொண்ட மருத்துவ மனைகளில் கிடைத்த மருந்தை வைத்து உடல் பிழைக்க போராடிய மனிதர்கள் மீது குண்டு வீசி கொல்ல, அந்த மருத்துவ மனையைச் சிதைக்க எப்படியாடா மனம் வந்தது மானங்கெட்ட மனிதனே...! நீ பெற்றது வெற்றியா? த்தூ...வெட்கங்கெட்ட வெறி கொண்ட பிச்சைக்கார நாய்க்கு ஊரிலில்லுள்ள ஓநாய்கள் போட்ட பிச்சையில் எம் குலத்தை குதறிய நீ பெற்றது வெற்றியா?உனக்கு உணவு கொடுத்தோர், ஆயுதம் கொடுத்தோர், பொருள் கொடுத்தோர் வாழ்க்கையில் எல்லாம் அழிவுகள் வந்து வீழாதோ? இந்திய தேசத்திலிருந்து ஆயுதங்களும் உதவிகளும் எம் சொந்தங்களை அழிக்க சென்றிருக்கின்றன என்றென்னும் போது.....அதன் பின்னனியில் இருந்த கொடும் பாவி

காவியமானவனே....!

மழை நின்று போயிருந்த ஒரு... மாலையில் தூரலாய் பெய்யத் தொடங்கியிருந்தது உன் நினைவுகள்! கனவுகளை நிஜமாக்கியவன் நிஜமாய் கனவாகிப் போன ஆச்சர்யத்தை செரிக்க முடியாத எண்ணங்கள் ஒரு கவிதையாய் என்னுள் ஊற்றெடுக்க கலைந்து சென்ற மேகமாய் நகர்ந்து கொண்டிருந்த நினைவுகளை எட்டிப் பிடிக்க முயன்று முயன்று.. தோற்றுக் கொண்டிருந்தன என் முயற்சிகள்!!!! தொலைதலில் ஜெயித்துப் போன என் காதலின் படிமங்கள் காதோரம் ஏதேதோ கிசு கிசுக்க உடல் தழுவிச் செல்லும் காற்று உன்னை நினைவுபடுத்தியதை மறக்க முயற்சித்து மறக்காமல் காத்திருக்கிறேன் நான்..! *** திக்குகளும் திக்குகளின் தெரிவுகளும் மறந்து ஆதியும் அந்தமும் அறியா மூலத்தின் சாயலில் வழியற்று நிற்கிறேன் நான்! சுற்றிச் சுழலும் பாதைகளில் பயணிக்கும் கால் தடங்களின் போதனைகளின் அருவெறுப்புகளில் விலகி நின்று தெருவோர குப்பைகளோடு கரைந்து கிடக்கிறது மனம்..! தொடராத பயணமாய் தடைப்பட்டிருக்கும் என் தருணங்களில் தீக்குச்சியாய் உன் நினைவுகளைக் கிழித்துப் போட்டு விட்டு மெளனமெனும் வேடமிட்டு சப்தமாய் சிரிக்கிறது காலம்! தேவா. S பின் குறிப்பு: இரண்டு கவிதையும் பெண்ணின் பார்வையிலிருந்து.......

கோமானாகப் பார்க்கும் சீமான்...!

