Skip to main content

Posts

Showing posts from November, 2014

சிவகங்கைச் சீமை....!

சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றினை இதுவரையில் ஜனரஞ்சகமாக வெகுஜனம் அறிந்து கொள்ளும் வகையில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்களும், ஒரு சில மிக சுவாரஸ்யமற்ற நடையில் எழுதப்பட்ட புதினங்களும், கார்லே, வேல்ஸ் போன்ற வெள்ளைக்காரர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் சில விபரங்களையும் தாண்டி தொடர்ச்சியான ஒரு நீண்ட நெடிய புதினம் தமிழர்களுக்கு தருவிக்கப்படவே இல்லை. சோழ தேசத்தில் வளர்ந்தவெனினும் அடிப்படையில் நான் பாண்டிய தேசத்தவன். காளையார்கோயிலிலும் மறவமங்கலத்திலும் இன்னபிற சிவகங்கைச் சீமையின் செம்மண் புழுதிகளுக்குள் சுற்றி திரிந்திருக்கிறேன். கருவேல மரங்களுக்கு நடுவே படுத்துக்கிடக்கும் பிரம்மாண்டமான கண்மாய்களில் கண்கள் சிவக்க குளித்து விளையாடி இருக்கிறேன்... ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் இருக்கும் கணக்கில்லாத ஊருணிகளும், காரைக்கற்களால் கட்டப்பட்டு இடிந்து மண்மேடாய்க் கிடக்கும் கற்குவியல்களுக்கு நடுவே ஒளிந்து பிடித்து விளையாடிய போது இவைகளுக்குளெல்லாம் சிவகங்கைச் சீமையின் வீரமிகு வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நான் அப்போது கருதியதில்லை. காளை

வேங்கைகளின் மண்...4 !

வேங்கைகளின் மண் - I வேங்கைகளின் மண் - II வேங்கைகளின் மண் - III இனி..... கெளரீ...விடியற்காலை பிரயாணம் உனக்கு ஒன்றும் உபாதை தரவில்லையே... காதலோடு தன்னுடன் குதிரையில் வந்த கெளரி நாச்சியாரைப் பார்த்து கேட்டார் மன்னர் முத்து வடுகநாதார். ராணியாரையும், மன்னரையும் பின் தொடர்ந்து மூன்று குதிரைகளும், அவர்களுக்கு முன்னால் இரண்டு குதிரைகளும் காற்றில் பறந்து கொண்டிருந்தன. சிவகங்கைச் சீமை வானம் பார்த்த பூமிதான் என்றாலும் முத்துவடுகநாதர் ஒவ்வொரு கிராமத்திலும் ஆறேழு ஊருணிகளையும் கிராமத்து எல்லையில் மிகப்பெரிய கண்மாய்களையும் வெட்டுமாறு ஆட்களைப் பணித்திருந்தார். செம்மண் பூமியில் ஆற்றுப்பாசனம் இல்லாவிட்டாலும் பெருங்கேணிகளும், தேக்கி வைத்த மழைநீரை அடைத்து நின்ற பெருங்கண்மாய்களும் விவசாயத்தை செழிப்பாய்த்தான் வைத்திருந்தன. கார்காலம் தொடங்குவதற்கு முன்பு நெல்லும், கார்காலத்திற்கு பின்பு அறுவடை முடிந்த பின்பு மீண்டும் நிலத்தை உழுது பண்படுத்தி மிளகாய், கம்பு, கேழ்வரகு, திணை, நிலக்கடலை, எள் போன்ற தானியங்களும் தொடர்ந்து அந்த மண்ணிலே பயிரிடப்பட்டன. சீமை ஓடுகளாலும் நெருக்கமான மு

வேங்கைகளின் மண்...3 !

