Skip to main content

Posts

Showing posts from May, 2012

இசையோடு இசையாக...தொகுப்பு 5!

ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்.. நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...! ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது. முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள்

தமிழரின் தாகம்...தமிழீழத் தாயகம்..!

ஒவ்வொரு வருடமும் மே மாதம் ஆரம்பிக்கும் போதே நெஞ்சு பதை பதைப்பதை தவிர்க்க முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்தேறிய பெரும் அவலத்தில் அழிந்த நம் உறவுகளின் அழுகைச் சத்தம் மானமுள்ள தமிழனின் காதுகளில் இன்னமும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். அயோக்கித்தனமாய் உலக நாடுகளை ஒன்று சேர்த்துக் கொண்டு பிச்சை எடுத்து ஒரு இன அழிப்பை நடத்தி விட்டு விடுதலைப் புலிகளை ஒழித்து விட்டோம் என்று கொக்கரிக்கிறான் மானங்கெட்ட ராஜபக்சே...! எத்தனை எத்தனை நிகழ்வுகள்.....2009 மே17, 18, 19 க்குப் பிறகு. பிரபாகரன் இருக்கிறார், இல்லை என்ற வாதங்களில் எல்லாம் இப்போது யாரும் அவ்வளவு அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. நம்பிக்கை இருப்பவர்களுக்கு அவர் இருக்கும் கடவுளாகிப் போனர். அவர் இருக்கிறார், கண்டிப்பாய் வருவார் என்ற நம்பிக்கை இங்கே ஓராயிரம் பிரபாகரன்களை உருவாக்கிக்தான் கொண்டிருக்கிறது. பிரபாகரனையும் அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் இயக்கத்தையும் நேசிக்க நீங்களும் நானும் தமிழனாய்த்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஒரு நல்ல மனிதனாய் இருந்தால் போதும். நேர்மையான, சுய சிந்தனை உடைய, காழ்ப்புணர்ச்சிகள் அற்ற, உண

மாயா...மாயா....எல்லாம் மாயா!

இல்லாத இடத்திலிருந்து இருப்பவராய் நம்மை ஜனித்துக் கொடுத்தது ஒரு சூனியம். சூனியத்தின் பிள்ளைகள் சூட்சுமத்திலிருந்து பிழிந்தெடுத்த கனவின் வண்ணமய காட்சிகளாகி கை கால்கள் முளைத்து ஐம்புலனென்னும் பொறிகள் கொண்டு பெற்ற அனுபவத்தை மனமாக்கி, புத்தியில் நினைவுகளாய் தவழ்ந்து கொண்டு படைக்கிதிங்கு ஓராயிரம் பொய்மைகளை.... அறிந்திராத கடவுளை அறிந்த பொழுதில் பட்டுப் போய்விடும் அவயங்களை ஏந்திக் கொண்டு அங்கும் இங்கும் வழிபாடுக்காய் கட்டிடங்களையும், கருத்துக்களுக்காய் வேதங்களையும் சுமந்து கொண்டு மதநாடகம் நடத்தும் பித்துக் கூட்டங்கள் பெற்றுப் போட்ட பிள்ளைகள் நிரம்பிய பூமியாய்ப் போனது.....இந்த சுழல் பந்து. ஆசையின் வேர்கள் நீண்டு கொண்டே இருக்க அதிகாரமென்னும் கொம்புகள் முளைத்து அங்கும் இங்கும் மிருக சாயலில் அலையும் வேடிக்கை மனிதர்கள் போதும் போதுமென்றளவிற்கு பொருள் ஈட்டி பின்னொருநாள் தீக்கிரையாகிப் போகின்றனர் இல்லையேல்...மண்ணில் மட்கிப் புழுவாகி நெளிந்து கொண்டிருக்கின்றனர்.... மறுமையில் சுகமனுபவிக்கும் ஆசையில் மதங்களுக்குள் புகுந்து வேடமிட்டுக் கொண்டு நல்லவர் வேடம் போடும் வேகத்தில் எத்தனை எத்தனை இயல்புகளை உ

ரகசியத்தின் சுவடுகள்...!

சாத்தானை படைத்த எரிச்சலில் மனிதனை படைக்கவே கூடாது என்ற கடவுளின் ஆசையை உடைத்து விட்டு மனிதனை படைத்தே விட்டான் சாத்தான்... கடவுளைக் கொன்று விட்டு; மனிதனோ மீண்டும் மீண்டும் சாத்தானை படைத்து விட்டு அதற்கு கடவுள் என்று பெயரிட்டுக் கொண்டிருக்கிறான்; ஆமாம்... கடவுளை மனிதன் படைத்து விடக் கூடாது என்ற கடவுளின் ஆசை தோற்றுப் போனதில் சாத்தான் மீண்டும் மீண்டும் ஜெயித்துக் கொண்டிருக்கிறான் கடவுள் என்ற பெயரோடு.....!                        *** அந்தக் கதையை நான் வாசிக்கையில் கதையின் நாயகியின் பெயர் அவளுடைய பெயராய் இருந்தை வாசித்து புத்தகத்தை மடக்கி விட்டு... அவளை நினைத்துக் கொண்டிருந்ததைப் போலவே அந்தக் கதையின் நாயகனும் கதையில் ஒரு புத்தகத்தை வாசித்து விட்டு அதில் கதாநாயகியின் பெயர் வந்த இடத்தில் புத்தகத்தை மடக்கி விட்டு நான் வாசித்த கதையின் நாயகியை நினைத்துக் கொண்டிருந்தான்... நானும் அந்தக் கதையின் நாயகனும் கதையில் வரும் நாயகிகளை நினைக்கவே இல்லை.... கதை முடியும் வரை...! தேவா. சு

நினைவுத் தேம்பல்கள்..!