திருவிழா காலங்களின் அங்கொன்றும் இங்கொன்றுமாய் கடைகள் முளைப்பது போல ஏதேதோ பிரச்சினைகள் நாட்டை தாக்கும். அப்போதெல்லாம் யார் யாரோ போராடுவர், யார் யாரோ புயலாக கிளம்பி உக்கிரத்தின் உச்சியில் நின்று மக்களின் நலனுக்காக கூக்குரலிடுவர். இதற்கு சமீபகால உதாரணம் சினிமா டைரக்டர் திருவாளர். சீமான் அவர்கள். தேர்தல் முடிந்து விட்ட சூழலில், ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் செய்யத் தொடங்கியிருந்த சீமான் இனி என்ன செய்வார் என்ற எனது மனதை அரித்த கேள்விக்கு பதிலாய் சீமானும் நிஜ அரசியல் செய்ய தொடங்கியிருக்கும் சம கால நிகழ்வுகள் பதில்களாய் நம்மிடம் வந்து விழுகின்றன. ஈழத்தில் நடாத்தப்பட்ட வன் கொடுமைச் சம்பவங்களுக்கு மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என்பது நம் ஊர் தெருக்களில் கோலிக் குண்டு விளையாடும் சிறுபிள்ளைகளுக்கும் தெரியும். அதை எதிர்த்து ஈழத்தில் நடந்த மனித நேய முரண்களை கண்டிக்கும் வண்ணம் சீமான் எதிர் கொண்டு நடத்திய போராட்டங்களும், அதனால் அவரை பல முறை இறையாண்மைக்கு எதிராய் பேசியதாய் குற்றம் சாட்டி மத்திய அரசின் கைப்பாவையாய் இருந்த தி.மு.க சிறையிலடைத்ததும் நாம் அறிந்த விடயம்தான்..! ஈழப்பிரச

என்னை யாரென்று சொல்வீர்?

ஊர்ந்து ஊர்ந்து சடேரென்று ஞான் வீழும் இடம் ஒன்றை அருவியெனப் விளம்பினாயே? நான் அருவியா? அசைந்தாடி நான் மெல்ல நடந்து கட்டில்லாமல் புரண்ட என்னை காட்டாறென்றாயே நான் காட்டாறா? வற்றிப் போய் நான் உருவமற்று அருவமாகி கிடந்தபோது என்னைப் பொட்டலென்றாயே நான் பொட்டலா? மேகத்தினூடே கலந்து நான் குளிர்ந்த உச்சத்தில் சட சடவென்று உதிர்ந்தபோது என்னை மழையென்றாயே நான் மழையா? கரிக்கும் என்னை கரை ஒதுக்கி காய வைத்து காயவைத்து உப்பு என்றாயே நான் உப்பா? காலங்கள் தோறும் உன் கற்பனைகளில் என்னை சிறை வைத்தாய் மெப்பனையில் ஏதோ.. பெயர் வைத்தாய் அது மட்டும்தான் நானா? சிலை என்றாய், மரமென்றாய், மனமென்றாய் உடலென்றாய் உயிரென்றாய் உன் விழிகளுக்குள் அகப்பட்டு, புத்திகள் செரித்ததெல்லாம் நானா? எல்லாம் நிறுத்தி சுட்ட எதுவமற்று கிடக்கும் சூன்யத்திற்குள் எல்லாம் சேர்த்து உறங்காப் பெருவெளியில் உறங்கும் என்னை பின் யாரென்று சொல்வாய்? தேவா. S

ரயில் சினேகம்....!

எதார்த்தமான உறவுகள் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. வருகிறார்கள் சந்திக்கிறார்கள் பிரிகிறார்கள் சந்தித்தலும் பிரிதலுமல்ல இங்கே பிரதானம் ஆனால் இடைப்பட்ட தருணத்தில் இருந்த அர்த்தம் பொதிந்த நிமிடங்கள் தான் பிரதானம். நான் ஒருவரை சந்திக்கிறேன்... அறிமுகம் செய்து கொள்கிறோம். அருகிலிருக்கும் ஒரு தேநீர் கடைக்குச் சென்று தேநீரை இரு கோப்பையிலே வாங்கி அர்த்தங்கள் பொதிந்த பார்வைகளைப் பரிமாறி கொள்கிறோம். அவரைப் பற்றி விசாரிக்கிறேன் அவரும் என்னைப் பற்றி விசாரிக்கிறார். எங்களின் விசாரிப்பு பரஸ்பரம் என்ன என்று அறிவதில் ஒரு எல்லைக்கோட்டிற்கு அப்பாலே நிற்கிறது. நான் எங்கிருந்து வருகிறேனென்று அவரும் கேட்கவில்லை அவர் எங்கே செல்லப் போகிறார் என்று நானும் கேட்கவில்லை. அந்த சந்திப்பில் அவரின் இருப்பும் என்னுடைய இருப்பும் இங்கே மிகவும் அவசியமானதாக இருந்து விடுகிறது. அந்த மரநிழல் அப்போது கரைந்த காகம், வானில் மிதக்கின்ற மேகங்கள், மெலிதாய் வீசும் ஒரு காற்று, காற்றில் பறக்கும் சருகுகளும் வானில் பறக்கும் சில பறவைகளும், டீக்கடையில் டீ ஆற்றுபவரின் திறமையும், எம்மைச் சுற்றி இருந்த மனிதர்களின் சல சலப்பும் இங்கே மிக முக்க

ஒரு அழகிய கனவு...!

