Skip to main content

Posts

Showing posts from March, 2014

யாத்திரை....!

கடும் சூடு நிறைந்த பொட்டல் வெளி அது. சுற்றிலும் செம்மண் சரளைக் கற்களும் ஆங்காங்கே முட்கள் நிரம்பிய கருவேலம் மரங்களும், சப்பாத்திக் கள்ளிகளும் மட்டுமே நிரம்பிக் கிடந்தன. அந்த புளிய மரத்தின் கீழ் நான் நின்று கொண்டிருந்தேன். கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இரண்டு மண் மேடுகள் சுற்றிலும் செங்கல் வைத்து அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இடது புறம் அப்பத்தாவும் வலதுபுறம் தாத்தாவும் அங்கேதான் புதைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வசித்த வீடு எனக்குப் பின்னால் கொஞ்ச தூரத்தில் அதுவும் கண்ணெதிரேயே தெரிந்தது. எனக்கு முன்னால் அவர்களின் சமாதியும், பின்னால் அவர்கள் வாழ்ந்த வீடும், நடுவில் நானும்..... சுற்றிலும் இருந்த பனைமரங்கள் அனலாய் வீசிய காற்றோடு ஏதோ பேசிக்கொண்டிருந்தன. தாத்தா நட்டு வைத்த மரங்கள்தான் அவை அத்தனையும்... வானம் பார்த்த பூமியின் புஞ்சைக்காடு பார்ப்பதற்கு அவ்வளவு சுகமாய் ஒன்றும் இருக்காது. பயன்படுத்தாத தரிசு நிலங்கள் தோறும் வகை தொகை இல்லாமல் முட்களும், கரம்பைகளும் பெயர் தெரியாத பல செடிகளும் இஷ்டப்படி வளர்ந்து கிடக்கும். எது வருமோ அது வளரும். என் பூர்வீக வீட்டுக்கு பின் இருக்கும் இ

MH 370 ஒரு அவிழ்க்க முடியாத ரகசியம்...!

ஒவ்வொரு முறை நண்பர்களையும், உறவுகளையும் சந்தித்திப் பிரியும் போது இன்முகத்தோடே செல்ல வேண்டுமென்று என் அப்பா அடிக்கடி கூறுவார். நிதர்சனமில்லாத இந்த வாழ்க்கையில் எது வேண்டுமானலும் அடுத்த கணம் நிகழலாம் என்ற ஒரே ஒரு உண்மையைத் தவிர வேறு பெரிய உண்மை ஒன்றும் கிடையாது.  எம்.எச் 370 விமானத்தில் பயணித்தது 239 வெவ்வேறு வாழ்க்கைகள். அண்ணன்கள், தம்பிகள், அக்காக்கள், பெரியப்பாக்கள், சித்தப்பாக்கள், மகள்கள், மகன்கள், கணவன்கள், மனைவிகள், அதிகாரிகள், தொழிலதிபர்கள், பணியாளர்கள், என்று பல்வேறு அடையாளங்களோடு அதில் பயணித்தது வாழ்க்கை. உற்சாகமாய் வழியனுப்பி வைத்தது எத்தனை உறவுகளோ? உற்சாகமாய் வரவேற்க காத்திருந்தது எத்தனை உறவுகளோ? எத்தனை பேரின் சந்தோசங்கள் இன்று நிலைகுலைந்து போயிருக்கிறது என்று எண்ணிப் பார்க்கவே முடியாத ஒரு பெருந்துயரம் இது. ஒவ்வொரு வாக்குறுதிகள் கொடுக்கும் போதும் குறிப்பாக ஒவ்வொருமுறை விமானத்தில் ஏறும் போதும் இன்ஷா அல்லாஹ் என்ற வார்த்தை எனக்குள் அசரீரியாய் கேட்டுக் கொண்டிருக்கும். பால்யத்திலிருந்து நான் வளர்ந்த, என்னை வளர்த்த சமூகம் அது ஆதலால் இஸ்லாத்தின் மீது அதிக பிடிப்புகள்

பேசுவது யார்...கடவுளா?

