Skip to main content

Posts

Showing posts from July, 2011

நிராயுதபாணி...!

நினைவுகளுக்குள் நிறைந்து... என்னை கலைத்துப் போடும் உன்னை இமைத்து இமைத்து விரட்ட முயன்றும் பிம்பமாய் விழிகளுக்குள் பரவி... நின்று கொண்டு, முரண்டு பிடித்து மாட்டேன் என்கிறாய்! ஒரு காற்று வந்து என் தலை கலைக்க, என் தவம் கலைந்து, அனிச்சையாய் நினைவில் வந்து செல்கிறது நீ விரல் நுழைத்து விளையாடிய தருணங்கள்! ! அணைக்கிறேன் என்று நீ மூட்டிவிட்டு சென்ற தீயின் ஜுவாலைக்குள் உஷ்ணமேறிய நினைவுகளோடு எரிந்துக் கொண்டிருக்கும் என் கனவுகளை நீ காதலென்று சொல்கிறாய் நான் உன்னை கள்ளி என்று சொல்கிறேன்..., ஆமாம்... அதிரடியாய் உள் நுழைந்து ஆக்கிரமிப்பு செய்து என்னை அள்ளிக் கொண்டு சென்றவளை பின்... எப்படித்தான் அழைப்பதாம்? கவிதை எழுதுவேன் என்றாய்... எங்கே காட்டு என்று... நான் சொல்லி விட்டு நான் பார்த்த பாவத்திற்கா என்னை கட்டிக் கைதியாய் இழுத்துச் செல்கின்றன உன் வார்த்தைகள்? சப்தமில்லாமல் சிரிக்கிறாய்; யுத்தம் இல்லாமல் அடிக்கிறாய்; மிச்சமில்லாமல் கொல்கிறாய்; சொச்சமில்லாமல் அழிக்கிறாய்; கத்தி முனையில் நிர்ப்பந்திக்கும் போர் வீரன் போல.. என்னை கவிதை முனையில் மண்டியிடச் செய்து.. காதலை கொள்ளையடிக்கும் உன் நினைவுகளோடு தோற

அது ஒரு மாலை நேரம்....!

அது ஒரு மாலை நேரம்..... என் கிராமத்து வீட்டின் கொல்லைப் புறத்தில் அமர்ந்திருக்கிறேன். மாலை வெயில் மெலிதான சிரிப்புடன் விடைபெற எத்தனிக்கையில் மேற்கிலிருந்து சூரியக் கதிரின் ஆரஞ்சுப் பழ ஒளியை மேனியில் வாங்கிய படி வரும் ஆடு மாடுகளின் கூட்டம்.... காராம் பசுக்களின் கழுத்து மணிகள் ஆடிக் கொண்டிருக்கும் சப்தம் தூரத்திலிருந்து ஏதோ ஒரு கிறக்கத்தை உண்டு பண்ண, கூடவே அந்த மேய்ப்பன் அவற்றை கட்டுக்குள் கொண்டு வர எழுப்பும் ஒலியும் அதன் உடன் சேர்ந்து கிறக்கத்தை அதிகமாக்க மெல்ல அரைக்கண்கள் சொருகிய படி....சொக்கிப் போய் கிடக்கிறேன்...! கோழிகள், சேவல்கள், குஞ்சுகள் எல்லாம் ஒரு கெக்கரிப்போடு மெல்ல நிலம் கிளறியும், கால்களை சிரண்டி சிரண்டி எதையோ தேடிய படி என் வீட்டு பஞ்சாரத்தை நோக்கி வருகின்றன... காலையில் வயலுக்குப் போன மாரிமுத்து தாத்தா ஏர்க் கலப்பையோடு...மாடுகளை ஓட்டிக் கொண்டு என் வீட்டு புஞ்சையை கடந்து நடந்து போய்க்கொண்டிருக்கிறார். காலில் முழங்கால் வரை சேறு....இருந்ததைப் பார்த்த நான் "...ஏன் தாத்தா வயக்காட்ல தானா சேத்த கழுவிட்டு வந்தா என்ன...? " என்று கேட்க நினைப்பதற்குள் அவரின் இறுக்கி கட்டிய

வெற்றிச் சிறகுகள்...!

வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் அற்புதமானவை. சோகங்களும், சந்தோசங்களும் எப்போதும் நம்மைச் சமப்படுத்தியே அழைத்து செல்கின்றன என்ற உண்மையைப் பெரும்பாலும் மறந்து விட்டு சோகங்களின் அதிருப்திகளைச் சுமந்து கொண்டே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு மழையைக் கண்டு தன்னின் ஆத்மா நிறைந்து சந்தோஷித்து திளைத்தவனும் இருக்கிறான். அதே மழையை வெறுத்து இது என்ன தொந்தரவு என்று வெறுப்பவனும் இருக்கிறான். ஒரு செயல் இரண்டு விதமான பார்வைகள். பார்வைகளை பிறப்பிக்கும் மூளைகளின் கற்பிதங்கள் தாம் இத்தகைய வேறுபட்ட எண்ணங்களை உருவாக்குகின்றன. மனிதன் திறந்த மனதோடு எல்லாவற்றையும் வரவேற்கும் தன்மையோடு எப்போதும் இருக்க வேண்டும். மாறாக நமது சமுதாயத்தில் இப்போது எதிர்மறை மனோநிலையோடு வாழும் ஒரு வாழ்க்கை முறை நமக்குத் தெரியாமலேயே நமக்குள் புகுத்தி விடப்பட்டிருக்கிறது. இந்த உலகின் மிக எளிதான காரியமாக எதைச் சொல்வீர்கள் நீங்கள்? இந்த உலகின் மிக எளிதான காரியம் என்பது " இல்லை " என்று சொல்வதும் " முடியாது " என்று மறுப்பதும்தான். ஒரு செயலை ஏற்று அதனை பொறுப்பு கொண்டு நகர்த்திச் செல்லும் போது அங்கே ஏதேனும் நாம் செயல் செய்ய

தேடல்.....21.07.2011!

தெளிவுகளை நோக்கிய ஓட்டத்தில் தேடல் என்பது தன்னிச்சையான விசயமாகிப் போய்விடுகிறது. கோவிலுக்குள் சென்று சென்று சுற்றி சுற்றி தூணுக்கு தூண் அமர்ந்து அமர்ந்து அங்கும் இங்கும் அலைந்து அடித்து பிடித்து கருவறை முன்பு நின்று இறைவனை வணங்குகிறேன் பேர்வழி என்று கண்களை மூடி நமக்குள் நாமே நம்மைப் பார்த்துக் கொண்டு ஆழ்ந்த பெருமூச்சுக்குப் பின்னால் கோவிலைச் சுற்றி விட்டு ஏதோ ஒரு தூணின் ஓரத்தில் அமர்வோமே...., அப்போது கிடைக்கும் திருப்திக் கடலுக்குள் மூழ்கி இருக்கிறீர்களா? கடும் வெறுமையில் வார்த்தைகளும் மனிதர்களும் இல்லாத போது நம்மை ஆளுமை செய்யும் அந்த மெளனம் நின்று நிதானித்து ஊறிக் கிடக்கவேண்டிய இடம். கோவிலுக்குச் செல்வது இந்த அமைதியை அனுபவிக்கத்தான். இப்படிப்பட்ட அமைதியை கொடுக்குமிடமாக கோவில் இருப்பதற்கு காரணம் அங்கே பரவும் அதிர்வலைகள். மனிதர்கள் அனைவரும் அதிர்வலைகளுக்குச் சொந்காரர்கள்தான். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு அதிர்வலைகள். கோபமே உடையவர்கள் தங்களை சுற்றி கோப அதிர்வலைகளையும், சாந்த சொரூபிகள் சாந்தத்தையும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். பலதரப்பட்ட சூழலும் வாழ்க்கை முறையும் இருக்கும் போது மனிதர்களும