விலை பேசி முடித்து விட்டேன்.... நாம் குடியிருந்த வீட்டினை....! கடைசியாய் ஒரு முறை நான் கண்ட கனவுகளை கண்டு செல்லலாம் என்று காம்பவுண்ட் கேட்டினை தள்ளும் போதே... முகப்பு ஓரமாய் இருக்கும் அறைக்குள் இருக்கும் நமது படுக்கையறை வழியே ஒட்டிக் கொண்டிருக்கும் முகம் இன்னும் மாயையாய் என் புத்திக்குள் இருந்து எட்டிப் பார்க்கிறது... காதலையும், கனவுகளையும் ஒன்றாக்கி நாம் குடியேறிய அந்த முதல் தினத்தை எப்படி மறக்க...? சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாய் வீட்டிற்குள் பரவசமாய் அங்கும் இங்கும் நாம் சுற்றித் திரிந்த நாட்கள் எவ்வளவு அருமையானவை....! காதலின் தொடர் பாதையில் திருமணம் என்பது ஒரு சடங்காகிப் போக நீ என் மனைவியாகிப் போனாய்... காலையில் நீ எப்போதும் கொடுக்கும் காஃபியில் காதல் நிறைந்திருக்கும் சர்க்கரையாய் காமம் கலந்திருக்கும். நீர் சொட்டும் தலைக்கு நீ சுற்றியிருக்கும் அந்த டவலையும் தாண்டி நீர் சொட்டும் காட்சியை ஒரு வேளை நான் ஓவியானியிருந்தால் அதை ஒப்பற்ற சித்திரமாக்கியிருப்பேன்.. கவிஞனானதால்.. வார்த்தைகளுக்குள் அதைக் கொண்டு வரப் போராடிப் போராடி.... முழுமையாய் அதை வார்த்தைப் படுத்த முடியாமல் பேனாவை நான் உட

யாதுமானது ...!

தனிமர்ந்திருந்தேன் அன்றொரு நாள்..! உள்ளிருந்து கிளைந்தெழுந்த ஒரு உணர்வு என்னிடமிருந்து விலகி நின்று என்னை உற்று நோக்கியது..! மெல்ல வியர்த்து வியந்தேன்...சப்தங்கள் உள் வாங்கிய தொண்டையிலிருந்து வார்த்தைகள் வெளிப்பட்டு நீ யாரெனெ துணிச்சலை கைக்கொண்டு ஒரு கேள்வியை பிறப்பித்தேன்....மருண்ட விழிகளோடு....! எம்மை நோக்கி தொடுக்கப்பட்டதா உமது கேள்வி என்ற பதில் கேட்டு மெல்ல எச்சில் மிடறு விழுங்கி ஆம்... ஆம்.. உம்மை நோக்கிதான் என்று பதில் பகின்று காத்திருந்தேன். திக்கெட்டும் ஒலிக்க ஒரு சிரிப்பொலி எனக்கு முதல் பதிலானாது அதைத் தொடர்ந்து.... எம்மை இறையென அறி; எமது பெயர் சிவமென புரி... என்ற பதிலில் வியர்த்திருந்த நான் மெல்ல துணிச்சலை கைக் கொண்டு... இறையென்றால் நலமன்றோ பயக்கும். வீணில் ஏன் எனக்கொரு அச்சம். எம்மிடம் இருக்கும் கேள்விகளே இப்போது மிச்சம் அவற்றை குறையில்லாது எம்முன் இறையென்றறிவித்து உரை பகின்ற அந்த உருவமற்ற உச்ச சக்தியிடமே கேட்போமென்ற துணிவு வந்தது. ஓ... நீர்தான் இறையோ...!!!! உம்மை சிவமென்கிறார், சிலை என்கிறார், உரு என்கிறார் அரு என்கிறார், எமது ஊரில் பலப் பல பெயர்கள் வேற்று நாட்டில் உனக்கு

ஆன்ம யுத்தம்...!