நினைவுகளின் முனைகள் மழுங்கிப் போன ஒரு தினத்தில் ஓய்வாகக் கிடந்தது என் பேனா... வார்த்தைகளில் ஆக்ரோஷ உரசல்களிலும் காதல் சரசங்களிலும் அலுத்துப் போயிருந்த ... என் டையிரின் பக்கங்கள்.. கலவி முடித்த பெண்ணாய் கவிழ்ந்து கிடக்க.. நிரம்பலின் வெறுமையில் எங்கோ லயித்துக் கிடக்கிறேன்..நான்..!                     *** இன்னமும் சொட்டிக் கொண்டிருக்கிறது.. தாழ்வாரத்தில் மழை நீர்...! மழை பெய்த அடையாளம் இன்னும் சற்று நேரத்தில் மறையக் கூடும்.. மேகங்கள் விலகி.... பளீரென்று வெயில் அடிக்கலாம்... பறவைகளும், மனிதர்களும் தங்கள் கூடு விட்டு  மீண்டும் இயல்புக்கு திரும்பலாம்..., எங்கோ தேங்கிக் கிடக்கும் நீரின் கடைசித் துளியை  நிலத்தின் உஷ்ணம் விழுங்கியதோடு மழையின் தடம் மறைந்தே போகலாம்... ஆனால் சற்று முன்... இங்கொரு பலத்த மழை பெய்தது..., அதன் சாரலில் தொட்டு நான் என் உயிரினை.... நனைத்து நனைத்து... அவளுக்காய் ஒரு கவிதை  செய்து கொண்டிருந்தேன்..! தேவா.  சு

அதிர வைக்கும் நித்தியானந்தனின் ஆன்மீக அரசியல்...!

" ஆசை அறுமின்...ஆசை அறுமின்.... ஈசனோடாயினும் ஆசை அறுமின்..." அப்டீன்னு சித்தர்கள் எல்லாம் சொல்லிட்டு இருந்த இடம் தெரியாம வாழ்ந்துட்டு மக்களுக்கு அறிவை கொடுத்துட்டு போய்ட்டாங்க...! இப்ப நித்தியானந்தரு, சத்தியானந்தரு, மதுரை ஆதினம், மன்னார்குடி சாதினம்னு உசுர வாங்குறானுங்க! துறவின்னு சொன்னா என்ன அர்த்தம்னு முதல்ல சொல்லுங்க..... மொதல்ல..? அதுக்கப்புறம் எதை எதை நீங்க தொறந்தீங்கன்னு கொஞ்சம் வாயைத் தொறந்து சொல்லுங்க.... அயோக்கியத்தனம்ங்க......சுத்த அயோக்கியத்தனம். ஊர்ல நாட்ல மனுசன் கஞ்சிக்கும் தண்ணிக்கும் அல்லாடிகிட்டு இருக்கான். வெயில்லயும் வேர்வையிலயும் கை வண்டி இழுத்தும் கட்ட வண்டி ஓட்டியும் ஒரு வேள  சோத்த திங்க நாயா பாடு படவேண்டி இருக்கு. இந்த நாதாரிங்க எல்லாம் தங்கத்துல கிரீடமும், கழுத்து ஜொலிக்க தங்கத்துல ருத்ராட்சங்களையு போட்டுகிட்டு....சிவன் கனவுல வந்தாரு, பார்வதி அம்மா சொன்னிச்சு.. நித்தியானந்தம் தம்பிதான் சரியா வருவாப்ல அதனால ஆதின மடத்துப் பொறுப்ப அவரு கையில கொடுத்துடுங்கன்னு...அதனாலதான்  கொடுத்தோம்னு.... திண்ணாந் திட்டமா போஸ் கொடுத்துக்கிடு பத்திரிக்

அஜித் என்னும் டான்...!

நடிகர்களிடம் எல்லாம் கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று இறுமாப்போடு எப்போதும் வியாக்கியானம் பேசிச் செல்லும் மேதாவிகள் கூட்டத்திற்குள் போலியாய் இருக்க நான் எப்போதும் விரும்பியது இல்லை. ரஜினியை விழுந்து விழுந்து ரசிக்க வெள்ளித் திரை தாண்டிய அவரின் வாழ்க்கை காரணமாய் இருந்தது. ஒரு பஸ் கண்டக்டராய் இருந்து...... நாட்டில் நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் குரல் கொடுத்து விட்டார் என்று சந்தோசப்பட்டு ஒரு கூட்டமும் குரல் கொடுக்கவில்லை ஏன் என்று ஒரு கூட்டமும் எப்போதும் விமர்சித்துக் கொண்டே இருக்கும் ஒரு சூப்பர் ஸ்டாராய் மாறி இருக்கிறார் என்றால்.... அவர் கடந்து வந்த தூரத்தையும் அதைக் கடக்க அவர் சந்தித்து இருக்கும் பிரச்சினைகளையும், வலிகளையும், சோதனைகளையும் சேர்த்தேதான் நாம் பார்க்க வேண்டும். சினிமா வாய்ப்புக்கள் சொற்பமாய் கையில் ரஜினி கையில் வைத்திருந்த காலத்தில் எல்லாம் சாப்பிடாமல் வயிற்றில் ஈரத்துணியை கட்டிக் கொண்டு படுத்திருந்த நேரம் எல்லாம் இருந்திருக்கிறதாம்.. வயிற்றில் பசியோடு அண்ணா சாலையில் நடந்து செல்லும் போதெல்லாம் ரஜினி அங்கே வைக்கப்பட்டிருக்கும் மிகப் பிரபல நடிகர்களின்