Skip to main content

Posts

Showing posts from October, 2011

பார் காலமே.. பார்...!

எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே... கால்கள் கொண்டு திக்குகளெட்டும் நடந்து காட்டினோம்...! பேச்சற இரு என்று எம் நாவினை நீ வெட்டி போட்டாய் காலமே... எம் மெளனத்தால் அன்பென்னும் பூக்களை எம்மைச் சுற்றி கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...! எம் விழிகளை குருடாக்கினாய் காலமே... இருளென்னும் கருமையில் கலங்காது நின்று வர்ணங்களை எம் புத்தியில் தேக்கி வைத்து எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்! சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில் மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்; பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்; சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட ஓடும் கால்களுக்கு எல்லாம் எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....! என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ? காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும் முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன் என்ற சத்தியம் உணர்..! பொய்களின் நகர்வுகளில் எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள் எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும் என்ற நிதர்சனம் அறி! கோபங்கள் கொள்ளும் மூளைகள் எல்லாம் சதைக் கோளங்களாகி புழுக்களைப் பிறப்பித்து மண்ணில் மட்கி மறையும் என்பதை தெளி..! எம்முள் படிந்து கிடப்பது ப

சரவெடி...!

தீபாவளி வந்துருச்சு என்ன செய்யலாம்...???? ம்ம்ம்ம்....எல்லோரும் அடிச்சு பிடிச்சு கேட்டு கிட்டே இருக்குறாங்க? என்ன தீபாவளி ஸ்பெசல்ன்னு... நமக்குத்தான் ஒரு மண்ணாங்கட்டியும் தலைக்கு ஏற மாட்டேங்குது. ஊர்ல இருந்தா ஒரு நாளு லீவு கிடச்சு இருக்கும். காலையில் நிம்மதியா எந்திரிச்சு எண்ணைய தேச்சு குளிச்சுப்புட்டு ஏதோ நாலஞ்சு வெடிய கொளுத்துனோமா, கறிக் கொழம்பையும் தோசையும் சாப்டம்மா, ஏதோ ரெண்டு மூணு டிவில ப்ரோக்கிராம பாத்தமான்னு போயிருக்கும்... கொண்டாட்டம் எல்லாம் கொண்டாடுற காலம் முடிஞ்சு போச்சா இல்ல நமக்குத்தான் அப்டி தோணுதா, என்ன தீபாவளி? என்ன பொங்கலுன்னு சொன்னா அதுக்கு என்னோட சதி (சரி பாதிங்க தப்பா எடுக்காதீங்க!!!!) சொல்ற பதிலு..... வயசாயிடுச்சுங்க ஒங்களுக்குன்னு...! ஆமா அது ஒண்ணுதான் கொறச்சல் போன்னு சொல்லிட்டு..., யாருக்குத்தான் வயசாகுறது இல்லன்னு மனச தேத்திகிட்டு இருந்தாலும்... எப்போ யாரு வயசு கேட்டாலும் 34 முடிஞ்சுருச்சு 35 ஜஸ்ட் ஆரம்பம் ஆகியிருக்குன்னுதன சொல்லத் தோணுதே தவற ஆரம்பிச்ச வயச மட்டும் அதிகாரப் பூர்வமா சொல்ற தில்லு ரொம்ப பேருக்கு வரலை என்னையும் சேத்து...! பேஸ் புக்லயும், மத்த சோசியல

வார்த்தைகளற்ற மொழிகள்!

மொழி - I மூச்சுக் காற்றின் ஓசை கேட்கும் தருணங்கள்; காதோரம் காற்று சொல்லிச் செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்; கடும் காய்ச்சல் ஓய்ந்து போன தினத்தின் அயற்சியான எண்ணமற்ற நினைவுகள்; விடியலில் எழுந்து மீண்டும் போர்வை போர்த்திக் கொண்டு உறங்கத் தொடங்கும் அதிகாலை பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்; கூச்சலற்று தனித்தமரும் தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்; அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு என் விழி சேர்கையில் காதலாய் உருமாறி சிறகு முளைக்க வைக்கும் பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்; நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின் வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்; கெட்ட சொப்னங்கள் கிழித்து தாயின் மடி தேடி எழுந்து கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு பால்யத்தை கனவு காணும் இரவுகள்; லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய் பிசாசாய் வேலை செய்யும் அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும் மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்..... என்று என் அனுபவித்தல்களின் ஆழங்களில் நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்... என் இருப்பினைச் சுமந்த படி....! *** மொழி - II கடந்து போன ரயிலொன்றின் தூரத்து சத்தம் சுமந்து வந்த காற்று.. விட்டுச் செல்கிறது அடர்த்தியான நிசப்தத்தை! வெ

மெளனத்தின் சப்தம்...!