எந்த நுனியை பற்றிக்கொள்வது என்பது தான் தெரியவில்லை. ஏதோ ஒரு நுனியைப் பற்றிக்கொள்ள அது எங்கோ இழுத்துச் சென்று விடுகிறது. இப்போது கூட அப்படித்தான்... எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் ஏதோ ஒன்றை படைக்க விரும்பும் பிரயத்தனத்தோடு இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். அலாதியான விசயங்களை எல்லாம் வார்த்தைப் படுத்த முடியாது என்றாலும் அந்த அனுபவத்தை எப்படியாவது பதிவு செய்து வைத்து விட வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் ஒரு படைப்பாளிக்கு உண்டு. கனவுகளில் சில பூக்களை நான் காண்பதுண்டு. அந்த பூக்களையும் விவரிக்க முடியாத சில பிரதேசங்களையும், எப்போதும் யாரிடமாவது காட்ட வேண்டும் என்ற ஆவலை என்னால் தடுக்க முடிவதேயில்லை. அதிகாலையில் எழுந்த கொண்ட பின் மெலிதாய் சில கனவுகள் வந்து என் மனக்கதவினைத் தட்டும். யாருமற்ற சமவெளியில் எந்த வித நோக்கமுமின்றி நான் நடந்து கொண்டிருந்த.. அந்த பொழுதுகள் சட்டென்று எனது புத்திக்குள் எட்டிப் பார்க்கும். சமகாலத்தோடு தொடர்பு இல்லாத அந்த பொழுதுகளையெல்லாம், நான் ஒரு எறும்பு இரை சேர்ப்பது போல மெல்ல மெல்ல சேர்த்து என் நினைவுகளுக்குள் பதுக்கி எடுத்து வைத்துக்கொள்வேன். எப்போதாவது ஏ

நந்தி....!

எப்போதாவதுதான் வாய்க்கிறது இப்படியான மனோநிலை அடைமழைக் காலத்தில் இருண்டு இடக்கும் பகல் பொழுதில் மழைச்சாரலை உள்வாங்கியபடி திண்ணையில் அவித்த கடலையை அனுபவித்து கொறிப்பது போல. மழையின் தாளத்தை கேட்டிருக்கிறீர்களா நீங்கள்? தப.. தப.. தப்... தப...தப என்று ஒவ்வொரு மழைத் துளியிலும் நிலம் தொட்டு பின் மீண்டும் துள்ளி எழும் காட்சியைக் கண்டிருக்கிறீர்களா? அலாதி என்பதின் அர்த்தம் அப்போதுதான் விளங்கும். எங்கோ வெறித்தபடி பிடித்த இசையைக் கேட்டுக் கொண்டு ஒரு போர்வைக்குள் சுருண்டு கிடக்கும் கதகதப்பு நிமிடங்களைப் போல இருக்கிறது இன்று எனக்கு. பேச ஏதுமில்லா தருணங்கள் எப்போதும் வந்து போகுமென்றாலும் எண்ணவே ஏதுமில்லா தருணத்தில் விழுந்து கிடப்பது வரம்தானே. மாட்டினைப் பார்த்திருக்கிறீர்களா? மேயும் போதும் நிதானமாயிருக்கும், ஓடும் போதும் நிதானமாயிருக்கும், வண்டியில் கட்டி ஓட்டினாலும் நிதானமாய் இருக்கும், உழவுக்கு கொண்டு சென்றாலும் நிதானமாயிருக்கும்.  நான் சிறுவயதில் சொந்த கிராமத்துக்கு செல்லும் போதெல்லாம் மேய்ச்சலுக்கு சென்றிருக்கிறேன். மாடு மேய்க்கதாண்டா நீ லாயக்கு என்று என்னை நிறைய பேர்கள் திட்டி இருக்

மரத்தடி...!

