ரஜினி படத்துக்கு என்றில்லை எந்த ஒரு படத்துக்குமே விமர்சனம் என்று நான் எழுதுவதில்லை. விமர்சன அரசியல் எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. ஒருவரின் புரிதல் இன்னொருவரோடு எப்போதுமே ஒத்துப் போகாது. அதிர்ஷ்டவசாமாய் ஒத்துப்போகும் அலைவரிசைகளே இங்கே குழுக்களாய் மாறுகின்றன. என்னுடைய பார்வை, புரிதல், அனுபவம் இந்த மூன்றையும்தான் எப்போதும் திரைப்படங்கள் பற்றிய பார்வையாக நான் எழுதுவேன். கருத்துப் பகிர்வு, கருத்துத் திணிப்பு இரண்டுக்கும் இருக்கும் வித்தியாசத்தில்தான் நாகரீகம் என்ற சொல் எப்போதும் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும். கபாலி தமிழ்ப்படம்தான் என்றாலும் கதையின் களம் வேறு நிலம். முழுமையாய் கபாலியை ரசிக்க கொஞ்சமல்ல நிறையவே மலேசிய தமிழர்களின் பேச்சு வழக்கு, மலேசியாவின் வரலாறு, நிலத்துண்டாடல், தோட்டத் தொழிலார்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, போராட்டங்கள், வர்க்கப் பிரிவுகள் என்று தொடங்கி இன்று வரை அந்த மண்ணில் நடக்கும் எல்லாவிதமான சமூகக் குற்றங்கள் வரை தெரிந்திருப்பதோடு ஓரளவிற்கு அவர்கள் பயன்படுத்தும் வட்டார வழக்குச் சொற்களையும் நாம் தெரிந்திருக்க வேண்டும். இதுவெல்லாம் அதிகம் புரியாத வேறு நிலம் ச...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....