Skip to main content

Posts

Showing posts from March, 2012

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் VI

PREVIEW சராசரியான நிகழ்வுகளில் மிக திருப்தியான ஒருவன்....எல்லாவற்றையும் விட்டு விலகி இருக்க ஆசைப்பட்டு... ஒரு பத்து நாட்கள் வீட்டை விட்டு வெளியேற திட்டமிட்டு கடிதம் எழுதிவைத்து விட்டு வெளியேறுகிறான். அதற்கப்புறமான அவனின் மனோநிலை.. உலகம் பற்றிய பார்வை....இவனைப்பற்றிய உலகத்தின் பார்வை...இப்படியாக நகரும்....கதை.....இந்த ஆறாவது பாகத்திலும் தொடர்கிறது... திருப்புமுனைகளோடு கூடிய கதை எதிர்ப்பார்த்து படிக்க விரும்புவர்கள்....எனது பதிவுகளை தவிர்த்து விடல் நலம். ஏனென்றால் என் பதிவுகள் முழுக்க முழுக்க என்டர்டெயின்மென்டை நிச்சயமாய் கொடுக்காது. உங்களின் நேரம் அனுமதிக்கும் பொழுது இதற்கு முன் உள்ள பாகங்களையும் படித்துக் கொள்ளுங்கள்....! இதுவரை... பாகம் I பாகம் II பாகம் III பாகம் IV பாகம் V இனி... நான் காட்டுக்குள் மெல்ல மெல்ல முன்னேறிக் கொண்டிருந்தேன். என் வீடு என்னைத் தேடி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கும் என்று எனக்குத் தெரியும். அது பற்றிய எண்ண விவரணைகளுக்குள் செல்லாமல் மெல்ல சமகாலச் சூழலுக்குள் ஒரு சர்ப்பத்தைப் போல புத்தியை தவழவிட்டேன். அடர்த்தியாய் விரிந்து சென்று கொண்டிருந்த மல

ஆன்மாவின்.... பயணம்! பதிவுத் தொடர் பாகம் V

ஆன்மாவின் பயணம் என்னும் இந்த தொடரின் நான்காவது பாகத்தை நான் எழுதியது 2011 ஜனவரி மாததில்....! அதன் பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பங்களின் போதும் அதன் அடுத்த அடுத்த பாகங்களை எழுத வேண்டும் என்று தோன்றவில்லை....மனதில் தோணும் போது எழுதலாம் என்று வலுக்கட்டாயமாய் வார்த்தைகளைப் பிடித்து நான் இழுத்துக் கொண்டு வர முயலவில்லை. இதோ அதன் ஐந்தாம் பாகத்தை நான் வெளியிடும் காலச் சூழல் முற்றிலும் மாறிப் போயிருக்கிறது. கடந்த ஒரு வருடத்தில் என்னைச் சுற்றிலும் ஏகப்பட்ட மாற்றங்கள். இப்போது ஏற்பட்டிருக்கும் புரிதல் அசாத்தியமானது... கடந்த சில வருடங்களாக தொடர்ந்து என்னோடு பயணிப்பவர்கள் வெகு சிலரே...! பலர் வந்தனர்....சென்றனர்...! சென்றவர்களை எல்லாம் ஏதோ ஒரு சூழலால் உந்தப்பட்டு சென்றவர்கள். உடன் வந்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் ஏதோ ஒரு சூழலில் உந்தப்பட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்..நாளை அவர்களும் செல்லவும் கூட செய்யலாம்...! ஒரு அலாதியான அனுபவத்தை வார்த்தைகளாக்கும் முயற்சியாய் இந்தக் கட்டுரையை எழுத முற்பட்டு இந்த கட்டுரையை எழுதும் சூழலே ஒரு மிகப்பெரிய அனுபவமாய் ஆகிப்போனது...! ஆமாம்....வாழ்க்கை

திக்.. திக்... இரவில்...!