வெறுமையாய், ஒற்றை சொல் கூட மனதிலே உதிக்காத தன்னிச்சை சூழ்நிலைகளை எல்லாம் மேலோட்டமாய் பார்த்தால் அது வலி. ஆழ உணர்ந்து பார்க்கையில் அது சுகம். வலிகள் எல்லாம் சுகம். நாம் வலிகளை வேண்டாமென்றே பழகி விட்டோம் அதனாலேயே அவற்றை விட்டு ஓடி விடவே நினைக்கிறோம். ஆமாம் நீண்ட மெளனங்களும், ஆட்கள் அற்ற தனிமையும் மனிதர்களோடு திரிந்து திரிந்து பேசி பேசி கிடந்து விட்டு சட்டென்று ஏற்பட்டால் ஒரு பயம் ஏற்படத்தான் செய்யும். நிஜத்தில் மனிதர்களுக்கு பூக்கும் மெளனங்கள் எல்லாம் பெரும்பாலும் மெளனங்களாய் இருப்பது இல்லை. அவை தனிமை என்று முத்திரை குத்திக் கொண்ட போலிகளாய்த் தானிருக்கின்றன. தனிமையில் இருக்கும் மனிதர்களின் மனம் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கும் அல்லது கிழக்கு மேற்காக, வடக்கு தெற்காக பயணித்துக் கொண்டே இருக்கும். இது பற்றிய ஒரு புரிதல் இல்லாமலேயே தனிமையில் இருந்ததாகவும் மெளனத்தில் லயித்திருந்ததாகவும் பல கதைகள் சொல்லும். மெளனம் பகிர முடியாதது. அது சோகத்தின் உச்சமாய்த் தெரியும் ஆனால் அதுதான் சந்தோசத்தின் முதல் நுனி. இங்கும் அங்கும் அலைந்து திரிந்து வியாக்கியானங்கள் பேசும் எல்லோருக்குமே தெரியும் அவையெல்லாம் பொ

சுவாசமே...காதலாக...! தொகுப்பு: 11

உனக்குத் தெரியாது என்ன விதமான கிரியா ஊக்கியாய் நீ இருக்கிறாய் என்று.... உன்னை பின் தொடர்ந்து நான் வந்த நாட்களில் எல்லாம் ஒரு வித பட படப்போடுதான் நடந்திருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் மெலிதாய் உன் இரட்டைப் பின்னலை சரி செய்தபடி ஓரக்கண்ணால் நீ பார்க்கும் அந்த நிமிடத்தில் என் இரத்தமெல்லாம் வேகமாய் இதயத்துக்குள் சென்று அங்கிருந்து அவசரமாய் சுத்திகரிக்கப்பட்டு பம்ப் செய்பட்டு உடலெல்லாம் அதீத கதியில் பரவும் பொழுதில் என்னுள் பெருமூச்சாய் நிறைந்து கிடக்கும் உன்னிடம் சொல்லாத என் காதல்.... ஒரு பேப்பரில் ஐ லவ் யூ என்று நான் கிறுக்கலாய் எழுதி எழுதிப் பார்த்து எழுதியதில் சிறந்ததை கையில் வியர்வை நனைய உன்னிடம் கொடுக்க ஓராயிரம் முறை முயன்று, முயன்று கடைசியில் கொடுக்காமலேயே கிழிந்து போனது எல்லாம் மேலும் மேலும் என்னுள் ஆழமாய் உன் நினைவுகளை ஊடுருவத்தான் செய்தது பெண்ணே...!!! நண்பர்கள் கூட்டத்துக்கு நடுவேயான அரட்டையில் உன்னைப் பற்றிய பேச்சுக்களில் அவர்களின் ஆலோசனைகளை நம் காதலுக்கு வள்ளல்களாக அவர்கள் வாரி வளங்கும் கணங்களில் என் புத்தியில் மட்டும் எதுவுமே சிக்காமல் உன் இரு துறு துறு விழிகள் மட்டுமே நிறைந்து நின்

புள்ளையாரப்பா....!

