Skip to main content

Posts

Showing posts from August, 2014

கதை திரைக்கதை வசனம் இயக்கம்!

விஜய் அஜீத்துக்கு எல்லாம் பிடிச்ச லூசு சூர்யாவுக்கும் பிடிச்ச கதைதான் அஞ்சானோட சோகக்கதை. ராஜு பாய் வாய்ல குச்சியோட சுத்துறாரே வாய்க்குள்ள இருக்க குச்சி வாய்ல குத்திடாதேன்னு தான் பதற முடியுதே தவிர அதைப் போய் எப்டிங்க ஸ்டைல்னு எடுத்துக்குறது? கருமம் பிடிச்ச அதை எல்லாம் எப்டிங்க ஸ்டைல்னு சொல்லி படமா எடுத்திங்க லிங்குசாமி. தலைவால விஜய் என்ன கொடுமை பண்ணினாரோ அதே கொடுமைல கொஞ்சம் ஆனியன் கேரட் எல்லாம் தூவி அஞ்சான்ல சூர்யா பண்ணி இருக்காரு.... வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, ப்ரண்ட கொன்னவன ராஜு பாய் திரும்ப வந்து கொல்லுவாப்ளன்றது ஒண்ணுந் தெரியாத பாப்பா சமந்தாவுக்கே தெரியும் போது நமக்கெல்லாம் தெரியாதா? என்ன துப்புக் கெட்ட படத்தை எடுக்க இம்புட்டு துட்டு செலவு பண்ணி இருக்காய்ங்களேன்னு நினைக்கிறப்பதான் கப்புன்னு தொண்டைய அடைக்குதுங்க... இவங்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி மாஸ் ஹீரோவா ஆகணும்ன்ற ஆசை இருக்கே தவிர கதைய கேட்டு நடிக்கணும்ன்ற அறிவு இல்லாமலேயே போய்டுது. ராஜு பாய்... ராஜு பாய்னு... ஸ்கீரீன் புல்லா கூவுறானுங்கோ, எனக்கு என்னமோ பாஷா பாய் பாஷா பாய்னு தான் கேட்டுகினே இருந்துச

உன்னை நான் தேடித் தேடி....!

உனக்குப் பிடித்த பாடல்கள் என்று நீ குறிப்பிட்டிருந்த எல்லா பாடல்களையும் மீண்டுமொரு முறை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். எந்த கவலையுமின்றி உன்னோடு பேசிக் கொண்டிருந்த அந்த நாட்களுக்குள் என்னை பிடித்து தள்ளி விட்டு விளையாடிக் கொண்டிருந்தன ஒவ்வொரு பாடலும்... சொர்க்கத்திற்குள் சுகமாய் நாம் சுற்றித் திரிந்த அந்த நாட்களும் அந்த நாட்களை அசைபோடும் இந்த நாட்களையும் விட வேறு ஏதேனும் சிறப்பாய் இருக்க முடியாது. வாசனையான பெண்ணொருத்தி, கிறக்கமான விழிகளோடு தொட்டு விடும் தூரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு பெளர்ணமி ராத்திரியில் கிறக்கமாய்  அதை அனுபவிப்பவனின்  மனோநிலையில் இப்போது நான் இருந்து கொண்டிருக்கிறேன்... ததும்பி வழியும் காமத்தின் அடுத்த முடிச்சு எந்த நொடியில் அவிழும் என்பதை எப்படி வரையறுக்க முடியாதோ அப்படித்தான்  கவிதை ஒன்று உருப்பெறுவதும்.... நான் எழுதுவதற்காக.... என் நோட்டுப் புத்தகத்தை திறந்திருந்தேன்.... என் பேனாவிலிருந்து அவிழ்ந்து விழத் தொடங்கி இருந்தன வார்த்தைகள்.  உன்னோடு பேசிக் கொண்டிருப்பதை போல தோன்றியது எனக்கு.... இப்போதெல்லாம் உன்னோடு பேச வேண்டுமானால் நான் ஏதாவது எ

வெற்றுக் காகிதங்கள்...!

எல்லாவற்றையும் ஒரு கவிதையால்... எப்போதும் சொல்லிவிட முடிவதில்லை... வெயில் சூட்டில் கால் கடுக்க வெகு தூரம் நடந்து பின் இளைப்பாறும் ஒரு மர நிழல் கொடுக்கும் நிறைவினை... கனவுகளில் துரத்தித் திரிந்த காதலியொருத்தியை ஒத்தவள் சட்டென்று நம்மை யாரோவாய் கடந்து செல்லும் அவஸ்தை மிகு படபடப்புக்களை.... கடைசியாய் முகம் பார்த்துக் கொள்ளுங்கள் என்ற கூச்சலில் கூட்டத்துக்கு நடுவே நின்று நம் ப்ரிய உறவுகளின் முகங்களை சிதைக்கு நடுவில் காணும் பேரவலத்தை.... பிரிந்து விட்ட காதலியை யாரோ ஒருத்தி போல எங்கோ சந்தித்து விட்டு.... பேச ஒன்றுமில்லாமல் தவித்து நிற்கும் அந்த பேரவஸ்தைக் கணங்களை... அறுந்து போன பட்டத்தின் நூல் பிடிக்க பின் ஓடி எட்டிப் பிடிக்க முயலுகையில் அது கைவிட்டுப் போகும்... கலக்க நிமிடங்களை... என்று.... எல்லாவற்றையும் ஒரு கவிதையால்.... எப்போதும்... சொல்லிவிட முடிவதில்லை....! தேவா சுப்பையா...

கோணல் மாணலாய் ஒரு கதை - 2

முந்தைய பகுதி.. இனி... ரமேஷுக்கு என்னைத் தெரியாது. நீ மட்டும் வந்தேன்னு சொல்லி சமாளிச்சுடு சுமதி. ஏற்கெனவே அவனுக்கும் உனக்கும் நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்.. .. .அண்ட்... யூ கேன் கோ வித் ஹிம் ..... ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டேன்.... சுமதி... எழுந்து நின்று அவசரமாய் என் பின்னந்தலைக்குள் கை கொடுத்து கலைத்து....கண் கலங்கியபடியே...சாரிடாமா.... ஐயம் வெரி சாரி.... ஐ டோண்ட் வாண்ட் யூ டூ லீவ் லைக் திஸ்....பட்ட்ட்ட்ட்.....இழுத்தாள்.... இட்ஸ் ஓ.கே சுமதி....நான் கிளம்புறேன்.. டேக் கேர்...... சொல்லி விட்டு வேகமாய் வெளியே வந்தேன்...நான் வெளில வர்றப்ப...ரமேஷ் ஹோட்டல் உள்ளே போனான். ரமேஷ் யார்னு எனக்குத் தெரியும். சுமதி போட்டோவுல காட்டி இருக்கா... ஆனா நான் யார்னு ரமேஷ்க்கு தெரியாது. தெரியாமல் இருந்தது பெரிய பிரச்சினையை இப்போது சரிக்கட்டி இருக்கறதா எனக்குத் தோணுச்சு.... ரூமிற்கு சென்று கொண்டிருந்தேன். என்ன மாதிரியான லைஃப் இது...? என்னோட கேரக்டர்தான் என்ன...? அவள் பொண்டாட்டி, அவன் புருசன்....இடையில நான் யாரு...? நான் ஏன் சுமதிய கூட்டிட்டு வரணும்...? உதவி

கோணல் மாணலாய் ஒரு கதை....!

கரடு முரடா சில விசயங்கள எழுதணும்னு தோணிட்டே இருக்கு எனக்கு. ஏதோ கணக்குக்கு எழுதி வச்சமா, வார்த்தைகளால விளையாடினமான்னு இல்லாம வாழ்க்கைக்குள்ள ஒரே பாய்ச்சல்ல பாய்ஞ்சு முங்கி முங்கி ஏதேதோ எழுதணும் பாஸ். கதைக்கான எந்த ஒரு வரையறையும் இல்லாம ஒரு கதை இருக்கணும். கோட்பாடுகளை எல்லாம் கையெடுத்துக் கும்பிட்டு கொஞ்சம் ஓரமா உக்காருங்க அண்ணாச்சிகளா டீ வாங்கியாறேன்னு சொல்லிட்டு...., முழுப்பரீட்சை லீவு விட்ட முத நாள் சாங்காலம் பைக்கட்ட வீட்டுக்குள்ள தூக்கி எறிஞ்சுப்புட்டு.... ஹோ......லீவு விட்டாச்ச்ச்ச்ச்ச்சு டோய்ன்னு....... தெருவே அதிர்ர மாதிரி ஓடுவோம்ல அந்த மாதிரி தப தப தன்னு எங்கிட்டாச்சும் ஒரு திசை பாத்து பிச்சிக்கிட்டு பறக்கணும்னு ஆசையா இருக்கு.  நம்ம சொந்த அனுபவங்கள பிரதி எடுத்துக் கொள்ளும் போது கிடைக்கிற சந்தோஷம்....தண்ணிக்குள்ள முங்கி,எந்திரிச்சு அப்புறம் மறுபடி முங்கி எந்திரிச்சு... அங்கிட்டு இங்கிட்டு ஓடி....தாவிக் குதிச்சு உடம்பு முழுசும் ஊறிப் போய் கிடக்குறப்ப ஒரு போதை வருமே...அந்த போதை ....அந்த போதைதான் எழுதுறப்ப கூட எனக்கு கிடைக்குது.  நான் ஆரம்பப்பள்ளியில படிச்சப்ப பள்ளிக்

சூப்பர் ஸ்டார்...!