கவிதை எழுதலாமா?  காஃபி குடிக்கலாமா? எதுவும் செய்யாமல் வெறுமனே பால்கனிக்குப் போய் வேடிக்கை பார்க்கலாமா? இல்லை ஏதேனும் புத்தகத்தின் இரண்டு மூன்று பக்கங்களைப் புரட்டிவிட்டு அதன் தாக்கத்தில் எங்கோ போய் விழுந்து புரண்டு கொண்டிருக்கலாமா? பிரியமான இசையைக் கேட்கலாம் கூடத்தான்.  தமிழின் ஆகச்சிறந்த படங்களின் தொகுப்பினை சேமித்து வைத்திருக்கும் போல்டர் கூட புஷ்டியாகிவிட்டது. பற்றாக்குறைக்கு நண்பர்கள் குறிப்பிட்டுச் சொல்லி பார்க்க சொன்ன உலகத் திரைப்படங்கள் வேறு கூடிக் கொண்டே போகிறது. யூ ட்யூபில் பார்த்து பார்த்து தொகுத்து வைத்திருக்கும் பாடல்களை, இன்னபிற காணொளிகளையும் கேட்டு முடிக்க தொடர்ச்சியாய் ஒருவாரம் கூட ஆகலாம். யூ ட்யூப் தொகுப்பில் இன்னதுதான் இருக்கிறது என்று சொல்ல முடியாது. ராஜா சார், ரகுமான், எம்.எஸ்.வி, தியாகராஜ பாகவதர் என்று தொடங்கி கெனி ஜியின் சாக்ஸ்போன்,  பெஸ்ட் ஆஃப் மொசார்ட், பண்டிட் ஹரிபிரசாத் செளரஷ்யாவின் புல்லாங்குழல், யார் யாரோ வெறுமனே பாடி தொகுத்து வைத்திருக்கும் கர்நாடக சங்கீதத் தொகுப்பு, இஷா அமைப்பினரால் கம்போஸ் செய்யப்பட்ட பாடல்கள், சைவ சித்தாந்தம் பற்றிய தொகுப்புகள்,

கணக்குல புலி...!

கணக்குன்னாலே நமக்கு ஏழாம் பொருத்தம். தர்க்க ரீதியா ஏன் எதுக்குன்னு விளக்கம் கொடுக்க முடியாத எந்த விசயமா இருந்தாலும் என் மூளைக்குள்ள அவ்ளோ சீக்கிரம் ஏறாது. ட்ரிக்காணாமேட்ரியும், அல்ஜிப்ராவும், தேற்றமும், மறுதலையும் மண்ணாங்கட்டியையும் கண்டாலே எனக்கு எப்பவுமே அலர்ஜி. இந்த லெட்சணத்துல ப்ளஸ் ஒன் படிக்கும் போதே ப்ளஸ் டூவுக்கு ட்யூசன் வேற. க்ளாஸ்ல எக்ஸ்ப்ரஸ்  வேகத்துல பாடம் நடத்துறப்ப நம்பியார், பி.எஸ். வீரப்பா கணக்கா மிரட்டுற வாத்தியாருங்க எல்லாம் இன்டிவிஜுவலா ட்யூசன் போறப்ப அவுங்க ட்யூசன் க்ளாஸ்ல எம்.ஜி.ஆரா மாறி "நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..."ன்ற ரேஞ்ச்சுக்கு கொஞ்சிக் குலாவுவாங்க. மாசக்கடைசியில ட்யூசன் பீஸ் லேட்டாயிடுச்சுன்னா புருசன் மேல கோபமா இருக்குற பொண்டாட்டி மாதிரி மூஞ்ச தூக்கியும் வச்சுக்கிடுவாங்க....! விஜயகுமார் சார்கிட்டதான் நான் கணக்கு ட்யூசன் போனேன். பிசாசு எங்க இருந்தாலும் அது பிசாசுதானே...? அது க்ளாஸ் ரூம்ல மட்டும்தான் பிசாசா என்ன? எனக்கு ட்யூசன்லயும் கணக்கு பிசாசாதான் தெரிஞ்சுது. இந்தக் கொடுமையில வீட்ல வேற டாக்டர் ஆகலேன்னா கூட பரவாயில்லை எப்டியாச்சும

நிலா... நீ வானம் காற்று மழை....!

