Skip to main content

Posts

Showing posts from September, 2012

சிதம்பர ரகசியம் - 2

சிவன் என்ற உடனேயே சிறுவயதிலிருந்து அறிமுகம் செய்யப்பட்ட ஜடாமுடியும், தலையில் கங்கையும், நெற்றிக்கண்ணும், கருணையைச் சுரக்கும் விழிகளும், விடத்தை கண்டத்தில் கொண்டு, கழுத்தில் பாம்போடு புலித்தோலை உடுத்திக் கொண்டு கையில் டமருகத்தோடு சாம்பல் பூசிய மேனியோடான ஒரு தோற்றமும் ஒருவித கிறக்கத்தைக் கொடுத்து விட.. யார் இந்த சிவன் ? ஏன் இப்படி இருக்கிறார் ? எல்லா கடவுளர்களும் தங்கத்தாலும், வைரத்தாலும் அலங்கரித்துக் கொண்டு பகட்டாய் இருக்கும் போது என் சிவன் மட்டும் ஏன் சுடுகாட்டில் இருக்க வேண்டும்..? ஞானத்தின் கடவுளாய் ஏன் சிவனைச் சித்தரிக்கிறார்கள்...? என்றெல்லாம் யோசித்து இருக்கிறேன். இப்படியாய் யோசித்ததே சிவனை என் முன்னால் ஒரு சூப்பர் பவராய் எனக்குள் நிறுவி விட... ஆக்கவும், அழிக்கவும் தெரிந்த எல்லாம் வல்ல சக்தியாய்ப் பார்த்து, பணிந்து சிவன் யார் என்ற கேள்விக்கு விடையைத் தேடினேன். எப்போதும் என் தேடலுக்கான பதில் மனதை மட்டும் நிறைவு செய்து விடக்கூடாது.... அது எப்போதும் என் அறிவினையும் பூர்த்தி செய்ய வேண்டும். என் எதிரே கடவுளே வந்தாலும்... படக்கென்ற

வானமகள், நாணுகிறாள்....!

அமீரகத்தின் கோடைக்காலம் கொஞ்சம் பலவீனப்பட ஆரம்பித்திருக்கிறது. கனத்து அடர்ந்து வீசிய கந்தகக் காற்று கொஞ்சம் தடிமன் குறைந்து மெலிதாய் சிலிர்த்து சிரிக்க ஆரம்பித்திருக்கிறது. கோடையை கொடையாய்க் கொடுத்த காலம் கடும் குளிருக்கு முந்தைய வசந்தகாலத்தில் இன்னும் ஒரிரு வாரங்களில் அடி எடுத்து வைத்து விடும். துபாய் முழுவதும் சாலையோரங்களில் கோடையிலும் பசுமையாய்ச் சிரித்த பசும் புற்களைத் தாலாட்ட தென்றல் தாய் வந்துவிடுவாள். இனி என்ன... குதூகலம்தான் கொண்டாட்டம்தான்... விதவிதமான பூக்களை சொரிந்த படியே சாலையோரத்துச் செடிகள் தலையசைத்துச் சிரிக்கப் போகின்றன. சோகமாய் கடற்பரப்பில் பறந்து கொண்டிருந்த சீகல் பறவைகள் கூட்டத்தோடு கூட்டணி சேர, கடற்கடந்து இன்னமும் பறவைகள் கூட்டம் வந்து சேரும்... புறாக்கள் எல்லாம் பேசிச் சிரித்தபடி சாலைகளைக் கடந்து சென்று புல்வெளியில் படுத்துறங்கும்.... கோடையினைக் கடந்து அமீரகம் குளிர் காலத்துக்குள் நுழையும் அழகே தனிதான்...!  நாட்கள் செல்ல செல்ல சாலைகளை அடைத்து நிற்கும் பனிக்கூட்டமும், அதை விரட்ட வாகனங்கள் காலை எட்டு மணிக்கும் விளக்கிட்டு செல்லும் வேகமும், மழையை இப்போதோ

தேடல்...21.09.2012!

