Skip to main content

Posts

Showing posts from February, 2014

நலம் நலமறிய அவா...!

எவ்ளோ பரபரப்பா போய்ட்டு இருக்கு வாழ்க்கை. ரோபட்டிக் லைஃபா போச்சு எல்லாமே. எல்லோருக்கும் அவசரம். எல்லாத்துக்கும் அவசரம். வார விடுமுறைய கூட ப்ளான் பண்ணி அவசர அவசரமா அனுபவிக்க வேண்டிய ஒருஅழுத்தம். எப்போ மாறினிச்சு இப்டி வாழ்க்கை? அறிவியல் வளர்ச்சி மொத்தமா நம்மள தின்னுடுச்சா? சுயநலம் பெருகிப் போனதுனால ஏற்பட்டிருக்க ஒரு இன்செக்கியூரிட்டினால நம்மள காப்பாத்திக்க நாம என்ன வேணா செய்யலாம்னு சொல்லி மனசாட்சிய அடகு வச்சிட்டோமா? ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு  3 ஆம் கிளாஸ்ல படிச்ச புத்தனோட வாக்கு அப்போ 2 மார்க் கேள்வி பதிலா தெரிஞ்சுச்சு......இன்னிக்கு அதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்க மாதிரி தோணுது.... ஒண்ண நோக்கி போகும் போது அந்த ஒண்ணு கிடைச்சுடுச்சேன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கும் போது அது தொடர்பான பத்து நம்ம குரல்வளைய நெரிக்க ஆரம்பிச்சுடுது. இதுக்கு அந்த ஒண்ணு கிடைக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு யோசிக்கவும் தோணுது. அரசியல், சினிமா, ஆன்மீகம், மதம்னு எதை எதையோ நிறுவ ஓடிட்டு இருக்கற அவசரத்துல ரசனையில்லாம இந்த வாழ்க்கை மாறிட்டு இருக்கறத யாரும் கவனிக்கிறதே இல்லை. டிவி பொட்டி நம்ம சமூகத

வசீகரா....!

நான் என்னைக் கவிஞன் என்று சொல்லிக் கொள்வதில்லை ஏனென்றால் எனக்கு கவிதை என்றால் என்னவென்றே தெரியாது.  உணர்வுகளை எழுதிப் பார்க்கையில் அவற்றை உரைகல் வைத்து  உராய்த்து பார்க்கும் புத்தியில்லாதவனாதலால் எனக்கு கவிதைகள் தூரமாகியிருக்கலாம்....! கவிதைகள் என்று ஏதோ ஒன்றைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருப்பவர்களுக்கும் எனக்கும் காத தூரம். காதலை கவிதையில் சொல்ல இங்கே பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். விரக்தியை, காமத்தை நேசத்தை, வெற்றியை, தோல்வியை, உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கும் இன்னதென்று அறியாத உணர்வுகளை எழுதி எழுதி கவிதை என்று சொல்கிறார்கள். விபரமறியாச் சிறுவனைப் போல நானும் வேடிக்கை பார்த்துக் கொண்டே நகர்கிறேன். என் வலிகளை நான் எழுதுவதுண்டு. அவை கவிதைகளா என்ன என்று எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரையில் கவிதைகளுக்கும் சமகால எதார்த்தங்களுக்கும் யாதொரு தொடர்பும் இருக்கக் கூடாது என்று நினைப்பவன் நான். கவிதைகள் எப்போதும் நமக்குச் சிறகு கொடுத்து அவை பேசும் களத்துக்கு நம்மை அழைத்துச் செல்ல வேண்டும். கற்பனையற்ற கவிதைகள் நிஜங்களை முகங்களாகக் கொண்டிருக்கையில் அங்கே லயித்துக் கிடக்க என்ன இர

ப்ரியமுள்ள பாலுமகேந்திரா....!

ப்ரியமுள்ள பாலுமகேந்திரா.... .. ஒருமையில் நான் உன்னை எழுதினாலும் ஒருமைக்குள் உன்னை அடைத்துவிடவோ அல்லது அழைத்து விடவோ முடியாதென்பதை நீ அறிவாய். வாழ்க்கை ஒருமையிலிருந்து வெடித்து சிதறிய வேடிக்கைகளின் நிகழ்வுதான் ஆனாலும் அது ஒருமை என்று அறியப்படுவதில்லை. அது எல்லாமே ஆனால் ஒன்று. நீயும் அப்படித்தான் என் ஆசானே....!!!!!!! நீ எல்லாமே ஆனாலும் ஒன்று.  நீ எந்தப் புள்ளியைத் தீட்டினாலும் அது ஓவியமாகிப் போன அதிசயம் நிகழ்ந்தேறியது. நீ செதுக்கிய செல்லுலாய்டு சித்திரங்களில் மழை பெய்தால் அதை திரையில் பார்த்துக் கொண்டிருப்பவனுக்கு குளிரெடுக்கும். பூக்களை நீ காட்சியாக்கினால் வண்ணத்துப் பூச்சிகள் தேனெடுக்க திரையை மொய்க்கும்.... நீ எழுதிய கவிதைகளைத்தான் நாங்கள் திரைப்படம் என்று கொண்டோம். உன் காட்சி அமைப்பும், பாத்திரப்படைப்புகளும் கதைக் களங்களும் ஏகாந்தத்தை அனுபவிக்க ஆவல் கொண்ட மனிதர்களுக்கு சிறகுகள் கொடுத்தன. கோணங்கள் நிறைந்த இவ்வாழ்க்கையின் எல்லா கோணங்களின் கோணல்களையும் அளவெடுத்தன உனது விழிகள். நீ பார்த்தாய். உன் விழிகளால் நாங்களும் பார்த்தோம். சிக்கெடுக்க முடியாத சிக்கல்களுக்குள் நுழைந்த