காரைக்குடிக்கு இதுக்கு முன்னாடி நீங்க வந்திருக்கிறீயளா.. என்னனு எனக்குத் தெரியாது. காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் தாண்டி நேரா போற கட வீதிக்கு பர்ஸ்ட் பீட்டுன்னு பேரு. பர்ஸ்ட் பீட்டுக்கு அங்கிட்டு காப்பித்தூள் வாசனையோட கடைத் தெருவ நீங்க தாண்டி போகும் போதே நாலு ரோடு பிரியும். லெப்ட்ல திரும்பி போனியனாக்கும் பெரியார் சிலை வரும் அது நாடிக்கே போனியன்னா புது பஸ்ஸ்டாண்டு அத விட்டுத்தள்ளுங்க ...., நீங்க ரைட் சைட்லயும் போக வேணாம், என் கூட ஸ்ட்ரெய்ட்டா வாங்க. நடு செண்ட்டர்ல கொடைக்குள்ள நிக்கிற போலிஸ்காரவுகள கண்டுக்காம, ரைட் சைட்ல டாக்ஸிக் காரப்பயலுக நிப்பாய்ங்க அவிங்களயும் பாக்காம என் பொறத்தாடியே வாங்க.. டாக்சிக்காரய்ங்கள ஏன் பாக்க வேணாம்னு சொன்னே தெரியுமா? அப்புறம் வண்டி வேணுமாண்ணேனு கேட்டுக்கிட்டே வந்து ஒரண்டை இழுத்தாலும் இழுப்பாய்ங்க...அதுக்குத்தேன்... இந்த முக்குல திரும்புனியன்னா ரைட் சைட்ல வர்றதுதேன் கொப்புடையம்மன் கோயிலு, இந்த கோயில்ல சாமி கும்பிட வந்தப்ப என்னிய புடிச்ச, என் காலேஸ்ல படிக்கிற சனியனத்தான் இப்ப பாக்கப் போறோம். எங்க வீடு இருக்கறது மானகிரில நான் படிக்கிறது அழகப்பா காலேஷ்ல எம்பேரு

கடந்து போம்...!

எழுதத் தோன்றாத வார்த்தைகளை தேடிக் கோர்த்துக் கொண்டிருக்கிறேன் ஒரு குருடனைப் போல.....! இரைச்சலே வேண்டாம் என்று எழுதத் துணியும் மனதுக்கு கூட சுற்றிலும் ஒரு இரச்சலின் அதிர்வுகள் தேவைப்படத்தான் செய்கிறது. கூட்டத்திற்கு நடுவில் நின்று கொண்டு,நான் தனி, நான் தனி என்றும் கூறும் நடிப்புக்கள் எல்லாம் தள்ளி விடப்பட்ட தனிமையில் மூச்சு திணறித்தான் போகின்றன. தொண்டை அடைக்க, கண்கள் பிதுங்க மானுடக் கூட்டங்களை சப்தமின்றி தேடத் தொடங்கும் மாய மனதின் மனதினை தொட்டு நிறுத்தி கேள்வி கேட்கும் பொழுதுகளில் தெரிகிறது உண்மை மமதை என்னவென்று.... யாருமே இல்லாமல் வாழ்வது நிம்மதியென்று யாரேனும் பகிர்ந்தால் அவர் கூறுவது பொய்யென்று கூறி நான்கு கசையடிகள் கொடுங்கள். மனிதனாய் ஜீவித்ததின் தாத்பரியமே கூடிவாழ்தல். இப்படியாய் கூடி வாழும் பொழுதுகளில் நெஞ்சு நிறைக்கும் நினைவுகளை மனிதர்களுக்கு கொடுத்து மனிதர் சூழ மமதைகள் அழிந்து கிடைக்கும் அமைதிதான் சத்தியத்தின் சொந்த வீடு. மாறாக மனிதர்களை வெறுத்து, வாழ்க்கையை புறம் தள்ளி வெளியே அமைதியைக் கொண்டு வர முயன்று நம்மைச் சுற்றிலு மயான அமைதியை நாம் உருவாக்கி விடலாம் ஆனால் உள்ளே பேரிறைச்

அவள் வரலாம்..!