முன்பு ஒரு காலத்தில் கடவுளைத் தேடி ஓடிக் கொண்டிருந்தேன். நேர்த்திக்கடன்களை வாங்கிக் கொண்டு அந்தக் கடவுள் வாழ்க்கையை சீரமைத்து விடுவார் என்று நம்பினேன். நான்கு வயதில் கோவில் உண்டியலில் காசு போடச் சொல்லி கொடுத்த போது, காசு நிறைய போட்டா சாமி நிறைய கொடுப்பார் என்று கற்றுக் கொடுக்கப்பட்டது. நாளடைவில் நூறு ரூபாய் போடுபவனுக்குத்தானே சாமி நிறைய கொடுப்பார் என்று கையிலிருந்த பத்து ரூபாயை மடக்கி பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்த நாட்களும் உண்டு. சிதறு காய் உடைத்து தேங்காய் நேர்த்திக் கடனாய் கடவுளுக்கு கொடுக்கலாம் என்று சொல்லப்பட்ட போது இது கொஞ்சம் வேறு மாதிரி இருக்கிறதே என்று அடிக்கடி தேங்காய் நேர்ந்து கொண்டு பின் அது ஒரு தோப்பையே விலைக்கு வாங்கும் அளவு அதிகமாகிப் போக நேர்த்திக்கடன் செய்யாவிட்டால் கடவுள் தண்டிப்பாரோ என்ற பயத்தில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனிலிருந்து மெதுவாய் வெளியே வந்து விட்டென். பத்தாவது படித்த போது பொதுத் தேர்வு முடித்து விட்டு மதுக்கூர் காளியம்மன் கோவில் கர்ப்பகிரகத்துக்குப் பின்னால் எண்ணெய் பிசுக்கான பலிபீடத்திலிருந

விநாயகனே...வினை தீர்ப்பவனே...!

காவிரி ஆறுன்னு சொன்னா எங்களுக்கு கல்யாணை ஓடை கால்வாய் தான். ஆத்துல தண்ணி வந்துருச்சுடோய்ய்ய்ய்ய்ய்னு..... கத்திக்கிட்டு துண்ட எடுத்து வீட்டுக்குத் தெரியாம இடுப்புல சுத்திக்கிட்டு மேல சட்டையப் போட்டு மறைச்சுக்கிட்டு பயலுகளோட ஓடிப்போயி எல்லோரும் தாவுற சந்தோத்தை இன்னொரு தடவ தாவித்தான் காட்ட முடியுமே தவிர எழுத்துல கொண்டு வர்றது கஷ்டம்... பழைய மதுக்கூர்ல இருந்து மதுக்கூர்க்குள்ள தண்ணி உள்ள வந்துச்சுன்னா சுப்பையன் ஓட்டல்ல கொல்லப்புறமா ஆத்துக்குள்ள வீசி எறிஞ்ச எச்சி எலைய எல்லாம் துடைச்சு அள்ளிக்கிட்டு செத்த, குப்பை எல்லாம்  வாரி அடிச்சுக்கிட்டு போகும். தண்ணி வந்த ரெண்டு  நாளைக்கு குளிக்கப்புடாதுடா... ஆத்துலதான் தண்ணி இல்லையேன்னு சொல்லிட்டு உள்ளயே அசிங்கம் பண்ணி வச்சு இருப்பாய்ங்கன்னு பசங்க குசு குசுன்னு ஒருத்தன் காதுல மாத்தி ஒருத்தன் சொல்லி பள்ளிக் கூடத்துக்குள்ளயே ஆத்துல தண்ணி வந்த விசயத்தை ஒரு திருவிழா மாதிரி கொண்டாடிகிட்டு இருப்போம். ஆறுன்னு சொன்னா எங்க ஊருக்குள்ள வர்றது ஒரு சின்ன கால்வாய்தான்னு வச்சுக்கோங்களேன். ஊரச்சுத்தி அம்புட்டு குளம் இருக்கு, பெரிய ஏரி ஒண்ணு இருக்கு. தஞ்சாவூர் ஜி

நான் உனக்கு யாருமில்லை...!