அது ஒரு விடியல் காலை நேரம் இரவு முழுதும் முன்னும் பின்னும் நான் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருக்கிறேன். ஏதேதோ புத்தகங்களை படித்து கடவுள், பிறப்பு, இறப்பு, இந்த மூன்றுக்கும் அருகே நான் சென்று விடையறிய முற்படும் பொழுதில் தெரிந்தும் தெரியாமலும் விடைகள் என்னை விட்டு விலகிப் போக... ஆழமான ஒரு கடலின் தரையைத் தொட்டு விடும் வேகத்தில் நீருக்குள் நான் சென்று அந்த கடலின் தரையை என் நடுவிரலால் தொட்டுத் தடவிக் கொண்டிருக்கும் போது நீர் மீண்டும் என்னை மேல் நோக்கி எடுத்துக் கொண்டு வந்தால் என்னவொரு இயலாமை இருக்குமோ அப்படி ஒரு இயலாமை எனக்குள் கோபமாய் வந்ததில் கண்ணீர் என் கண்களை கட்டுப்பாடுகளின்றி கடந்து கொண்டிருந்தது.... நான், நான் என்று அடித்து பிடித்து வாழ்ந்து, சுற்றிலும் பகட்டான மனிதர்கள் கொண்ட ஒரு சூழலில் நான் பல வேறு நிகழ்வுகளைப் பார்த்திருக்கிறேன். எல்லாமே அபத்தங்கள் என்று இன்று தெளிவாக உணர முடிந்தது. எனது கிராமத்தில் இருவர் வெட்டிக் கொண்டு இறந்து போயினர். காரணம் முனியனின் வரப்பிலிருந்க மரத்தின் வேர் குப்பனின் வரப்புக்கும் பொதுவாக இருப்பது போல இருக்க அந்த உதய மரம் எனக்கு சொந்தம் என்று இவன் சொல

முடிவில்லா பயணங்கள்...!

துரத்தும் நிஜங்களை ஓடி ஜெயிக்கும் கனவுகளின் நினைவுகளில் இறுகிக் கிடக்கும் இமைகள் பிரிய மறுக்கின்றன! அறிமுகமில்லா யார் யாரோ என்னை கடந்து செல்லும் என் மரண ஊர்வலத்தில் தொடர்ச்சியாய் வரும் பால்ய நினைவுகளை நகர்த்த முடியாமல் காற்றில் அலைகிறது சூட்சும மனம்! இரவையும் பகலையும் கடந்த ஒரு வெளியில் கலைந்து திரிகையில் கடக்க முடியாத காம நினைவுகள் இடைவெளியற்று நிரம்பிக் கிடக்க இரணமாய் பரவும் வலிகளை உறிஞ்சிப் போட வழிகளற்று அடர்ந்த இருளில் நகர்கிறது என் ஆன்மா! சுற்றும் பூமியின் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட ஏதோ ஒன்று தொடர்புகள் அறுக்க வலிவுகள் அற்று கவ்விக் கிடக்கும் கட்டற்ற வெளியில் எங்கோ நடக்கும் கலவியில் ஏதேனும் ஒரு பிண்டத்துக்குள் அடைப் பட்டுப் போவேனென்று சொல்லாமல் சொல்லிற்று என்னைச் சுற்றிக் கெட்டிப் பட்டுக் கிடந்த நிசப்தம்! மீண்டும் ஏதேதோ வாசனைகள் முடிவற்ற விருப்பங்கள் தீண்டியும் தீண்டாமலும் செய்த தீங்குகளின் அடுக்குகள் எல்லாம் சேர்ந்து மெல்ல எங்கோ நகர்த்த முடிவற்று தொடரும் பயணத்தின் முடிவுகளாய் எதைக் கொள்ள? எதை வெல்ல? தேவா. S