Skip to main content

Posts

Showing posts from April, 2015

தேடல்...16.04.2015!

எழுதுவதற்கான எல்லா சூழல்களும் இன்று இருப்பதாகத் தோன்றியது எனக்கு. மழை வரப் போகிறது என்று  எப்படி யூகிக்க எப்படி முடியுமோ அப்படித்தான். கருத்த மேகங்கள் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்க குளிர்ந்த காற்று வீசி சூழலை ரம்யமாக்க இதோ எந்த நொடியிலும் கனிந்து விழுந்து விடும் தூறல் மழை என்று தோன்றுமல்லவா அப்படித்தான். சட சடவென்று புறச் சூழல்கள் அறுபடத் தொடங்கிய அந்த கணத்தில் பேனாவோடும் பேப்பரோடும் பரந்து விரிந்த வான் பார்க்கும் வசதி கொண்ட இந்த சாமானிய எழுத்தாளனின் பால்கனிக்கு நீங்களும் வந்தமர்ந்து பார்த்தீர்களானால் இதைப் புரிந்து கொள்வீர்கள்... கடந்த வாரத்தில் மலைகள் சூழந்த ஒரு சாலையில் பயணித்துக் கொண்டிருந்தேன். அவை ஒன்றும் என்னிடம் பேசவில்லை. பெருந்தவத்திலிருக்கும் யோகிகளைப் போல வாழ்க்கையை பற்றிய எந்த ஒரு அக்கறையுமின்றி ஆங்காங்கே அவை படுத்துக் கொண்டிருந்தன. சாலையோரமாய் வாகனத்தை நிறுத்தி விட்டு மலைகளோடு மலைகளாய் படுத்துக் கொள்ளலாமா என்று அவ்வளவு ஆசையாயிருந்தது எனக்கு. வெயிலோ, மழையோ, குளிரோ, பெருங்காற்றோ அவை அப்படியேதான் இருக்கின்றன. எல்லாவற்றையும் அவை முழுமையாய் வாங்கிக் கொள்கின்றன.

சுவடுகள்...!

திசைக்கொன்றாய் என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன் எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின் குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன், இனி எப்போதும் நான் முன்பு போல் இருக்கப் போவதில்லை..என்று என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம், முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது யார் யாரோ வந்தார்கள், ஏதேதோ கேட்டார்கள், பேசிச் சிரித்தார்கள், பூக்களை சிலர் பரிசளித்தார்கள், புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள், கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள், ஏமாந்தேன் என்றார்கள்.... சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது... அப்போதும் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல் யாருக்கானதாய் இருக்கும் என்று இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட