Skip to main content

Posts

Showing posts from May, 2013

கனவுகள் பூக்கும் காடு.....!

கொஞ்சம் காலம் முன்பு ஹார்மோன் செய்யும் கலகம்தானடா என்ற பெயரில் ஒரு தொடரை தொடங்கி  இரண்டாவது பாகத்தோடு நிறுத்தியிருந்தேன். அனுபவங்கள்தான் வாழ்க்கையைக் கட்டமைக்கிறது. கனவுகள் வாழ்க்கையை  ஆள்கிறது. அதனால் மீண்டும் கனவுகளை நிரப்பிக் கொண்டு எல்லைகளற்ற பெருவெளியில் சிறகுகளை விரிக்கலாம் என்று நினைத்திருக்கிறேன்.  இந்தத் தொடரை நான் எழுத ஆரம்பித்திருந்த நேரத்தில் பதிவுலகம் என்ற ஒன்று இருந்தது. நிறைய பதிவர்கள் தினம், தினம் எழுதிக் கொண்டிருந்தனர். தமிழில் தட்டச்சு செய்து நமது உணர்வுகளைப் பதியலாம் என்று ஒருவித உற்சாகத்தில் நிறைய, நிறைய, நிறைய பேர்கள் எழுதிக் கொண்டிருந்த நேரம் அது. படிக்க பள்ளிக்கூடத்திற்கு செல்லாமல் மதிய உணவு கிடைக்குமே என்று பள்ளிக்குச் செல்லும் சிறுவனைப் போல இலக்கிய தாகத்தில் எழுத வந்த ஆள் இல்லை நான்...வாழ்க்கையின் ஓட்டத்தில் கிடைத்த அலாதியான நினைவுகளை எழுதிப் பார்க்க வந்தவன். எல்லோரையும் போல சமூகக் கோபங்கள் எனக்கும் இருக்கிறது. சமூகத்தின் அடிப்படையில் இருக்கும் புரிதலின்மைக்கு காரணம் ஆன்மவிழிப்பு இல்லாததுதான் என்பதை உறுதியாக நம்புவன். ஆன்மீகம் என்பது என்னைப் பொறுத்

முள்ளிவாய்க்கால் சோகம்...நான்காமாண்டு நினைவுநாள்!

நான்காண்டுகள் ஓடோடி விட்டன. ஆறாத வடுக்களாய் இன்னமும் நம்முள் பரவிக்கிடக்கும் சோகச் சுவடுகளை காலம் எப்போதும் அழித்து விடமுடியாது. உலகில் இருக்கும் தொன்மையான கட்டிடங்கள், பறவைகள், விலங்குகள், நினைவுச் சின்னங்கள் எல்லாம் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்று மனிதம் பெருமைப் பேசிக் கொண்டிருந்த போதே மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான மூத்த மொழி பேசி வாழ்ந்த ஒரு தேசிய இனம்  கொத்து கொத்தாக ஈழத்தில் இன்றுதான்  அழித்தொழிக்கப்பட்டது. அடிப்படையில் சுதந்திரமாய் தன் சொந்த மண்ணில் வாழ விரும்பிய ஒரே காரணத்திற்காக போராடிய மக்களை அநீதி கொன்றழித்ததை  பதிந்து கொண்டு காலம் தலைகுனிந்து கொண்டது. சொந்த மண்ணில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட பூர்வகுடிகளின் வாழ்வியியல் உரிமைப் போரட்டத்தை தீவிரவாதம் என்று முத்திரை குத்திய மிருகங்கள் இதோ நம் கண் முன்னே ஆர்ப்பட்டமாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சர்வதேசம் எப்போதுமே வெட்கக்கேட்டினை தனது முகத்தில் வடுக்களாய் ஏந்தியபடியே நகர்ந்து கொண்டிருக்கிறது. வரலாற்றை திருப்பிப் பார்த்தால்  சத்தியமும் நீதியும் எவ்வளவு ஜெயித்திருக்கிறதோ அதற்குச் சரிக்கு சமமாக அல்லது கூடுதல

புத்தனின் கனவு...!

மேகங்களுக்கென்று திசையொன்றும் இருப்பதில்லை காட்டு மலர்கள்  யார் பார்க்கவும் பூப்பதுமில்லை ப்ரியங்கள் என்னும் விதையில் விரிந்து கிடக்கிறது அகண்டப் பெருவெளி...! இரவுகளை உடுத்திக் கொண்டு வருவதெல்லாம் பகல்களென்றும் பகல்களுக்குள் படுத்திருப்பது இரவென்றும் யார்தான் அறிவார்..? கனவுகளை எல்லாம் விழிகளொன்றும் காண்பதில்லையே... அவை புலனறிவுக்கு அகப்படாத புத்த நிலையின் தத்துவ விளக்கங்கள்தானே....! பெயரில்லாத ஒன்றுக்கு எத்தனை பெயரிட்டாலும் அது பெயரில்லாததே.... திட்டமிடாத புத்தி எந்த திசையைத்தான் கால்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட முடியும்..? தேவா. S

யாசகன்...!

வீதியிலிறங்கியாயிற்று. தீர்மானத்திலொரு மாற்றமுமில்லை. கடமைகளென விதிக்கப்பட்ட பொய்களை புள்ளி விபரத்தோடு தீர்த்துமாயிற்று. தேவைகளை தீர்த்த பின்பு யாருக்கும் தேவையில்லாதவனாய் என்னை மாற்றிக் கொண்டாயிற்று. உயிரைச் சுமந்து கொண்டிருக்கிறேனென்ற கள்ளப் பெருமிதம் கொண்ட உடலைப் பொதியெனச்  சுமந்து சிரித்தபடியே உயிராய் கிளம்பியாயிற்று. கால்களின் திசைகளை தயவு செய்து கணித்து விடாதே என் புத்தியே, கனவுகள் என்று எந்தக் கருத்தையும் விஸ்தரித்துப் பார்த்து விடாதே என் மனமே..! நான் காலப் பள்ளத்தை அறிவினை உடைத்தெறிந்து தாண்டி இருக்கிறேன். கற்பிதங்கள் கொண்ட வாழ்க்கையை தீயிட்டுக் கொளுத்திய திருப்தியில் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையின் வடிவம் தேவைகளில் இல்லை. வாழ்க்கையின் வடிவம் தேவைகளற்றது. நிபந்தனைகளற்றது... கொள்கைகளற்றது... சிந்தனைகளற்றது. துள்ளியோடும் புள்ளி மானின் தேவைகளை தீர்த்துக் கொள்ள அது யாதொரு கருத்தும் எடுத்துக் கொள்வதில்லை. இட்ட பிச்சையை புசிக்கும் ஞானத்தை பேரிறை இயற்கையாக்கி வைத்துவிட்டு மனிதனை மட்டும் செயற்கையாக்கி வைத்து விட்டது. எங்கோ செல்லட்டும் என் பயணம். யாருக்காகவும் இல்லாது

சிறகுகள் இன்றி பற...!

இரண்டு பெண்களை அஃபிசியலாய் கடந்த பின்பு ) தன்னுடைய 50+ல் நிஜமான காதலுக்குள் விழுந்திருக்கிறார் முன்னொரு நாளில் காதல் இளவரசன் என்றழைக்கப்பட்டு இப்போது உலகநாயகனாயிருக்கும் ஜீனியஸ் கமல்ஹாசன். எத்தனையோ படங்களில் காதலை நடித்துக்காட்டிய அந்த மாபெரும் கலைஞனை காதல் பூரணமாய் ஆக்கிரமித்து இருந்ததை சமீபத்தில் கண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது. திருமணம்தான் காதலின் உச்சம், அதுவே காதல் வென்றதின் அடையாளம் என்று இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் எனக்குப் பாவமாய்த்தான் இருக்கிறது. நான் +2 படித்துக் கொண்டிருந்த போது ஜுவியில் காதல்படிக்கட்டுகள் என்று பிரபலங்களைக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரை வெளிவந்துக் கொண்டிருந்தது. ஜூவி வந்தவுடன் அடித்துப் பிடித்து வாங்கி வரிவிடாமல் வாசித்து காதலை உள்ளுக்குள் கோடையில் தண்ணீரைப் பிடித்து சட்டைக்குள் ஊற்றிக்கொள்ளும் உற்சாகத்தோடு வாசித்தும் முடிப்பேன். வைரமுத்து எப்போதுமே காதலை வார்த்தைப்படுத்துவதில் இராட்சசன். அவரது வரிகளை வாங்கிக் கொண்டவர்களின் விழிகளில் ' காதல் பூ ' பூக்காமல் இருந்தால் அவர்கள் ஒன்று

பாபாஜியும்...பாட்டாளிமக்கள் கட்சியும்...!