இன்னிக்கு ராத்திரி நான் மட்டும் வீட்ல தனியா தங்கணும் அவ்வ்வ்வ்வ்வ்! எல்லா நண்பர்களும் விடுமுறைக்காக ஊருக்குப் போயிருக்கும் இந்த சீக்கிரமே இருட்டி ரொம்ப லேட்டாய் விடியும் மார்கழி மாத சென்னையில் காமராஜபுரம் உள்ள ரொம்பவே ரிமோட்டா இருக்குற ஏரியாவுல வீடு பாக்க வந்தப்பவே ப்ரண்ட்ஸ் கிட்ட சொன்னேன்.... டேய்.. என்னங்கடா இது ஒரு வீட்டுக்கும் இன்னொரு வீட்டுக்கும் ஒரு தொடர்பே இல்லை... தள்ளி தள்ளி தூரமா இருக்குன்னு...எவனாவது காது கொடுத்து கேட்டானா...? எனக்கு வேணும்..? எனக்கு வேணும்...? திமிராவே எப்பவும் பேசிப்பேசி அந்த பில்டப் என்னைய கொண்டு வந்து விட்டு இருக்க இடத்த பாத்தீங்களா? பக்கத்துல ஒரு பழைய வீடு கொஞ்சம் தள்ளி, அதுவும் தெருவுல இருந்து கால நேர அந்த வீட்டுக்குள்ள வச்சிடலாம். அந்த வீட்டுக்கு பின்னால பெரிய காடு மாதிரி மரம் மட்டை எல்லாம்..இருக்கறது எல்லாம் பிரச்சினை இல்லைங்க அந்த வீட்ல ஒரு ரெண்டு மூணு வருசமா யாருமே இல்லையாம்....!  செம பழைய வீடு...! அதோ அந்த தெரு முனையில இருக்கு பாருங்க ஒரு பெரிய வீடு அந்த வீட்ல இருக்க எஸ்தர் ஆண்ட்டி சொன்னாங்க அங்க யாரோ தூ.....க்க்க்க்கு போட்டு செத்துப் போய்ட்ட

தோற்கவிடு காலமே...!

அடிக்கடி என்னை தோற்கவிடு காலமே அப்போதுதான் துரோகிகளின் கோரமுகங்களையும்.... நட்புகளின் ஆதரவுக்கரங்களையும் என்னால் சரியாக பற்றிக் கொள்ள முடிகிறது... எனக்கு வலிக்கும் இரணங்களைக் கொடு..... அப்போதாவது என்னை நேசிக்கிறவர்களை நான் நேசிக்கிறேனா என்று பார்க்கிறேன்...? என்னை முகத்தில் அறைந்து காயப்படுத்து காலமே... எனக்காக எத்தனை கண்கள் கண்ணீரை சுமந்திருக்கின்றன என்று பார்த்தாவது அறிவு வரட்டும் எனக்கு... என்னை அடித்து துவம்சம் செய்; தோல்விகளால் குளிப்பாட்டு; அப்போதாவது வெற்றிகளின் போது... என்ன செய்யவேண்டும் என்று எனக்கு புரியட்டும்! நெருப்பில் எரிந்து கொள்கிறேன் இரணத்தில் வெந்து கொள்கிறேன் எரிச்சலில் நொந்து கொள்கிறேன் எனக்கு தோல்விகளைப் புகட்டு காலமே.... அப்போதாவது என் வெற்றிகளில்... நான் மனிதர்களை சரியாய் கணிக்கிறேனா என்று பார்க்கிறேன்...! வலிகளை வலிமையாக்கும் வித்தையோடுதான் என்னை நீ படைத்தளித்தாய் என்று சில சூழல்களுக்கும் மனிதர்களும் நான் பாடம் புகட்ட வேண்டும் என் வெற்றியின் உச்சத்தில் முகஸ்துதி மனிதர்களை என் காலுக்கு செருப்பாக்குகிறேன்...; முன

காய்கள் நகர்த்தும் காங்கிரஸ்! ஐ.நாவில் அரங்கேறப் போகும் இலங்கை எதிர்ப்பு நாடகம்...!

ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்த போதே.... பாரளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தற்காலிக போர் நிறுத்தம் செய்து வைத்திருந்த இலங்கை பேரினவாத அரசு காங்கிரசு கட்சி மீண்டும் ஆட்சி பீடம் ஏறிய உடனேயே.. மீண்டும் தனது கோரத் தாக்குதலை தொடங்கியது. மே மாதம் 16 ஆம் தேதி 2009ல் பாரளுமன்றத்திற்கான முடிவு தெரிந்த உடன

தேடல்....17.03.2012!

ஏதோ ஒரு புள்ளியை நோக்கி நகரும் மெல்லிய விளக்கொளியாய் நகரும் உள்ளமையோடு உடலென்னும் மாற்றமெய்தும் பிண்டத்தோடு சேர்ந்து பயணிக்கிறேன். நான் யாரென்று கேட்பவர்களிடம் இன்னாரென்ற பொய்களைப் பகிர்ந்து, பகிர்ந்து, உடலின் இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து அதன் சாரத்தை ஏந்திக் கொண்டு ஏதோ ஒரு விடியலுக்காய் வாழ்க்கை செலுத்தும் திசையில் பறந்து கொண்டிருக்கிறேன். நேற்றைய உண்மைகள் இன்றில் பொய்யாய் மாறி நாளைய பொய்களை இன்று உண்மைகளாய் தொடர்ந்து பகிர்ந்து கொண்டிருக்கும் மடமையை ஏற்றுக் கொண்டு எப்போதும் ஏதோ ஒன்றை சொல்ல நினைத்து, சொல்லி, அப்படி சொல்லிய விடயங்களில் திருப்தியுறாமல் மீண்டும் மீண்டும் சறுக்கி விழுந்து கொண்டே இருக்கிறேன். நிசப்தத்தின் சுவையை நான் பருகி இருந்தும் பேரமைதியின் சாயலோடு நான் சுகித்திருந்தும், இன்னமும் என்னை பேசவும் எழுதவும், மனிதர்களோடு அளாவளாவச் செய்து கொண்டிருக்கும் கர்மாவின் ஆளுமையினை, ஏதோ ஒரு செயலின் விளைவினை என்னால் தடுக்கவே முடியவில்லை. என்னுள் உயிரென்றும், உணர்வென்றும் உடலாய் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சக்தி ஏதோ ஒரு கடும் தாகத்தில் ஏதேதோ வலுவான செயல்க

ராஜபக்சே என்னும் மிருகமும் திட்டமிட்ட இன அழிப்பும்...!

உறங்காத இரவாக கடந்த இரவு அமைந்து போனதில் எனக்கு யாதொரு வருத்தமுமில்லை. எரிச்சலான கண்களை கடந்து உள்ளுக்குள் பரவி நிற்கும் நெருப்பின் வெம்மையில் எங்கணம் வரும் உறக்கம்...? துபாய் நேரப்படி 2:55 அதிகாலைக்கு சானல் 4ன் வீடியோ காட்சிகளுக்கு விழிகளை கொடுத்து விட்டு சொல்ல முடியாத வார்த்தைகளோடு இதோ என் ஆதங்கத்தை எழுத்தாக்க வந்திருக்கிறேன்....! ஆமாம் சாமானியத் தமிழனாகிய என்னைப் போல எத்தனையோ பேர்கள் தங்களின் ஆதங்கங்களை, வலிகளை கண்ணீராகவும், கூக்குரலாகவும், எழுத்துகளாகவும், நீண்ட நெடிய மெளனங்களாகவும், சித்த பிரமை பிடித்தவர்களாக உலகின் எல்லா மூலைகளிலும் வெளிப்படுத்திக் கொண்டுதான் இருப்பார்கள்.... ஜனித்து விழுந்த பொழுதில் 'அம்மா....' என்று கத்திய தாயின் கூக்குரலை கேட்டுக் கொண்டே " ங்ங்கா...! என்று வீறிட்டு...ம்ம்மா என்று என் தாய் மொழியில் சப்தமிட்டு இந்த உலகோடு பந்தப்படுத்திக் கொண்டவர்கள் கொண்டவர்கள் நாம். உயிரோடு சேர்ந்து உச்சரிப்பாக உள்ளுக்குள் உணர்வாய் ஊறிப்போன ஒப்பற்ற ஒரு மொழி பேசும் மிக நீண்ட வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம்.... இதோ நம் சொந்த இனம் காப்பாற்ற