டிவிடியைத் தட்டி மீண்டுமொருமுறை ஜானி படத்தைப் பார்க்க ஒரு கோப்பை தேநீரோடு அமர்ந்தேன். எத்தனை முறை நனைந்தாலும் அலுக்காத மழையைப் போல எப்போது பார்த்தாலும் ஒரு சந்தோஷ வெளிக்குள் தரதரவென்று இழுத்துச் செல்லும் மென்மையான திரைப்படம் அது. அடுத்த சூப்பர் ஸ்டார் ஆக வெட்கமில்லாமல் ஆசைப்படும் சமகாலத்து கத்துக்குட்டி நடிகர்களையும், வியாபாரத்திற்காக சர்வே நடத்தி பரபரப்பு கூட்டிக் கொள்ளும் ஊடகங்களையும் நினைத்துக் கொண்டேன்.... எனக்கு சிரிப்பு வந்தது. எவ்வளவு பெரிய ஆளுமை இந்த ரஜினி? வெறுமனே மாஸ் ஹீரோவாய் தன்னைக் காட்டிக் கொள்ள மசாலா படங்களில் நடித்து ரஜினியை போல வர விரும்பும் நடிகர்கள் ரஜினியின் எல்லா படங்களையும் பார்த்து இருப்பார்களா என்பது சந்தேகம்தான். ரஜினிக்கு முன்னால் கொடிகட்டிப் பறந்த எம்.ஜி.ஆர் தனக்கென ஒரு பாணியை வைத்திருந்தார். ஏழைப்பங்காளனாக தன்னை திரையில் வரிந்து கொண்ட எம்.ஜி.ஆர் படங்களின் பாடல்கள் எல்லாமே கொள்கை விளக்கப் பாடல்கள் போன்றுதான் இருக்கும். ' நான் உங்கள் வீட்டுப் பிள்ளை இது ஊரறிந்த உண்மை' என்ற ரீதியில் திரையில் ஆடிப்பாடிய எம்.ஜி.ஆர் 'நான் ஆணையிட்டால்

அப்பத்தா...!

ஏம்பா... ரவைக்குத் தங்கிட்டு காலையில போனா என்ன....? கெஞ்சலாய் மகனின் முகத்தைப் பார்த்த மரகதத்திற்கு 70 வயதிருக்கும்.  ஏண்டி நாம வேணும்னா இருந்துட்டு காலையில போவோமா...? கிசுகிசுப்பாய் மனைவியிடம் போய்க் கேட்டார் பழனி. என்னங்க கூறுகெட்டத்தனமா பேசிக்கிட்டுஇருக்கீங்க. உங்க ஆத்தாள பாக்கணும்னுதானே இம்புட்டு தூரம் திருச்சில இருந்து வந்து இருக்கோம். இந்தப் பட்டிக்காட்டுல புள்ளக்குட்டிகளை வச்சுக்கிட்டு எப்படி இருக்கறது? வெளிநாட்ல இருந்து வந்துட்டு இங்க எப்டி இருப்பாக நம்ம மகளும் மருமகனும்...? பத்தாக்குறைக்கு கைப்புள்ளைய வேற கைல வச்சு இருக்கா....அவ, குளிக்க வைக்க ஒண்ணுக்கும் வசதி இல்ல இங்க... பக்கத்துல ஆறு கிலோமீட்டர்லதான் டவுன்ல என் தங்கச்சி வீடு இருக்கு அங்க போய் படுத்து இருந்துட்டு நாளைக்கு சாங்காலமா ஊருக்கு கிளம்பிப் போவோம்... பழனியால் மனைவியை எதிர்த்துப் பேச முடியவில்லை. பேச முடியாமல்தான் நிறைய பழனிக்கள் தங்களின் வாழ்க்கையின் பிற்பகுதியை கழித்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணடிமைப் பேச்சு எல்லாம் ஒரு காலம் வரைக்கும்தான் பரபரப்பாய் நம் ஊரில் பேசப்படுகிறது. ரெண்டு பிள்ளை பெ