நீ எழுதி வைத்த பழைய கவிதைகளை மீண்டும் எடுத்து வாசிக்கிறேன் கடந்து போன வாழ்க்கையை மீண்டுமொரு முறை பார்க்கும் ஒரு புகைப்படத் தொகுப்பை போல ப்ரியங்களை நாம் சுமந்து திரிந்த அந்தக் தருணங்களை மீண்டும் மீட்டெத்துக் கொடுக்கும் வரிகளை வாசித்துக் கொண்டிருக்கையில் என்னை மீறி வரும் கண்ணீரில் ஒளிந்திருப்பது உன் மீதான காதலா இல்லை உன்னை பிரிந்த ஏக்கமா என்ற கேள்வியொன்று எட்டிப்பார்த்தது.... நான் அதன் முனை ஒடித்து எறிந்து விட்டு மீண்டும் உன் வரிகளுக்குள் மூழ்குகிறேன்... உன்  வார்த்தைகளுக்குள் முதல் முதலாய் நான் உன்னைத் தேடாமல் என்னைத் தேட ஆரம்பித்திருந்தேன் நீ விட்டுச் சென்றிருக்கும் இந்த நீண்ட நெடிய மெளனத்தில் என்னையே நான் பார்க்க நீ....கற்றுக் கொடுத்திருப்பதாய் எனக்கு தோன்றுகிறது; ஒரு பெருமூச்சுடன்..... என் வீட்டுச் ஜன்னலைத் திறக்கிறேன்.... அப்போதுதான் பெய்து முடித்திருந்த மழையை சேகரித்து வைத்திருந்த மல்லிகைச் செடியொன்று.... ஒவ்வொரு துளியாய் சொட்டிக் கொண்டிருக்கிறது..., ஜன்னல் கம்பிகளில் முகம் புதைக்கிறேன் வேகமாய் உன் ஞாபகங்கள் ஓடி வந்து என்னை சூழ்ந்து கொள்கின்றன....

சம்போ.....!

நான் வாழ்க்கையைத் துரத்திக் கொண்டிருக்கிறேன். வாழ்க்கை என்னைத் துரத்திக் கொண்டிருக்கிறது. எண் சாண் உடம்படி இது, வெறும் தோற்பையடி பெண்ணே, வயிற்றுப் பசிக்காய் வாழ்க்கையை விஸ்தாரித்துக் கொள்ளும் மட மானுட கூட்டமடி இது, சந்தோசைத்தை மட்டுமே குறி வைத்துச் செல்லும் சந்தையடி இது, உறங்கிப்போகையில் சகலமும் இழந்து போகும் தினசரி பாடங்களை வசதியாய் மறந்து போய்... விழித்துக் கொண்டிருக்கையில் பொருள் சேர்க்க, புகழ் சேர்க்க பேசித் திரியும் பதுமைகள் நிறைந்த பூமியடி.... நான் கனவு வாழ்க்கையை களைந்து விட்டு எங்கோ செல்ல முற்படுகையில் லெளகீகத்தில் சிக்கிக் கொண்ட பாவியடி..... தளை அறுக்க முயன்று, முயன்று அந்த முயற்சிகள் எல்லாம் புதிது புதிதாய் முடிச்சுப் போட.. மூச்சுத் திணறி எதுவுமற்று இருக்கையில், தானே முடிச்சுக்கள் அவிழக் கண்டு எதுவுமற்ற இந்தப் பிறப்பைக் கடந்து போக நினைக்கும் ஒரு பொதி சுமக்கும் கழுதையடி நான்... உன்னை வசீகரிக்க என்னில் ஒன்றுமில்லை. வசீகரம் என்று நீ சொல்வது எல்லாம் எனது பலவீனங்கள். நான் கரடு முரடானவன். கட்டுக்கள் இல்லாமல் சீறிப்பாய்பவன். அப்படி சீறிப்பாய்வதாலேயே திமிர் பிடித்தவன் என்று, திம

ஹாய்...12.05.2011!