வார்த்தைகள் எல்லாம் தொலைந்து போய்விட்டன. உனக்காக எழுதிய என் கவிதைகளிலிருந்து சொற்களை எல்லாம் பிடுங்கி எடுத்து வானில் பறக்க விட்டு விட்டேன். உன்னை பற்றி நினைப்பதையும் குறைத்துக் கொண்டு விட்டேன். அழுத்தமான அழுகைக்குப் பிறகு ஓய்ந்து கிடக்கும் விழிகளோடும் சோர்ந்து போன இமைகளோடும் அடிக்கடி வானத்தில் அலைந்து கொண்டிருக்கும் மேகங்களை வேடிக்கை  பார்ப்பது என் வாடிக்கையாகி விட்டது. என் வீட்டுத் தோட்டத்தில் நேற்று மொட்டு விட்டிருந்த ரோஜா இன்று காலை விரிந்து பூத்திருந்ததைப் பார்த்தவுடன் சட்டென்று வந்த உன் ஞாபகத்தை சுமந்து கொண்டிருக்க முடியாது என்று இதோ வழக்கம் போல எழுத ஆரம்பித்து விட்டேன். இந்த உலகின் எந்த மூலையில் நீ வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்று எனக்கு தெரியாவிட்டாலும் ஏதோ ஒரு கணத்தில் குழந்தையாய் உன் நினைவுகள் ஓடி வந்து என்னைக் கட்டிக் கொள்கின்றன. அவற்றை அள்ளி எடுத்து என் தோளில் போட்டுத் தட்டிக் கொடுத்தபடியே விழிகள் கலங்க உன்னை பற்றி எண்ணத் தொடங்குகிறேன். மாலை வேளைகளில் நாம் நடந்து சென்ற நகரத்தின் தெருக்களில் நான் இப்போதும் நடந்து செல்வதுண்டு. நாம் அமர்ந்திருந்த பூங்காக்கள், உணவருந்தி

சத்குரு...!

பரந்து விரிந்த இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு புள்ளியாய் ஜனித்து தனித் தனி உடம்புக்குள் வியாபித்து நின்று கொண்டு உலகத்தின் மையமாய் தன்னைக் கருதி நகரும் இவ்வாழ்க்கையின் மையம் என்று ஒன்றும் கிடையாது.... என்றாலும்.... குருநிலை என்பது ஒரு கற்பனை மையம். எதுவமற்ற தன்மைக்கு, அடையாளம் இல்லாத ஒன்றுக்கு ஒரு அடையாளம் வைத்துக் கொண்டு நகரும் சுவாரஸ்யம். இல்லை என்பதை சொல்லும் ஒரு விசயத்தை, இல்லாமலேயே போவோம் என்ற உண்மையோடு வாழும் சத்தியத்தைப் பற்றிக் கொள்ளுமொரு தந்திரம். மனிதர்களாய் இருக்கும் போது இன்னொரு மனிதனே இந்த தந்திர உபாயத்தை சரியாகச்  செய்ய உதவ முடியும். குருநிலை என்பது இன்னொரு மனிதராய்த்தான் இருக்க வேண்டும் என்று யாதொரு நிர்ப்பந்தமும் இல்லை. ஒரு மலையாய் இருக்கலாம். நெருப்பாய் இருக்கலாம். சிலையாய் இருக்கலாம். பரந்து விரிந்த வான் வெளியாய் இருக்கலாம்... ஏன் இன்னும் சொல்லப் போனால் ஒன்றுமில்லாத அந்த பேருண்மைக்குள் கூட்டிச் செல்லும் வேறு எதுவாய் வேண்டுமானாலும் இருக்கலாம்.... அது பின்பற்ற விரும்பும் மனிதரின் பக்குவத்தை பொறுத்த விசயம் என்றாலும் இன்னொரு மனிதர் நமக்கு குருவாய் அமைவது சுக

சாக்தனானேன்...!