மகா அவதார் பாபாஜி புகைப்படத்தில் புன்னகைத்தபடியே இருக்கிறார். பாபாஜியை தனது திரைப்படத்தின் மூலம் அறியாதவர்களுக்கு அறிமுகப்படுத்திய ரஜினியும் இப்போது மெளனமாய் வேறு வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆமாம் பாபா திரைப்படம் வெளிவந்து இப்போது 9 வருடங்கள் முடிந்திருக்கிறது. பாபா திரைப்படம் சரியாக ஓடவில்லை. வாங்கிய பணத்தை ரஜினி திருப்பிக் கொடுக்குமளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. ரஜினியின் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப் பட்ட அத்தனை பேரும் ரஜினியை வசைபாட அது ஒரு தகுந்த தருணமாயிருந்தது. நிஜத்தில் ரஜினி அப்போது விழுந்திருந்தார் என்பதும் உண்மையே. லெளகீகத்தின் மொழியாக்கத்தில் அது தோல்விப்படம் என்று சொல்லிக் கொள்ளலாம்....ஆனால் ஆன்மீகப்பார்வையில் மகாஅவதார் பாபாஜி ரஜினிக்கு மிகப்பெரிய ஆன்மீக உயரத்தைக் கொடுத்த திருப்பங்கள் நிறைந்த சூழல் அது.  இந்த ஒரு படத்தால் ரஜினி யாருமில்லை, அழிந்து விட்டான் என்று சொன்னால் இத்தனை வருடம் தான் நடித்துப் பெற்ற புகழ் எனக்குத் தேவையில்லை என்று ரஜினியே பேட்டிக் கொடுக்கவேண்டிய சூழல் கூட ஏற்பட்டது. மகாஅவதார் பாபாஜியை ரஜினி மூலம் அறிந்து கொண்ட, ஆன்மீகத் தேடலில் இருந்

சித்திரமே செந்தேன் மழையே...!

படுக்கையிலிருந்தபடியே ஜன்னலைத் திறந்து பார்த்தேன். மழை சோ... வென்று பெய்து கொண்டிருந்தது. சூரியனை வரவே விடக் கூடாது என்ற பிடிவாதத்தில் மேகங்கள் அடர்த்தியாய் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தன. விடியற்காலை மழை எப்போதுமே வசீகரமானது. எனது படுக்கையை ஜன்னலின் ஓரத்தில் ஒட்டினாற்போலத்தான் போட்டு இருப்பேன். ஜன்னலைத் திறந்தால் தெருவோரம் இருக்கும் ஒரு செம்பருத்திச் செடி சிலிரிப்பாய் சிரிக்கும். மழையில் நனைந்தபடியே சபிக்கப்பட்ட மானுடா எழுந்து வெளியே வாடா என்று  என்னைப் பார்த்துக் கண்ணடித்தது. நான் ஜன்னலோரம் தலை நகர்ந்து போர்வையைப் போர்த்திக் கொண்டே மழையின் வாசத்தை நுகர ஆரம்பித்தேன். மழை குளிர்ச்சியானது மட்டுமல்ல, மழை சிலிர்ப்பானது மட்டுமல்ல, மழை சந்தோசமானது மட்டுமல்ல, மழை வாசனையானதும் கூட. மழை பெய்து கொண்டிருக்கும் போது சில்லென்றிருக்கும்  ஜன்னலின் கம்பிகளை கன்னத்தோடு வைத்து தேய்த்துப் பார்த்திருக்கிறீர்களா நீங்கள்? மழையின் சிதறலை வாங்கிக் கொண்டு இரும்பிலிருந்து பிறக்கும் ஒரு உயிருள்ள வாசம் உடலின் எல்லா பாகங்களையும் சிலிர்க்க வைக்கும். மரத்தின் தலையில் விழும் தண்ணீர், அதன் இலைகள்,