எக்காலமும் நிலைத்து நிற்கும் எழுத்துக்களுக்கு சமகால நிகழ்வுகளின் சாரம் மட்டுமே போதும். சமகால நிகழ்வுகளோடு பந்தப்பட்ட எழுத்துக்கள் ஒரு 20 வருடங்கள் கழித்து எடுத்து வாசிக்கும் போது கண்டிப்பாய் சுவாரஸ்யம் கொடுக்கும் என்று சொல்ல முடியாது. விஜயகாந்த் வேட்பாளாரை தாக்கி அடித்தது அந்த சமயத்தில் பரபரப்பு இருபது வருடம் கழித்து அது ஒரு செய்தியளவிலேயே நிற்கும் காலங்கள் கடந்தும் நிலைத்து நிற்காது. இப்படித்தான் அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகள் ஒரு நாள் அல்லது இரு நாள் கழித்து அல்லது ஒரிரு மாதம் அல்லது வருடங்களில் செத்துப் போகும். முக்காலமும் படிப்பினை கொடுக்கும் விசயங்கள் எல்லாம் ஆத்மார்த்தமாக வெளிப்பட்டவை. இந்த வகையிலேதான் தமிழ் நாட்டின் பெரும்பாலான கோவில்கள் உருவாக்கப்பட்டன. இந்திய தேசத்தில் தமிழக கோவில்கள் எல்லாம் கலைப் பொக்கிஷங்கள். அவை எல்லாம் மனிதனின் உள்ளுணர்வு தெளிவாக ஏதேதோ உணர்த்த, உணர்த்த அவற்றை எண்ணங்களால் உற்றுப் பார்த்து மனதினால் களிமண் பிசைவது போல பிசைந்து சக மனிதர்களிடம் கூறி அவற்றை விவாதித்து அவற்றை வரைபடங்களாக்கி, சாதக, பாதகங்களின் கூறுகளை திட்டமிட்டு பெரும் மனி

பதிவு எனப்படுவது யாதெனில்....!

முன்னாடி எல்லாம் விகடன் எப்படா வரும் அதுல விமர்சனத்துக்கு எத்தனை மார்க்கு போட்டு இருக்காங்களோன்னு பார்க்க அடிச்சு பிடிச்சு காத்துட்டு இருப்போம். 100க்கு 40 மார்க்குக்கு மேல போட்டு இருந்தாங்கன்னா ஓரளவுக்கு படத்தைப் பார்க்கலாம் போலடான்னு  கூட்டாளிங்களுக்குள்ள பேசிக்குவோம். விகடன் விமர்சனக்குழுவுக்கு அவ்ளோ ஒரு மரியாதை கொடுத்து பார்த்த காலம் அது... பெரும்பாலும் எனக்குத் தெரிஞ்சு ரஜினி படத்துக்கு அவுங்க 45ஐ தாண்டி மேல மார்க் கொடுத்தது கிடையாது, அப்போ அப்போ ஏதாச்சும் ஒரு படம் 50க்கிட்ட வர்றதுல என்னைய மாதிரி ரஜினி ரசிகர்களுக்கு எல்லாம் விகடன் மேல செம கடுப்புன்னு வச்சுக்கோங்க... கூடவே கமல் படத்துக்கு எப்பவுமே விகடன் ஒரு ஹைப் கொடுத்துட்டே இருக்கறது  இன்னமும் டென்சன் ஆகும், ஆனாலும் விகடன் விமர்சனம்ன்னு சொன்னா எல்லோருமே ஒரு ரேஞ்ச்லதான் பார்த்துட்டு இருப்போம்... குமுதம், ராணி, குங்குமம்,  இன்ன பிற அஸ்கா பிஸ்கா மேகஸீன்ஸ் எல்லாம் ஒரு ஒப்புக்கு வாங்கி விமர்சனம் படிக்கிறதும் உண்டு. அப்போ எல்லாம் சினிமா வெளிவந்த உடனேயே எப்படா விமர்சனம் வரும்னு காத்துக்கிட்டு இருக்கறது ஒரு அலாதியான சுகம்னு வச்சுக்கோ