நினைவுகளை ஏந்தி காத்திருக்கிறேன்... மீண்டுமொருமுறை அவள் எனைக் காண வரலாம்... என்னுள் ஏகந்தக் கனவுகளைப் பரப்பிப் போட்டு பழுப்பேறிப் போயிருக்கும் என் நாட்களுக்கு வர்ணங்கள் தீட்டலாம்..! எரிந்து போன விறகின் கடைசி முயற்சியாய் மெலிதாய் துளிர் விடும் சிறு கங்கினைப் போல கனன்று கொண்டிருக்கும் என் காதல் அவள் சுவாசத்தை எரிதிரவமாக்கி மீண்டு அனல் பரப்பி பற்றிப் பரவலாம்...! நீண்டு கொண்டே இருக்கும் பொழுதுகளின் மடிப்புகளில் குற்றுயிரும் குலை உயிருமாய் முனகிக் கொண்டிருக்கும் காதலை அவள் ஒரு வேளை அவள் விழிகளை என்னுள் ஆழப் பதித்து மீட்டும் எடுக்கலாம்... அயற்சியில் அமிலம் சுரக்கும் புத்தியில் நினைவுகள் மெல்ல மெல்ல மரிக்கையில் அவள் வரவுக்காய் வீதியில் படிந்து கிடக்கும் விழிகளோடு காத்துக் கிடக்கிறது என் உயிரும்..அவள் மீதான காதலும்... தேவா. S

த்புக்....த்புக்...த்புக்....!

பிரிட்ஜ்ஜை திறந்து வாட்டர் பாட்டிலை எடுத்தேன், தொண்டைக்குள் சிலீரென்று ஊடுருவி இதயத்தை வேகமாக துடைத்துக் கொண்டு வயிற்றுக்குள் பரவி கொடுத்த சுகத்தை கண் மூடி அனுபவித்தேன்..மூளையின் செல்கள் எல்லாம் அபர்ணா.. அபர்ணா....அபர்ணா என்று துடித்துக் கொண்டிருந்தது.... இரத்த ஓட்டம் அதிகமாகி கண்கள் சிவக்க வாட்டர் பாட்டிலை பிரிட்ஜுக்குள் வைத்து விட்டு கதவை ஓங்கி சாத்தினேன்...! சென்ட்ரலைஸ்ட் ஏசியை துச்சமாக மதித்தப்படி வியர்வை முன் நெற்றியில் துளிர்த்தது. டேவிட் நேற்று கொண்டு வந்து கொடுத்த சைலன்ஸர் பொருத்தப்பட்ட பிஸ்டல் டைனிங் டேபிளில் அப்பாவியாய் படுத்துக் கிடந்தது. வெளிநாட்டுப் பொருள் மட்டுமில்லாமல் எல்லா விதமான விசயங்களையும் சப்ளை செய்வதில் டேவிட் நம்பர் ஒன் மட்டுமில்லை கழுத்தை அறுத்தாலும் உண்மையை வெளியே துப்பாத கற்புக்கரசன். வாட்ச்சை திருப்பி மணி பார்த்தேன் இரவு 8 மணிக்கு இன்னும் ஐந்து நிமிடமாகும் என்று எனது டைட்டன் வாட்ச் துல்லியமாக காட்டிக் கொண்டிருந்தது. அவள் ஜிம்மில் இருப்பாள் வீட்டுக்கு வர 9 மணி ஆகும். நான் 8:30க்கு கிளம்ப நேரத்தை மூளையில் குறித்துக் கொண்டேன்... ஆமாம் எதுக்கு போறேன்னு கேக்குறீங

போராளி....!

சற்றே ஒதுங்கி நில்லுங்கள்... எம் ஏகாந்தக் கனவுகளே....! நிரந்தரமாய் ஓய்வெடுங்கள் புத்தி உலுக்கும் மாயைகளே...! நிஜத்தில் எம் முன்... ஒரு களம் உண்டு... அங்கே எம் தலை கொய்யும் தீரத்துடன் சுடும் அக்னியாய் பல உண்மைகளுமுண்டு... தூர நில்லுங்கள் வார்த்தைகளே அவசரமாய் தாளிட்டுக் கொள்ளுங்கள் எம் எழுதுகோல்களே.. ஏகாந்த உணர்விற்கு என்னை எடுத்துச் செல்லாதீர் எம் கனவுகளே என்னை கொஞ்சம் எதார்த்ததில் நகர விடுங்கள்..! முழு நிலவினை பார்க்காதீர் எம் கண்களே... சுவாசம் நிரப்ப கொஞ்சம் பிராணன் கொடுத்து என் மேனி தொடாமல் ஒதுங்கிச் செல் காற்றே நான் என் நிதர்சன போர்க்களத்தில் வாள் வீச வேண்டும்! சிலாகித்து சிலாகித்து புல்லரித்து போன உடலைத் தவிர என்ன கொடுத்து விட்டாய் மழையே நீ? நினைவுகளை புரட்டிப் போட்டு கனவுப் பக்கங்களில் குதிரையேறி உலகை வலம் வரச் செய்ததில் என்ன நிதர்சனத்தைப் படைத்து விட்டாய் எம் நினைவுகளே...! என்னை மறந்தே போ.. என் காதலே...! மயக்கத்தைக் கொடுத்து தனிமையில் பல நினைவுகள் கொடுத்து உன்னால் விளைந்தது சில, பல கவிதைகளும் உறவென்ற சில சுமைகளும்தானே... நிஜம் சுட்டெரிக்கும் பொழுதில் உடன் வரா நீ... எனைவிட்டு நகர்