சுவாசமே...காதலாக....! தொகுப்பு:10

இன்னும் மறக்கவில்லை உன்னை பிரிந்த அந்த தினத்தின் கடைசி நிமிடத்தின் அடர்த்தியினை, மீண்டும் சந்திப்போம் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அந்த வலுவினை திடமாக்கி கண்களின் வழியே நீ வழிய விட்ட போது அதில் காதலும் சேர்ந்தே இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் அதுதான் கடைசியாய் நாம் சந்திக்கும் தருணம் என்று நினைத்திடவில்லை.... காதலை எழுத்துக் கூட்டி வாசிக்க கற்றுக் கொண்ட அந்த முதல் சந்திப்பில் எனக்கான காதலை நான் கண்ட இடம் உன் கண்கள். எங்கோ சுற்றிக் கொண்டிருந்த என் விழிகள் எதார்த்தமாய் உன் விழிகளோடு பதிந்து மீள முடியாமல் இன்னும் உன் விழிகளை என் விழிகளுக்குள் ஏந்திக் கொன்டு வாழ்வதை உன்னிடம் பகிர நினைத்திருக்கிறேன். வார்த்தைகள் ஆசையாய் வெளி வரத்துடித்து பகிர நீ இல்லாத காரணத்தால் தொண்டைக் குழிக்குள்ளேயே ஒரு தர்ணா போரட்டம் நடத்தி தீக்குளித்து நெருப்பான ஏக்கப் பெருமூச்சாய் வெளிப்படுத்தியிருக்கிறது.... மனிதன் வாழும் காலத்தில் அவனை சுவாரஸ்யப்படுத்துவது காதல். அதையே அவன் சரியாக பயன்படுத்தாத போது அவனை அவஸ்தைப் படுத்துவதும் அதுதான். காதல் என்பதை பகிரப்படாத உணர்வாய் நாம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நீ சொன்

பாஸ்போர்ட்....!

கொஞ்சம் யோசனையாதான் இருந்துச்சு ஊர்ல போயி பாஸ்போர்ட் ரினிவியூ பண்ணினா சரியா வருமா? இல்லை துபாய்லயே பண்ணிட்டு போயிடலாமான்னு...இருந்தாலும் ஒரு அலுப்பு சரி ஊர்ல போய் பாத்துக்கலாமேன்னு நம்பி வண்டியேறிட்டேங்க..... ஒரு மாசம் லீவு. பாஸ்போர்ட் ரினிவியூ பண்ணி டக்குனு கிடைக்கணுமேன்னு சொல்லிட்டு விசாரிச்சு பாத்தப்ப, ட்ராவல்ஸ்ல கொடுக்கலாம்னு அப்பா சொன்னாங்க. நாமதான் ஊர்ல இருக்குற எல்லா கான்சுலேட்டுக்கும் போயிருக்கோமே நாம எதுக்கு ஏஜண்ட் கிட்ட எல்லாம் போகணும்னு சொல்லிட்டு (எம்புட்டு திமிரு எனக்கு!!!!) நோ..நோ நானே நேரா போயி திருச்சில ரினிவ் பண்ணிக்கிறேன்னு சொல்லிட்டேன். போன்ல என்கொயரி பண்ணினதுக்கு 14 வேலிட் டாகுமெண்ட்ஸ்ல கண்டிப்பா 3 ஒ அல்லது 4 ஒ டாகுமெண்ட் வேணும்னு சொல்லிட்டாங்க....(செக் பண்ணத்தான்..) நானும் ரேசன் கார்ட், டிரைவிங் லைசன்ஸ், வோட்டர் ஐடி இது எல்லாம் கரெக்டா எடுத்து வச்சிகிட்டு காலையில 4 மணி பஸ்ஸுக்கு கிளம்பிட்டேன். எங்க ஊர்ல இருந்து காலையில கிளம்புனா ஒரு 8 அல்லது 9 மணி வாக்குல திருச்சி போயிடலாம். ஆனா 4 மணி பஸ்ஸ பிடிக்க 3 மணிக்கு எல்லாம் எழும்பணும்ல அப்போ எப்டி பாத்தாலும் தூக்கம் வராது ந

ஒலியற்ற ஓசைகள்..!

எதார்த்தங்களை விரும்புபவர்களுக்கு எழுத்துக்களோ, விமரிசைகளோ அல்லது... சராசரி நிகழ்வுகளோ எப்போதும் திருப்தியை கொடுத்து விடுமா என்ன? சொர்க்கங்களில் வாசம் செய்பவர்களுக்கு சந்தோசத்தை பெட்டிக்குள்... அடைத்து கொடுத்தலாகுமா? எல்லா விடியலையும் புதியதாய் சுவீகரித்துக் கொண்ட ஜீவன்களுகு சிறந்த நாளென்று தனித்து எதைப் பகிர?..! வழக்கம் போல தனிமையில் மூழ்கி ஏகாந்தமாயிருக்க நிதம் வானம் பார்த்து உனை மறக்க ஒரு துளி கூட விடாது மழையை மொத்தமாய் விழியாலோ அல்லது உடலாலோ உள் வாங்கிக் கொள்ள ஏதோ ஒரு புத்தகத்தில் எப்போதும் உனைத் தொலைக்க ..... ..... ..... மொத்தத்தில் பட்டாம் பூச்சியாய் எப்போதும் சிறகடிக்க வாழ்த்துகள்....! ...... ..... .... என்றெல்லாம்.... எழுதி முடித்த பின்னும் எதோ ஒன்று மிச்சமாயிக்கும் ஒரு அடர்ந்த மெளனத்தில் நிறைந்திருக்கிறது... எழுத்துக்களுக்குள் ஏற்ற முடியாத வாழ்த்தின் ஓசைகள்! தேவா. S

ஹாய்...12.07.2011!