சைவம் என்பது பிறப்பால் பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட வழிமுறையாய் எனக்கு ஆகிப் போனதால் சைவம் பற்றி அறிந்து கொள்ள நிறைய நாட்கள் மெனக்கெட்டு இருக்கிறேன். அம்மாவின் தாத்தா எங்கள் பாட்டையா காலம் வரை கடுமையான சைவர்கள் நாங்கள். தலைவாசல் ஒரு தெருவிலும் கொல்லைப்புறம் அடுத்த தெருவிலும் இருக்கும் அம்மாவின் பூர்வீக வீட்டின் நடு ஹாலில் ஆளுயர தட்சிணாமூர்த்தி படம் தேக்கு மரத்தால் பிரேம் போடப்பட்டு பிரம்மாண்டமாய் இருக்கும். குரு நிலையை போதிக்கும் அந்தப்படத்தை நான் அதற்கு முன் யார் வீட்டிலும் பார்த்திருக்கவில்லை. ஞானம் என்றால் என்னவென்று வார்த்தைகளின்றி நேரடியாய் விளக்கும் நுட்பங்கள் நிறைந்த படம் அது. ஒரே ஒரு சித்திரத்தில் ஒட்டுமொத்த பிரபஞ்ச தன்மையையும் கொண்டு வந்தது யார்? யார் இதை யோசித்தது? தட்சிணாமூர்த்தியின் தத்துவத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது. வார்த்தைகளால் விளக்க முற்பட்ட மாத்திரத்தில் அந்த உண்மை உடைந்து போய்விடும். இந்த உண்மையைத்தான் உலகம் முழுதும் வெவ்வேறு வடிவில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா சமூக அரசியலுக்கும் பின்னால் இந்த தத்துவமே வெகு ஆழத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது. க

அழியாத கோலங்கள்...!

ஷோபாவின் பெயர்தான் டைட்டிலில் முதலில் காட்டப்படுகிறது. பிறகு அறிமுகம் பிரதாப் போத்தன், அதன் பிறகு மீதி எல்லோரும். இசை இளையராஜா என்று நினைத்தேன் ஆனால் அவர் இல்லை சலீல் செளத்ரியாம். மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். படம் பார்க்க ஆரம்பித்த போதே ஏன் டைட்டில் போடும் போதே ஒரு பாடல் வரவேண்டும் அதுவும் ஒரு ஆழமான வலியை கிளறும் நினைவுகள் கொண்ட பாடல் எதற்காக என்று யோசித்தபடியே தான் படம் பார்க்க ஆரம்பித்திருந்தேன். படம் முடியும் போதும் அதே பாடல் மீண்டும் ஒலிக்க படம் நிறைவடைந்து கதை திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இயக்கம் என்று பாலுமகேந்திரா சாரின் பெயர் வழக்கம் போல.... பின் படம் முடிந்து விட்ட போதுதான் ஆரம்பத்திலும் முடிவிலும் ஒலித்த அந்தப் பாடலின் அர்த்தம் விளங்கியது. அழியாத கோலங்கள் என்றில்லை பாலு சாரின் எல்லா படமுமே பார்த்து முடித்த பின்பு ஒரு கதையோ அல்லது கவிதையோ, திரைப்படமோ இப்படித்தான் இருக்கவேண்டும் என்று அழுத்தமாய் எனக்குத் தோன்றும். ஒரு படைப்பு பற்றி பார்த்து முடித்த பின்போ அல்லது வாசித்து முடித்த பின்போ ஒன்றுமே நமக்குத் தோன்றக் கூடாது. ஒரு மெல்லிய வலியோடு எங்கோ நாம் சிறகடித்துப் ப