Skip to main content

Posts

Showing posts from August, 2012

வேங்கைகளின் மண்... 2 !

அதிர்ந்து கொண்டிருந்தது காடு. அணியணியாய் அங்கே நின்று கொண்டிருந்த மக்களின் கண்களில் பரவிக் கிடந்த அக்னியில் வீரமும், வேட்கையும் நிரம்பியிருந்தன. சிவந்து போயிருந்த அவர்களின் கண்களும் வெயிலில் கருத்துப் போயிருந்த தேகமும் காற்றில் பறந்து கொண்டிருந்த எண்ணையைப் பார்க்காத கேசமும் அடிபட்ட தங்களின் வலிக்கு வஞ்சம் தீர்க்க துடி, துடித்துக் கொண்டிருந்தன. போராளிகள் எல்லோரும் அப்படித்தான்!!!! சொந்த மண்ணை துரோகிகள் கபடமாய் கூட்டு சேர்ந்து களவாடிக் கொண்டு வென்று விடுவது வெறும் மண்ணை மட்டுமல்ல, அந்த மண்ணில் காலங்காலமாய்  வாழ்ந்த மனிதர்களின் உரிமைகளை, கனவுகளை, பெருமைகளை எல்லாம் சேர்த்துதான் எடுத்துக் கொள்கிறார்கள். ஒவ்வொரு விதையும் ஒவ்வொரு மண்ணில் ஆழமாய் வேரூன்றி செழித்து வளரும். தட்ப, வெட்ப பூகோள ரீதியாய் ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு இயல்புண்டு.  ஒவ்வொரு மண்ணிலும் அந்த அந்த மண்ணிலிருந்து கிடைத்த தாதுப் பொருட்களை காய்களாகவும், கனிகளாகவும், மாமிசமாகவும், நீராகவும் உட்கொண்டு அந்த மண்ணில் படுத்து, புரண்டு பேசி சிரித்து, கூடிக் களித்து, நுரையீரல்கள் ததும்ப ததும்ப பிராணனை சுவாசித்து வளரும் மக்களுக்கும் அந்த

வேங்கைகளின் மண்.....!

வரலாற்றின் மறக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட பக்கங்களாய் வீரம் மிகுந்த சிவகங்கைச் சீமையின் சுதந்திரப்போர் அமைந்து போய்விட்டது. அந்த மண்ணைச் சேர்ந்த மக்கள்  உண்மைகளை சரியாக முன்னெடுத்து பொதுவெளிக்கு கொண்டு வரவில்லையா? இல்லை ஆதிக்க அரசியல் அந்த முயற்சிகளை எல்லாம் சாய்த்துப் போட்டுவிட்டதா என்ற கேள்விகள் எல்லாம் ஏதோ ஒரு சோகத்தை உள்ளுக்குள் பரவவிடுவதை தவிர்க்க முடியவில்லை. வாழ்க்கையில் வெறுமையை நிறைய அனுபவித்து வாழ்ந்து கொண்டு உப்புக்காற்றையும், உறைக்கும் வெயிலையும் உடலில் வாங்கிக் கொண்டு கரடுமுரடான  செம்மண் பூமிக்குள் எப்போதும் வானம்பார்த்து வாழும் வீர மைந்தர்களை பதிவு செய்து கொள்வதில் வரலாற்றுக்கும் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மைதான் போலும்.... சுதந்திரப்போராட்ட வரலாற்றை இந்திய தேசம் பக்கம் பக்கமாய் எழுதி நிரப்பிக் கொண்டு போனால் போகிறது என்று மிச்சமிருக்கும் உணவினை பிச்சைக்காரனுக்குப் போடும் எஜமானனாய் சிவகங்கைச்சீமைக்கும் கொஞ்சம் இடம் கொடுத்திருக்கிறது. இந்த மண்ணின் மக்களும், இந்த மண்ணிலிருந்து மேலெழும்பி பிரபலமான மனிதர்களும் சிவகங்கைச் சீமையை எப்போதும் வெளி அரங்கில் பிரதிபலித்ததில்லை. அரச

இருப்பது ஒன்றுதான்.... !

ஆடிய காலும், பாடிய வாயும் எப்போதும் ஓய்ந்திருக்காது, ஏனென்றால் அது ஒரு வேட்கை. எழுதுவதும் அப்படித்தான் நிகழ்வுகளை உள்வாங்கிச் செரித்து அதை அனுபவமாக்கிப் பார்க்கும் ஒரு வித்தை.  ஒவ்வொரு வரிகளையும் நகர்த்தும் போது உள்ளுக்குள் நடக்கும் மாற்றங்களை நாம் உற்று நோக்கி அனுபவமும் புரிதலும் வார்த்தையாய் வந்து காகிதத்தின் வெள்ளைப் பக்கங்களில் எழுத்துக்களாய் மோதும் தருணம் சுகமானது. இறை தேடல் என்பதை இரை தேடல் என்று விளங்கிக் கொண்டிருப்பேனோ என்னவோ பசித்து உண்டு, பின் உண்ட சுகத்தில் லயித்துக் கிடந்து பின் மீண்டும் பசிக்க, மீண்டும் புசித்து..... இப்படியான தொடர் நிகழ்வான பெரும் பயணத்தில் கண்டடையப்போவது எதுவுமில்லை என்ற ஒரு நிதர்சனம் அழுத்தமான கீறலாய் உள்ளுக்குள் பதிந்து போய்க் கிடக்கிறது. வலி என்பது எப்படி ஒரு உணர்வோ அதே போல விளக்க முடியாததாய் இது போன்ற அனுமானங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் பார்வையை தெளிவாக்கிக் கொண்டிருக்கிறன. கடவுளென்ற பெருஞ்சக்தி எப்போதும் தனித்து வந்து பக்தா தந்தேன் அபயம் என்று சொல்லி வரங்கள் கொடுத்ததாய் புராணங்களில் இருக்கிறது. கண்டேன் என்றவரால் எல்லாம் ஊருக்கும்

போகிற போக்கில்....!