ஹோ...ன்னு இருக்கு மனசு...! பதிவுகள் எழுத ஆரம்பிச்ச காலத்துல இருந்து இப்போ வரைக்கும் இதை, இதை எழுதணும்னு ஒரு நாள் கூட திட்டமிட்டது கிடையாது. ஒரு வருசத்துக்கு 365 நாள்னு வச்சுக்கிட்டா எழுத்துன்னு எழுத ஆரம்பிச்சதுல இருந்து இன்னிக்கு வரைக்கும் தினமும் நான் எழுதிட்டு இருக்கதாதான் கணக்கு வழக்கு சொல்லுது. ஒவ்வொரு தடவையும் எழுதும் போதும் ஒரு அழுத்தமனா வலி மனசுக்குள்ள இருந்துகிட்டுதான் இருக்கு. அது என்ன ஏதுன்னு தெளிவா என்னால சொல்ல முடியாது ஆனா எழுதி ஏதோ சொல்லிட்டேன்னு சொல்லிகிறத விட எழுதினதால நான் பக்குவப்பட்டேன் அப்டீன்றது ஒரு நிதர்சனமான உண்மை. வாழ்க்கையில பெரிய கஷ்டமான விசயமா நான் பாக்குறது உள்ளுணர்வு உறுத்தலோட வாழ்க்கைய வாழ்றது. எழுத்துன்னு எழுத வந்த உடனே அது தனிப்பட்ட வாழ்க்கையை விட பளிச்சுன்னு நம்மள காட்டிக்கிற மாதிரிதான் எல்லோரும் எழுதுவாங்க, நானும் அதைதான் செய்றேன். ஏன்னா இது பொது வெளி. ஒரு கல்யாண வீட்டுக்கு போகும் போது வெள்ளையும் சொள்ளையுமா, அலங்காரங்கத்தோடதான் போவோம், ஏன்னா அது பொதுவெளி அந்த மாதிரி இடத்துல நம்மை பளீச்சுனு காட்டிகணும்னுதான் விரும்புவோம். பொது வெளில எழுதும் போதும் அப்டீத

சதி....!

எழுத்துக்களை தேடவில்லை இப்போது என்னெதிரே பவ்யமாய் மண்டியிட்டுக் கிடக்கின்றன அவை. முன்னூறு என்றில்லை எந்நூறும் அவளுக்குச் சொந்தமானது அல்லவா....? இதில் முன் நூறு பின் நூறு என்று எதைப் பிரித்து அவளைச் சொல்ல...? என் அசைவுகளின் மூலமெதுவென்று யாருமறிந்திருக்க வாய்ப்பில்லை. எனது வலிவுன் மூலம், சிவமாயிருக்கும் என்னை சக்தி கொடுத்து தாங்கிப் பிடித்திருக்கும் மூல சக்தி, ஆதி சக்தி அவள், ஆனால் பந்தப்படாமல் சலனமற்று எப்போதும் ஒதுங்கியே இருக்கிறாள். வாழ்வின் ஓட்டத்தில் நான் தடுமாறி நின்ற இடம் இரண்டு.... ஒன்று தாய்.... மற்றொன்று தாயுமான மனைவி....! வார்த்தைகளும், வாழ்க்கைப் படிமங்களும் ஏற்றி வைத்த உணர்வுகள் உடனே வந்து சண்டையிடும் நீ எப்படி மனைவியை தாயெனலாம்? என்று ....உணர்வுகள் கொடுத்த விவரிப்புகளில் சூழல்களை மனதுக்குள் விதைத்தவள், என்னைப் பெற்ற தாயின் வலியினை எனக்கு காட்டியவள், வாழ்க்கையின் எல்லா சூழலிலும் குடும்பம் என்ற ஒற்றை சொல்லுக்குள் நின்று கொண்டு பாராபட்சமின்றி சுழலுபவள்... தன்னின் வீடு மறந்து என்னின் வீட்டினை சுவீகரித்து என் தகப்பனுக்காய், தாய்க்காய் கண்ணீர் உகுத்து அவரின் உடல் நலனை பேணுபவள்,

நிதர்சனத்தின் தீண்டல்!

