Skip to main content

Posts

Showing posts from February, 2016

பனை மரக் காடே.... பறவைகள் கூடே..!

ஊருக்கு நடுவேயிருந்த  பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு  வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த  மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா  என்னப்பத்தா...? நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...? முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி... உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா. ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து  என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே குப்பையா முள்ளுச் செடியா ம

பாம்பு வந்திருச்சு....!

திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு  பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள் ஓடினார். வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த பாபு பம்பரத்தை திண்ணையில் வீசி விட்டு வீட்டுக்குள் ஓடினான்.டேய்.. தம்பி உள்ள வராதடா.....அடுக்களைக்குள்ள பாம்பு வந்திருக்குடா என்று மாலு கத்தியபடியே திண்ணைக்கு ஓடி வந்த போது அவள் சப்தத்தைக் கேட்டு அறைவீட்டிற்குள்ளிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி எங்கடி பாம்பு...? என்று வெளியே வந்த முரளியிடம் கிச்சன்ல அண்ணா என்று பயந்தபடியே சொன்னாள் மாலு... முரளி கிச்சனுக்குள் சென்ற போது அவளுடைய அம்மா ரமாவும், அப்பா பரந்தமானும் கையில் விறகுக் கட்டைகளோடு நெல் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்துக்குப் பின்னால் இருந்த அண்டா குண்டக்களைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். டேய்... நீ சின்னப் பையன் வெளில போடா பாம்பு உன்னைப் பிடுங்கி கிடுங்கி வைக்கப் போகுது...போய் வாசல்ல தம்பி தங்கச்சிகள பாத்துக்க என்று சொன்ன ரமாவைப் பார்த்து அப்போதுதான் கொஞ்சமமாய் அரும்பிக் கொண்டிருந

கிணற்றடி...!

வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்... பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்... காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உர

ராஜாவாக இருப்பதென்பது...!

ராஜாக்கள் உலகம் கொடுமையானதுதான்... தீரம் என்ற பெயரில் எல்லாவற்றிற்கும் முன் செல்ல வேண்டும்... கோடி பேருக்கு ஒரு நீதி சொல்லி அது சரிதான் என்று நிறுவ வேண்டும்... ஒவ்வொரு நிமிடத்திற்குள்ளும் ஒளிந்திருக்கும் ஆபத்துக்களை கெதக் கெதக் என்று கடக்க வேண்டும்... பயப்படாத மனிதன் உண்டா இந்த புவியில்வ்.? ஆனால்... ராஜாக்கள் வாழ்க்கையில் பயப்படவே கூடாது... உடல் முடியாத போதும் கம்பீரமாய் நடக்கப் பழகவேண்டும்... குரல் வரவில்லை என்றாலும் கர்ஜிப்பது போல நினைத்துக் கொண்டு மியாவ் என்றாவது சப்தமெழுப்ப வேண்டும் ஊரையே நடு நடுங்க வைத்து விட்டு நம்பிக்கையின் நாயகனென்று முகம் இறுக்கி, உதடு துடித்து மீசை முறுக்கிவிட்டு... மொத்தத்தில்... வலிக்காத மாதிரியே நடிக்க வேண்டும்... ஆமாம்... பேரவஸ்தைதான் ஒரு ராஜாவாக இருப்பதென்பது...! தேவா சுப்பையா...

பேசித் திரியும் மான்கள்...!

அதோ தூரத்தில் தெரியும் அந்த மலைகளுக்கு  அப்பால் மிகப்பெரிய சமவெளியொன்று இருக்கிறதாம். அங்கேதான் மானுட வாழ்வின் பேருண்மைகளைப் பேசித் திரியும் மான்கள் சுற்றித் திரிகின்றனவாம் என்று என் பாட்டி என்னிடம் சொன்ன போது மானுட வாழ்வின் பேருண்மையென்று எதைச் சொல்கிறாய் பாட்டி என்று கேட்ட பொழுது.... குலுங்கிக் குலுங்கி அழத்தொடங்கியிருந்தாள் அவள். இறந்து போன தாத்தா புகைப்படத்திலிருந்து என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார். தாத்தாவின் புகைப்படத்தின் கீழே ஏற்றப்பட்டிருந்த தீபம் காற்றிலாடாமல் நின்று நிதானமாய் எரிந்து கொண்டிருந்தது. பாட்டியின் கன்னம் தொட்டுத்தடவி அவளின் தலை நிமிர்த்தினேன்... கண்ணீரைத் துடைத்தபடி அவள் மெல்ல பேசத் தொடங்கினாள்.... அந்த சமவெளியில் சுற்றித் திரியும் மான்கள் பேசுவது போலவே கற்பனை செய்து கொண்டேன் நான் அல்லது எனக்கு அப்படி தோன்றியது.  மெல்ல மெல்ல அரிக்கேன் விளக்கின் வெளிச்சத்தை தூண்டி விட்டபடி பேசிக் கொண்டிருந்த பாட்டி எனக்கு தேவதையைப் போல தெரிந்தாள். அவள் பிராயத்தில் நிறைய கவிதைகளை எழுதுவாளாம், கனவுகளிலும் கற்பனைகளிலுமே தன்னை விரும்பித் தொலைப்பாளாம். இதுத

