Skip to main content

Posts

Showing posts from March, 2016

கோதை...!

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே... என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம்.  ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை  என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இருந்தது எனத

அவர்...!

ஒரே பேருந்து நிலையத்தில்தான் ஏறினோம்... வெகுநேரம் பேசிக் கொண்டே வந்தார் சிரித்தார், வருத்தப்பட்டார், புலம்பினார், உரிமையாய் தான் தின்ற பிஸ்கெட்டில் பாதி கொடுத்தார் எந்த ஊர் போகிறேன் என்று விசாரித்தார்... உள்ளூர் அரசியல் பேசினார், ஊர் முழுதும் ஒரே வெயில் என்றபடி ஜன்னலோரம் அமர்ந்து கொள்ளட்டுமா? என்று கேட்டமர்ந்தார் அம்மா உணவகம் நல்ல திட்டமென்றார் மீண்டும் இந்த அம்மாவே வரக்கூடாதென்றார் திமுகவிற்கும் என் வாக்கில்லை இருந்தாலும் கலைஞர் திறமையானவர்தான் என்றார் இந்த விலைவாசியில் எப்படி பிழைப்பதென்றார்? மோடியைக்  கொடுத்து வைத்தவர் என்றவர் சொல்லிக் கொண்டிருந்த போதே... இடத்தின் பெயரை அதட்டிச் சொல்லி இறங்கச் சொன்ன கண்டக்டரின் குரலைக் கேட்டவுடன் அரக்கப் பறக்க இறங்கி ஓடிப் போன அவர்  உங்களோடு கூட வந்திருக்கலாம் என்றோ ஒரு நாள்  ஏதோ ஒரு பேருந்தில்..! தேவா சுப்பையா...