வேங்கைகளின் மண் - I வேங்கைகளின் மண் II இனி..... இருள் சூழத் தொடங்கி இருந்தது. கருவேலம் காடுகளுக்கு நடுவே முட்களை விலக்கியபடி அந்த உருவம் வெற்றியூர் கிராமத்தை நோக்கி மெளனமாய் நடந்து கொண்டிருந்தது. முன்னால் இருவர் கையிலிருந்த நீண்ட கோலினால் செடி கொடிகளை விலக்கியபடி சென்று கொண்டிருக்க அவருக்குப் பின்னால் இருவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி நடந்து சென்று  கொண்டிருந்தனர். ஐயா தீபம் கொளுத்தனுங்களா? முன்னால் சென்று கொண்டிருந்தவர்களில் ஒருவன் அவரைப் பார்த்து திரும்பி கேட்ட போது வேண்டாம் என்று சைகையால் சொல்லி விட்டு தலைக்கு மேலே ஒளி வீசிக் கொண்டிருந்த நிலவைக் காட்டி அது போதுமென்று சைகையால் சொன்னார். வருடத்தில் மூன்று மாதங்களும் கோடையில் அவ்வப்போது பெய்யும் மழையையும் மட்டும் பார்த்திருந்ததால் அந்த கோடை மாதத்தில் செம்மண் நன்றாகவே இறுகிப் போய்கிடந்தது. சர சரவென்று சப்தம் கேட்கும் போது மெல்ல நின்று நிதானித்து நிலவு வெளிச்சத்தில்  மின்னும் உடலோடு நகர்ந்து செல்லும் சர்ப்பங்களை மெளனமாய் அவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தார்கள்.                                            

குணா....!

இந்தப் படம் வந்த 1992ல் எனக்கு பைத்தியக்காரத்தனமான படமாகத் தோன்றியது. முழுப்படமும் அபத்தமாய் தெரிந்தது. குணாவுக்கும் அபிராமிக்குமான காதல் காட்சிகள் மட்டும் கொஞ்சம் சலிப்பில்லாமல் தோன்றியது. மற்றபடி சுத்தமாய் பிடிக்காத ஒரு திரைப்படமாய்த்தான் குணா எனக்கு இருந்தது. காலங்கள் கடந்து இங்கும் அங்கும் பயணித்து ஏதேதோ காரியங்கள் அழிந்துபோய் காரணங்களை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு உன்மத்த நிலை ஓய்ந்து போய் குணாவை இப்போது பார்க்கும் பொழுதுதான் புரிகிறது ஜீனியஸ் என்ற வார்த்தையின் அர்த்தம் என்னவென்று. கமல்ஹாசன் என்னும் நடிகனுக்குள் இருக்கும் தேடல்தான் நிஜமான ஆன்மீகமாய் இருக்க முடியும் ஆனால் அதை கமல் ஆன்மீகம் என்று ஒத்துக் கொள்ளமாட்டார். ஆன்மீகம் என்ற பதம் இப்போது எங்கெங்கோ யார் யாருக்கோ வெவ்வேறு காரணங்களுக்காகப் பயன்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலச்சூழலில் எனக்கும் கூட இந்த ஆன்மீகம் என்ற வார்த்தைப் பயன்பாடு கொஞ்சம் குமட்டிக் கொண்டுதான் வருகிறது. தேடலில் இருப்பவர்கள் தேடிக் கொண்டிருப்பவர்கள், இது எதனால், இதன் காரணம் என்ன? எனக்கு இப்படித் தோன்றுகிறதே ஏன்?  இந்த உடலுக்குள் தோன்றும் பல

கனவு வியாபாரம்...!

எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பிக்கும் என்னுடைய எல்லா ஆக்கங்களும் யாருக்காக ஆரம்பிக்கிறது? அது எங்கே செல்கிறது? யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு முறையும் பார்வையற்ற ஒருவனைப் போல எனக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளையும், வலிகளையும், சந்தோசத்தையும் தடவித் தடவிப் பார்த்து அதன் அர்த்தம் விளங்கி மெல்லமெல்ல இதுதான் இன்னதுதான் வரைகிறோம் என்று தெரியாமல் உருவமற்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் ஓவியனின் தூரிகையிலிருந்து சிதறும் எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த சொற்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. திடீரென்று ஒரு மழை நேரத்து மாலை எனக்கு நினைவில் வரும். மாலைக்குப் பின்னால் அடர்த்தியாய் நின்று கொண்டிருக்கும் இருட்டு நினைவுக்கு வரும், நான் நடந்து கொண்டிருப்பது ஒற்றையடிப்பாதையாய் இருக்கும். துணைக்கு யாரோ ஒரு மூதாட்டி தலையில் முந்தானையைப் போட்டு மழையைச் சமாளித்தபடி மெல்ல மெல்ல நடந்து கொண்டு பழங்காலத்து அவளின் கதைகளை அப்போது எனக்குச் சொல்லிக் கொண்டு வருவாள். மின்சார விளக்குகள் இல்லாத அந