இதன் பெயர்தான்(னா) காதல்..?!

பார்த்த மாத்திரத்திலேயே முகத்தில் பேயாய் அறைய வேண்டும் அது. நம்மைப் புரட்டிப் போட்டு வேறு பேச்சொன்றும் இல்லாமல் மூர்ச்சையாக்கி தர தரவென்று இழுத்துச் செல்ல வேண்டும். அதற்கு மேல் ஒன்றும் இல்லை என்ற பித்தமிகு நிலையில் தன்னிலை மறந்து, புறச்சூழல் மறந்து... இதோ...இவள் தான் என் தேவதை, இவள்தான் என் வாழ்க்கை, இவளின்றி ஏதும் நகராது என் வாழ்வில், இவளே எனது வாழ்வின் ஆரம்பம், இவளே என் வாழ்வின் இறுதி என்று எண்ணி எண்ணி இதயம் துடித்து எகிறி வெளியே விழுந்து விடுமோ என்ற பயத்தில் ஆழமான பெருமூச்சின் உஷ்ணத்தோடு நகர வேண்டும் நாட்கள்... அது காதல், அந்த காதல் என்ன என்ன செய்யவேண்டுமோ அத்தனை அவஸ்தைகளையும் செய்யும்.... நள்ளிரவில் அது உறக்கம் கலைக்கும், திக்குத் தெரியாத கருவானின் தீராத தூரத்தை பார்த்தபடி தொண்டை அடைக்க, மூச்சு திணறி அது கேவிக் கேவி அழும், படுத்து கண் மூடி அவளைக் கண்ட அந்த கடைசிக் கணத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும

மழையாலானவள்...!

மழை பெய்து கொண்டிருக்கிறது. மரங்கள் சூழ்ந்த உன் வீட்டு முற்றத்தின் ஓரத்தில் அமர்ந்திருக்கிறாய் நீ. உன் வீட்டு மண் சுவற்றில் ஆங்காங்கே காரை பெயர்ந்திருக்கிறது. இந்த அடைமழைக் காலத்தில் உன் வீட்டுக் கூரைகள் கருணையோடு மழையை உன் வீட்டினுள்ளும் பெய்ய அனுமதிக்கும் என்று முன்பொரு நாள் நீ கூறியிருந்தாய்...ஊறிப் போன மண் சுவற்றையும் நீ சாய்ந்திருக்கும் முற்றத்து ஈர மரத்தூணையும் பார்த்தபடி உன் வீட்டு வாசலில் இருக்கும் ஒரு மரத்தின் பின் நின்று நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்... ஆள் அரவமற்று இருக்கும் இந்த முற்பகலில் குடை கூட எடுக்கக் மறந்து போய் நான் இங்கு வந்து நிற்பது மழையையும் உன்னையும் பார்க்க மட்டுமே என்பதை யாருக்கும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்பதை அடித்துப் பெய்து இந்த மழை சொல்லிக் கொண்டிருந்ததை நீ கவனிக்கவே இல்லை..., மழை நனைத்திருந்த அள்ளிச் சொருகிய பாவடையுடன், காற்று கலைத்துக் கொண்டிருந்த உன் கேசத்தை சரிப்படுத்திக் கொள்ளாமல் எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாய்... நீ... யாருமற்ற இந்த தனிமையோடு அடர்த்தியான மழையை, அந்தமழையால் நனையும் சுற்றி இருக்கும் தாவரங்களை, மரங்களை, இந்த இரைச்