புனித வெள்ளி அதிர்வுகள் நிறைந்த ஒரு நாள். சத்தியத்தை உலகம் நிராகரித்ததும், அந்த நிராகரித்தலை உயரிய புரிதலுடன் சத்தியம் ஏற்றுக் கொண்டதும் நிகழ்ந்தேறிய ஒரு அற்புத நாள். பைத்தியக்கார உலகிற்குள் வந்த தேவனின் புனிதத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனித மிருகங்கள் அவரைச் சிலுவையில் ஏற்றி மகிழ்ந்த நாள். தேவன் ஒரு போதும் அவர்களை விரோதமாக பார்த்தவரில்லை. அவர் தேவன். தேவாதி தேவன். உள்ளவருக்கும், இல்லாதவருக்கும், நல்லவருக்கும் கெட்டவருக்கும் அவர் தேவன். அவரின் பிறப்பே ஒரு அதிசயம். மிகப்பெரிய அறிவிப்புகளை இந்த பிரபஞ்சம் தாங்கிப் பிடித்து உலகத்துக்கு அவரது வருகையினை தெளிவாக்கிய பின் தான் அந்த பாலகனை இந்த உலகிற்கு தருவித்தது. அந்த புனிதனைப் பெற்ற பின்பு அவள் கன்னி மேரி ஆனாள். கன்னித் தன்மை என்பது உடலோடு சம்பந்தப்பட்டது அல்ல அது உணர்வோடு தொடர்புகள் கொண்டது. மரியாள் புனிதமான உணர்வுகளோடு என்றும் ஜீவித்திருக்கும் கண்ணியத்தை ஏந்திக் கொண்டு புனிதமானவளானாள். பிறக்கும் போதே தனது தாய்க்கு புனிதத்தைக் கொடுத்து யுகங்களாய் காலம் எல்லா நினைவுகளையும் செரித்துக் கொண்டு முரட்டுத்தனமாய் நகர்கையில் தன்னோடு சேர்த்...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....