கொழுந்து விட்டெரியும் ஆளவரமற்ற தார்சாலையின் அக்னிச் சூட்டில் பாதங்களின் பொறுக்க முடியா ஓட்டத்தில் எட்டிப் பிடிக்க முடியாத இலக்குகளின் கோரப்பற்கள் முன்னின்று பயமுறுத்தும் விழித்தெழுந்த ஒரு நள்ளிரவு கனவு விடியல் வரை துரத்தி கொண்டு வந்துவிடும் நிஜங்களோ கனவை விட கொடுமையாய்! யாதார்த்த போர்வையைச் சுற்றிக் கொண்டு எப்போதும் தினசரி நிகழ்வுகளுக்குள் அகப்படாத ஒரு குருட்டு காதலியின் கிழிந்துபோன உடைகளினூடே பரவிக் கிடக்கும் ஏழ்மையை பார்க்க சகிக்காது இறுக மூட நினைக்கும் கண்கள் மூடினாலும் காட்சிப் படுத்துகின்றன என் ஏழ்மைக் காதலை! விடம் ஏறிப்போன நாவுகளுக்கு அழுகிப் போன மூளைகள் பரவவிடும் கட்டளைகளில் இறுமாந்து கிடக்கும் திடப்பட்ட மனிதர்களின் கேலியும் பேச்சும் சீண்டலும் சீறலும் முற்றிலும் அன்னியப்பட்டதாய் பார்த்து சகித்து ஒதுங்குகையில் முகத்திற்கு முன் நடக்கும் அவலட்சண கூத்துக்களை காறி உமிழ்ந்து கலைக்க நினைக்கையில் பாவமாய் புத்திக்குள் எட்டும் இந்த... அவலங்களின் ஜனிப்பு மூலங்கள்! விட்டு விலகிடும் ஆசையில் கட்டி இழுத்துக் கொண்டிருக்கும்.. மூடனாய் அழுந்தி இறக்கும் அற்ப பதர்களின் ஆட்டத்துக்குள் ஒரு ஓட்டமாய்

நம்ம மண்ணுதேன்...!!!!

எப்டி பட்ட நாள் எல்லாம் மிஸ் பண்ணியிருக்கோம்...அதாவது இழந்து இருக்கோம்னு நினைக்கிறப்ப ச்ச்சும்மா நம்ம மேலயே வெறுப்பா இருக்குல்ல...? இன்னமும் அனுபவிக்கிற பாக்கியசாலிகள் இருக்கத்தான் செய்வாங்க..! லீவுக்கு ஆயா வீட்டுக்கு போவோம்...அம்மாவோட அம்மாவ ஆயான்னு கூப்பிடுறது எங்க வழக்கம் (அட உங்க வழக்கமும் அதுவா அப்போ....பிஞ்ச்...பிஞ்ச் பிஞ்ச்!!!!). முழுப்பரீட்சை முடிஞ்ச உடனே....ஊருக்கு கெளம்புறதே ஒரு அலாதியான விசயம். பெரும்பாலான நம்ம சனத்துக்கு அப்பாவோட வகையிறக்கள விட அம்மாவோட வகையிறாக்கள் மேல பிடிப்பு ஜாஸ்தியா இருக்கும். இதுக்கு காரணம் என்ன என்ன பாலிடிக்ஸோ அது நமக்கு வேண்டாம் இப்ப.... ! பட்டுக்கோட்டையில இருந்து பஸ் ஏறி...காரைக்குடி வரைக்கும் போற ஏற்படுற உணர்வுகள் இருக்கே... அத வார்த்தைகளுக்குள்ள கொண்டு வர முடியாது. தஞ்சாவூர் ஜில்லாவுலதான் அப்பாவுக்கு வேலை....சொந்த ஊரு சிவகங்கைச் சீமை. நம்ம பழக்க வழக்கம் எல்லாம் காவிரித்தாயோட மடியில ஆனா பூர்வீகம் வானம் பார்த்த சிவகங்கையோட செம்மண். இரண்டு வேறு கலாச்சாரம், மனிதர்கள், பழக்க வழக்கங்கள்னு சின்ன வயசுல இருந்தே அந்த மாற்றத்தை பாத்து பாத்து ஆச்சர்யமா புத்