சும்மா இரு... சொல் அற...!

சப்தமில்லாமல் ஒரு மூலையில் அமர்ந்திருந்தேன். யாரோடும் எதுவும் பேசப் பிடிக்கவில்லை....எதுவும் தோணவும் இல்லை. சுற்றி இருந்த எல்லோரும் ஏதோ ஒரு வேலையைச் செய்து கொண்டிருந்தனர். எப்போதும் எல்லோருக்குள்ளும் ஏதோ ஒரு பரபரப்பு இருப்பதும் அப்படியான பரபரப்பிற்காய் ஏதேதோ இலக்குகள் வெளியில் காத்துக் கிடப்பதும் எனக்குப் புரிந்தது. எனக்கு இந்த வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படாமல் ஏன் போனது...? என்பதற்கு தனிப்பட்ட காரணங்களை என்னால் எடுத்துப் பார்த்து கோர்த்து சொல்ல முடியவில்லை. பிடிக்கவில்லை...அவ்வளவுதான். என்னைச் சுற்றி எல்லோரும் பேசிக் கொண்டே இருக்கிறார்கள்...ஆனால் கவனிக்க கூட எனக்குப் பிடிக்கவில்லை. பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு வயது 70 தாண்டிவிட்டது. அப்படி  அதிகம் வயதானதாலேயே தனக்கு எல்லாம் தெரியும் என்று வருவோர் போவோரிடம் எல்லாம் அலட்டிக் கொண்டு..... என் அனுபவம்தாண்டா உன் வயசு என்று இடைவிடாமல் சொல்லுவார்... உலக அரசியலைப் ஒரு கை பார்க்கும் என் அக்கம் பக்கத்து வீட்டு அங்கிள்களும், என் அப்பாவும் தங்களின் கருத்துக்களை எல்லாம் உலக இறுதி உண்மைகளாக எப்போதும் அறிவித்துக் கொண்டு இருப்பார்கள். வாசித்த செய்த

ஆகையால்....

அந்த கவிதையின் இறுதியில் சூசகமாய் காதலைச் சொல்லியிருந்த வரிகளை அவள் வாசித்துவிட்டு என்னை காதலிக்கத் துவங்கியிருக்கலாம்; வெறுக்கத் துவங்கியிருக்கலாம் மெளனமாக இருக்கலாம், கோபமாக இருக்கலாம், சிரித்திருக்கலாம்; புரியாமலேயே விழித்திருக்கலாம்; எதிர்பார்த்திராமல் அழுதிருக்கலாம்; மீண்டும் வேறு கவிதைக்காக காத்திருக்கலாம்; அல்லது.... அந்த வரிகளை சாதாரணமாக கடந்தும் போயிருக்கலாம்...; ஆனால்... நான் அவளுக்காக இன்னொரு கவிதையை எழுதி விட்டு மீண்டும் இறுதி வரியில் அவள் என்னை காதலிக்கிறாளா..? என்று அறிய முயலும்... அர்த்தத்தோடு முடிக்க முயன்று கொண்டிருக்கிறேன்...! தேவா. சு

உதிரும் நினைவுகள்...

