ட்ரெய்லர் VIII குளித்து முடித்து வெளியில் வந்த தீபக்...மறுபடியும் பேசத்தொடங்கியிருந்தான்..அடுக்களையில் பாத்திரங்களின் சப்தம் இன்னும் வேகமாக கேட்கத்தொடங்கியிருந்தது...ஒரு விசும்பலுடன் கூடிய முணு முணுப்பு கேட்டுக் கொண்டிருந்தது...ஆமாம் கீதா தான் அது...! நேற்று இரவு வந்த அந்த சண்டையின் மூலம் எதுவென்று ஆழ்ந்து நோக்கினால் அற்பமானதாகத்தானிருக்கும்...அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விவதங்கள் கர்ணகொடூரமாக மாறிவிட....அந்த ராத்திரி மிக அடர்த்தியகத்தான் போனது..அவர்களுக்கு, அவர்களின் குட்டிப்பையன் அருண்...பேந்த பேந்த விழித்த படியே உறங்கிப் போயிருந்தான்.... விடிந்து இன்னமும் பேந்தப் பேந்த முழித்துக் கொண்டு பள்ளிக்குத் தயாராகி....ஸ்கூல் பேக் சகிதம் காத்துக் கொண்டிருந்தவனுக்கு கிலி பிடித்துக் கொண்டது. மீண்டும் சண்டை போடுறாங்களே...அவனுக்கு அம்மாவும் பிடிக்கும் அப்பாவும் பிடிக்கும்...இரண்டு பேரின் முகங்களையும் பரிதாபமாக பார்த்துக் கொண்டு அழுகையை தொண்டையில் அடக்கிக் கொண்டு...சோகமாய் அமர்ந்திருந்தான் 8 வயது அருண். " ஏண்டி சொன்னா புரிஞ்சுக்க மாட்டியா படிச்சுட்டோம் வேலை பாக்குறோம்னு திமிரா உனக்கு.. உன்னைய ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....