Skip to main content

Posts

Showing posts from June, 2014

தக்க்ஷின் குட் ஈவினிங் - 2

இதுவரை... இனி... சேட்டு ரொம்ப நொடிச்சுப் போய்ட்டாப்ல தேவ் தம்பி. ஒங்க கூட இருந்த டீம் எல்லோரும் வேலைய வுட்டுப் போய்ட்டங்க மிச்ச இருந்த யூனியன் ஆட்களால பிரச்சினை வேற எப்ப பாத்தலும் ஸ்ட்ரைக்கு அது இதுன்னு சொல்லிட்டு ஒரே களேபரமா கிடந்துச்சுபா ஓட்டலே...! என்னமோ கோர்ட்ல வேற ஓட்டல் இடத்து மேல பிரச்சினை இருக்கும்ன்னு பேசிக்கிட்டாங்க...அத்தனால மூடிட்டாங்களா இல்ல சேட்டுக்கும் சேட்டு தம்பிக்கும் பெரச்சினையா ஒண்ணியும் தெர்லபா... ஓட்டல் மூடினதுக்கோசரம் நான் லீ மெர்டியன் இஸ்டாண்டுக்குப் போய்ட்டன் பா.... எப்பவாச்சும் ஹரி வருவாப்ள ஓட்டலுக்கு, ச்ச்சுமாங்காட்டியும் ஓட்டல தொறந்து வச்சு கொஞ்ச நேர ஒக்காந்திருந்துட்டு போவாப்ள...ஒனக்கு லக்கு இருந்தா இப்போ கூட அவரு வரலாம்..... எந்த ஹரி? செஞ்சி ஹரிண்ணாவா? சடாரென்று கேட்டேன்... அவருதாம்பா சேட்டுக்கு ரைட் ஹேண்ட் கனக்கா இருப்பாப்லயே...... டீ குடித்து விட்டு ஹோட்டல் பக்கம் நாங்கள் இருவரும் வருவதற்கும் அவர் புல்லட்டில் தக்க்ஷின் உள்ளே சென்று இறங்கி நிறுத்தவும் சரியாய் இருந்தது. இந்த வந்துட்டப்ளபா ஹரி.....என்று மதி அண்ணன் சுட்டிக்க

தக்க்ஷின் குட் ஈவினிங்...!

தக்க்ஷின் குட் ஈவினிங் மே ஐ ஹெல்ப் யூ..... தட்டுத்தடுமாறி பிபில் டெலிபோன் ஆப்பரேட்டர் போர்டை ஹேண்டில் செய்து கொண்டிருந்த 1998 ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விநாயகர் சதுர்த்தியின் இரவு அது. முதல் நாள் வேலை அதுவும் வாழ்க்கையின் முதல் முதல் வேலை எவ்வளவு கடினமாய் இருக்குமோ அதை விட பலமடங்கு கடினமாயிருந்தது எனக்கு. கிராமப்புற பகுதிகளிலேயே உயர்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பினை முடித்து விட்டு தட்டுத் தடுமாறி ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்த நான் எவ்வளவு தைரியம் இருந்தால் ஒரு ஸ்டார் ஹோட்டலில் ப்ரண்ட் ஆஃபிஸ் அஸிஸ்டெண்ட் ஆக வேலைக்கு சேர்ந்திருப்பேன். ஏதோ அடிச்சு மாற்றி பேசுவேன் என்றாலும் ஆங்கில புளூயண்ட்சி என்னிடம் மண்டியிட்டு கதறி அழுது என்னை விட்டு விடு என்று கெஞ்சத்தான் செய்யும். என்னுடைய முதல் வேலையின் முதல் இரவு. துணைக்கு ஒரு ஆக்ராக்காரன் அசோக் குமார் சிங் என்று....என் வயதை ஒத்தவன் தான் ஆனால் 21 வயதில் என்னிடம் எம்.என் நம்பியாரைப் போல வில்லத்தனம் செய்த ஆங்கிலம் அவன் நாக்கில் 16 வயதுக் குமரிப் பெண்ணாக நர்த்தனம் ஆடியதுதான் காலத்தின் கோலம். அப்போதைக்கு என்னைக் காப்பாற்ற  பாரதத்து கிருஷ்ண

காதல் சாதல் ரெண்டும் ஒன்று என்னே... விந்தையடி?!

ஒரு மாதிரியான தருணம்தான் அது. இமைக்க கூட மறந்து அவளின் விழிகளுக்குள் நான் கிடந்தது. காதலைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கெல்லாம் என்ற ஒரு கேள்வி மமதையாய் புத்திக்குள் ஏறி சிவதாண்டவம் கூட அப்போது ஆடிக் கொண்டிருந்தது. காதல் வெளிப்படுவது விழிகளில்தான் என்று மீண்டுமொரு முறை காலம் எனக்கு மெய்ப்பித்தது. இதற்கு முன்பு இரண்டொரு முறை காதல் கண்களுக்குள்ளிருந்து என்னைப் பார்த்து என்ன செளக்யமா என்று கேட்டதும் உண்டு. நிறைய கண்களை நான் கண்டிருக்கிறேன் என்று சொல்லும் போதே ஆண்களின் கண்கள் எல்லாம் உங்கள் மனதில் இருந்து கழன்று போகக் கடவதாக; ஆண்களின் கண்களைப் பற்றி பெண்கள் அல்லவா சிலாகித்து எழுத வேண்டும் அது பற்றிய கவலை எனக்கெதற்கு? குண்டு கண்கள், கூர்மையான கண்கள், சிவந்த வரியோடிய கண்கள், வெள்ளை வெளேறென்ற தும்பைப்பூ நிற கண்கள், துரு துரு கண்கள், சாந்தமான கண்கள், எப்போதும் கோபமேறிப்போய் உஷ்ணம் வீசும் கண்கள், வசீகரமாய் சொடக்குப் போட்டு அழைத்து இன்று இரவு எதுவும் வேலை இருக்கிறதா என்று கேள்வி கேட்டு சொக்க வைக்கும் கண்கள், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று அப்பாவியாய் பேந்த பேந்த விழிக்கும் கண்கள் என்று