அந்தக் கனவில்தான் உன்னை கடைசியாக நான் கண்டது; மெல்ல தோள் சாய்ந்து கைகளுக்குள் கை கொடுத்து நெருக்கமான மெளனத்தை இருவருமே மொழிபெயர்த்துக் கொண்டிருந்தோம்! பெருவெடிப்பாய் விம்மி அழத்தோன்றிய என் ஏக்கத்தின் நுனியில் அமர்ந்திருந்த கண்ணீர்த் துளிகளில் கரிப்பாய் பரவிக் கிடந்த என் காதலுக்கு உன் உதட்டுச் சிரிப்பால் ஒத்தடங்கள் கொடுத்தாய்... உறக்கம் தொலைத்து விழிகளை வெறுமனே மூடிக் கொண்டு உன் நினைவுகளோடு புரண்டு கொண்டிருந்த பல கொடும் அரக்க ராத்திரிகள் கொடுத்த கோரச் சுவடுகளை உன் அருகாமையிலான அந்தப் பகல் சாந்தமாய் கொன்று போட்டது.... தலை கோதி நீ பரவவிட்ட தாய்மையின் அடர்த்தியில் உன் நினைவுகளைச் சப்பிக் கொண்டே ஒரு குழந்தையாய் உறங்கியே போனேன் சிறு விசும்பலோடு.... ... .... .... ... அதுதான் உன்னை கடைசியாக நான் கண்ட கனவு... பின் உன்னை சுத்தமாய் மறந்து விட்டேன் இந்த கவிதையை எழுத ஆரம்பிக்கும் வரை..., இதோ... எழுதி முடித்து விட்டு மீண்டும் விலகிச்செல்கிறேன்... இன்னொரு நாள் உன் நினைவுகள் வந்து என்னுள் படபடக்கலாம்.... அப்போது ஒரு கவிதையை எழுதி விட்டு மீண

கிழியட்டும் இத்தாலிய காங்கிரஸின் இந்திய முகமூடி....!

ராஜிவ் கொலை என்னும் ஒற்றை விடயத்தைக் கடந்து ஒரு நியாயமான காரணத்தை சொல்ல இயலுமா என் இந்திய தேசமே... உன்னால்...ஏன் நீ  கொலைவெறி பிடித்து மனிதர்களை கொன்றழித்த இலங்கை என்னும் ஒரு தேசத்தை ஆதரிக்கிறாய் என்பதற்கு.... உலகெங்கும் இருக்கும் மக்கள் புத்திகளால் மற்ற நாடுகளை நோக்கினாலும் பாரதம் என்னும் பழம்பெரும் தேசம் எப்போதும் தன் இதயத்தாலேயே மற்ற நாடுகளையும் மனிதர்களையும் பார்த்திருப்பதை யார் உனக்கு சொல்வார் இத்தாலிய மூளையால் சிதைக்கப்பட்ட என் உயிர் இந்தியாவே....? வணிகம் செய்ய வந்தவன் மெல்ல, மெல்ல ஊடுருவி சற்றேறக்குறைய 300 வருடங்கள் ஆண்டிருக்கிறானென்றால் அங்கே வீழ்ந்து போனது இந்தியனின் வீரம் அல்ல விசுவரூபமெடுத்த் நின்ற அவனின் விருந்தோம்பலும், அயலானையும் நேசித்து நம்பிய நேசமும்தானே....! சொந்த நாட்டிற்குள் தனது பூட்ஸ் கால்களால் அழுந்தப் பதிந்த எதேச்சதிகார ஏகாதிபத்திய ஆட்சியை நடத்தி சொந்த நாட்டு மக்களையே அடிமைகளாக்கி வைத்திருந்த மனிதர்களை.... அஹிம்சை வழி கொண்டு, தடியடி வாங்கி, சகித்து சகித்து, அமைதி வழியில் போராடி பெற்ற காந்தியின் தேசமிது என்று நம்பித் தானே.. தென்கோடியில் வசிக்கு