காலைப் பேருந்து என்பதால் இருக்கை பிடித்து அமர்வதில் சிக்கல் ஒன்றும் பெரிதாய் இருக்கவில்லை. வண்டிய எடுங்கண்ணே... நேரம் ஆச்சு அடுத்த காரு வந்துருச்சுல்ல.... அதிகாரமாய் சப்தம் போட்டு அதட்டிக் கொண்டிருந்த அந்த குரலுக்கும் கெச்சலான லொட லொட சட்டை போட்ட நபருக்கும்  சம்பந்தமில்லை. கையிலொரு நோட்டும் பேனாவுமாய் பரபரப்பாய் இருந்த அவர்தான் டைம் கீப்பர் என்று புரிந்து கொள்ள முடிந்தது. வண்டி பேருந்து நிலையத்திலிருந்து மெல்ல நகர, நகர வெளியே காத்திருந்த காலை நேர காற்றும் சடாரென்று ஜன்னல்கள் வழியே பேருந்துக்குள் ஏறிக் கொள்ள...நான் ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தேன். எல்லாவிதத்திலும் முன்னேறி விட்டோம் என்று புஜம் தட்டிக் கொண்டு, வல்லரசுதானே நாம் என்று நம்மை நாமே கேட்டு, கேட்டு நம்பிக் கொண்டிருக்கும் நமது தேசத்தின் குடிமகன்கள், பேருந்து நிலையத்திற்கு எதிராகவே மூக்கைத் துளைக்கும் சாக்கடையில் பிரஞை இன்றி மூத்திரம் கழித்துக் கொண்டிருந்தனர்.... இருந்தாலும் ஒவ்வொருவரிடமும் இருக்கும் அலை பேசியில் ஏதோ ஒரு அலைக்கற்றை உலகத்தை கொண்டு வந்து அவர்கள் முன் இணையம் என்ற பெயரில் கடை

நினைவுகளோடு....

அழுத்தமாய் நீ கொடுத்துச் சென்ற முத்தத்தின் அதிர்வுகள் சிதறிக்கிடக்கும் புத்திக்குள் ஒரு இராட்சசியாய் அமர்ந்து கொண்டு காதல் மொழி பேசுகிறாய் நீ.... கடைசியாய் நீ பார்த்துச் சென்ற கூர்மையான பார்வையை மொழி பெயர்க்கும் முயற்சியோடு பேனாவுக்கும் வெள்ளைக் காகிதத்துக்குமான இடைவெளியில் உன் நினைவுகளோடு அலைந்து கொண்டிருக்கிறேன் நான்....! விடியலைத் துப்பிச் சென்ற இரவொன்று உயிர் மாற்றி உடல்களுக்குள் புகுத்தி விட்டு இயல்பாய்தான் அந்த பொழுது விடிந்ததாய் அழுத்தமாய் சொன்ன பொய்யை.... உன் விழி நீரால் நீ அழித்து அழித்து என் உயிர் பற்றி நகர்ந்து விட்டாய் நானோ.... மத யானையாய் அலையும் ஒரு தீராக் காதலை உயிராய் ஏந்திக் கொண்டு மெளனமாய் வெற்று வானத்தின் நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருக்கிறேன்.... உன் நினைவுகளோடு....! தேவா. S

இது உயிருள்ள மண்...இங்கே ஜீவன் இருக்கிறது.....!

ஒரு மாதிரி நெகிழ்வாகத்தான் இருந்தது மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் ஊருக்கு வந்த அனுபவம். கூர்மையாய் கவனித்துப் பார்த்த போது ஏர்கிராஃப்ட் விட்டு வெளியே வந்து சென்னையில் பரவிக் கிடந்த பிராணனை நாசிக்குள் ஆழமாய் சுவாசித்த அந்த கணம் கருப்பையிலிருந்து வெளி வந்து முதல் சுவாசத்தை ஏற்றுக் கொண்ட ஒரு குழந்தையாய் மனம் குதுகலிக்கத்தான் செய்தது. பிராணான் என்பது வெறும் பிராணன் அல்ல. இதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகமெங்கும் பிராணன் என்னும் ஆக்சிஜன் ததும்பி நிரம்பி வழிகிறதுதான் நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் ஒவ்வொரு மண்ணிலும் அது பல அதிர்வுகளை தன்னுள் ஏந்திக் கொண்டு வித்தியாசமாய்த் தானிருக்கிறது. பெரும்பாலும் நாம் இதை கவனிப்பதில்லை. நாம்  ஏதேதோ சிந்தனைகளில் பொதுவாய் சூட்சும விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நின்று கூர்ந்து கவனிக்காமல் அடுத்த அடுத்த நிகழ்வுகளை நோக்கி நகர்ந்து விடுகிறோம். சென்னை விமான நிலையத்தில் பணி செய்பவர்கள் அத்தனை பேரும் பரபரப்பாய் இருந்தாலும் எனக்கு அவர்கள் உள்ளுக்குள் நிதானமாய் இருப்பதாய் தெரிந்தார்கள். என்னோடு உடன் வந்த அத்தனை