ஹாய்.....05.10.2011

கொஞ்சம்..இல்லை இல்லை ரொம்பவே நாளாச்சு ஹாய் எழுதி...! ஏன்னு தெரியல. ஒரு மாதிரி அளாவளாவ மனசு கொஞ்சம் இளகி இருக்கணும் ஆனா அப்டி இல்ல எனக்கு கொஞ்ச நாளா. காரணம் என்னனு எதாச்சும் ஒரு விசயத்த சொல்ல முடியாது பட் நிறைய நிகழ்வுகளைக் ஒண்ணு சேத்து ஒரு மாதிரி இரிட்டேசன் அவ்ளோதான்...! ஓடிட்டே இருக்குற வாழ்க்கை எங்க போகுதுன்னு தெரியாது ஆனா இயங்கிக் கிட்டே இருக்கோமேன்னு ஒரு மாதிரி அலுப்பு தோண ஆரம்பிச்சுடுச்சு..! யெஸ்... வயசாகிடுச்சுன்னு கூட சொல்லலாம். வயசு என்பது வாழ்க்கையின் தொகுப்பு. அனுபவங்களின் சேர்மானம். பத்து வயசுல எது தேவையோ அது பதினைஞ்சு வயசுல மாறிப் போயிருக்கு, பதினைஞ்சு வயசுல எது தேவையோ அது இருபத்தஞ்சு வயசுல மாறிப் போயிடுது. ஆனா ஒவ்வொரு வயசும் ஒவ்வொரு வருசமும் சம்மட்டியால் அடிச்சு, அடிச்சு நம்மை செம்மை படுத்திக்கிட்டே இருக்கு. மொத்தத்துல பாத்தீங்கன்னா ஒவ்வொரு அனுபவமும் கூடக் கூட தனியா நிக்கணும் அப்படீன்ற ஒரு எண்ணம்தான் அதிகமா இருக்கு. கூட்டம் கூட்டமா சுத்தி அலைஞ்சது பேசுனது சிரிச்சது எல்லாம் ஒரு கட்டத்துல பொய் ஆகிடுது இல்லீங்களா? பணம்தான் வாழ்க்கையை ஆளுதுன்னு என்னோட இந்த 34 வயசுல எனக்குத் த

செல்லரிக்கும் கனவுகள்..!

தொன்மத்தின் வாசனைகள் துருத்தும் எலும்பாய் எட்டிப்பார்த்த ஒரு இராத்திரியின் வானத்திலிருந்து வழிந்த நியான் ஓளியின் வெளிச்சத்தில் மரணித்துக் கொண்டிருந்தேன் நான்..! உயிரின் பிசிறுகள் விசிறியடிக்கப்பட்ட அகண்ட வெளியில் கரித்துக் கொண்டிருந்த கூக்குரல்களினூடே பயணித்துக் கொண்டிருந்த ஏதேதோ அதிர்வுகள் என் உயிர் நகர்த்தும் ஆசையில் இச்சையோடு என்னை புணர்ந்து கொண்டிருக்கையில் மூளை மடிப்புகளிலிருந்து சாயம் போய் வழிந்து கொண்டிருந்த நினைவுகளின் எச்சத்தில் மெலிதாய் எதிரொலிக்கிறது ஒரு மெல்லிய தாலாட்டு..! அடர்த்தியான இரவினை கெட்டியாக்கிக் கொண்டிருந்த கருமையினூடே மெல்ல நகர்ந்து அரவமாய் உடல் நெளித்து நகர்ந்து நகர்ந்து ஜென்மங்களில் ஏந்தி வந்த உணர்வோடு நியூரான்களை கடந்து செல்லும் கலர்க் கனவுகளை அரிக்கும் கரையான்கள்! மெலிதாய் இழையோடும் புழுக்களோடு மட்கத் தொடங்கியிருந்த உடலருகே திப்பி திப்பியாய் இறைந்து கிடக்கும் சில காதல்களும் காமங்களும், இச்சை தாண்டிய கடவுள் தேடு கனவுகளும் சூட்டில் பட்ட நீராய் ஆவியாகி மறைதலோடு மறைந்தே போகிறது எல்லாமும்...! தேவா. S