காற்றில் எந்தன் கீதம்...!

காலையிலேயே மழை வந்து ஜன்னலைத் தட்டி என்னை எழுப்பியது. கண்ணாடி ஜன்னலின் வழியே ஊர்ந்து கொண்டிருந்த மழைத்துளிகளை ஜன்னலை திறக்காமலேயே போர்வைக்குள் இருந்து பாதித் தூக்கத்தில் ரசிக்கும் சுகத்தை விவரிக்க மொழிகளே கிடையாதுதான். மழை விருந்தாளியைப் போல வந்தாலும் கவிதையைப் போல வசீகரித்தாலும் எனக்கு மழை காதலியாய்த்தான் தெரியும் என்று நான் சொல்லி முடிக்கும் முன்னரே உனக்கு வேறு எப்படி தோன்றும்..? நீங்கள் மனதுக்குள் கேள்வி கேட்பது எனக்கும் நன்றாகவே கேட்கிறது. காதலி என்ற ஒரு உறவுக்கும் திருமணத்திற்கும் ஒரு பந்தமும் இல்லை என்று நான் சொல்லி முடிக்கும் முன்பே ஒரு கூட்டம்  நீ எந்த மாதிரியான கலாச்சாரத்தை புகுத்த விரும்புகிறாய் என்று கேள்வி கேட்டு போர்கொடிகள் உயர்த்தும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் ஒரு யு டர்ன் அடித்துக் கொள்ளுவோம். சூடான தேநீரோடு பால்கனியை வீட்டுக்குள் கொண்டு வரும் கண்ணாடி ஜன்னலின் முன்பு நாற்காலியை இழுத்துப் போட்டு வசதியாய் அமர்ந்து கொண்டேன். ஒரு நாள் ஓய்வினை ஓய்வாகவே இருந்து அனுபவித்து விடவேண்டுமென்ற என் பிடிவாதத்தை ரசிக்கவே இந்த வார இறுதியில் வந்தாயா மழையே..? கண்ணடித்துக் கே

யாளி ஒரு கற்பனை மிருகமா...?!

Yali @ my Office தஞ்சாவூர் கோயிலில் கோபுரத்தில் யாளிகளுக்கு என்று தனி வரிசை இருக்கிறது. யாளிகள் இல்லாமல் எந்த ஒரு கோயிலையும் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அந்த அளவு யாளிச் சிற்பங்கள் பெரும்பான்மயான கோயில்களில் இருக்கின்றன. கோயிலின் கலையம்சத்தை உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்ட இந்த யாளிகளை செதுக்கி கூட இருக்கலாம். யாளியில் என்ன கலையம்சம் என்று யோசிக்கிறீர்களா? அதுவிமில்லாமல் சாத்வீகமாய் சமாதானமாய் மன அமைதிக்காக வரும் கோயிலில் ஏன் சீற்றத்தோடு பயங்கரமான அப்படி ஒரு பிரம்மாண்ட மிருகம் என்ற கேள்வியும் நமக்குள் எழத்தான் செய்கிறது. யாளி பிரம்மாண்டமானது என்று எப்படி சொல்கிறாய் என்றுதானே கேட்கிறீர்கள். பெரும்பாலும் யாளிகள் யானையின் துதிக்கையைப் பிடித்து கோபத்தோடு தூக்குவது போன்ற சிற்பங்களை கவனித்து யானையின் வடிவோடு ஒப்பிட்டு யாளியை பெரிதுபடுத்திப் பார்த்த போது இந்தப் பிரம்மாண்டம் எனக்குள் தோன்றியது. சிங்கமுக யாளி, மகர யாளி, யானை யாளி இந்த மூன்று வகையில்தான் யாளிகள்  பெரும்பாலும் செதுக்கப்பட்டிருக்கின்றன. மூன்று வகையாய் இருந்தாலும் இந்த யாளிகளை உருவாக்க அடைப்படையாய் அவர்களுக்க