உங்களுக்கு எல்லாம் ஒன்று தெரியுமா? அவளை நான் இதுவரையில் சந்தித்ததே இல்லை. பேசி இருக்கிறோம் நிறைய நிறைய...! கவிதைகள் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். அவை யாவும் ஒன்று யாரோ யாருக்கோ எழுதியனவாய் இருக்கும் அல்லது நான் யாருக்கோ எழுதியதாய் இருக்கும் அதுவும் இல்லையென்றால் அவள் யாருக்கோ எழுதியதாய் இருக்கும். நிறைய காதல் கவிதைகள், ருஷ்ய புரட்சி பற்றிய பார்வைகள், ஹிரோஷிமா நாகசாகி இன்றளவும் ஏற்படுத்தி சென்றிருக்கும் அதிர்வலைகள், சோழர்கள் காலத்தில் தழைத்தோங்கி இருந்த தமிழர் பெரும் நாகரீகம், ராஜராஜ சோழனின் மனைவிகள், நிசும்ப சூதனி எப்படி சோழர்களின் காவல் தெய்வமானாள், கற்றளிகள் எழுப்ப வேண்டுமென்ற எண்ணம் எந்தச் சோழனின் மனதில் முதலில் உதித்தது, சிறு குழுவினராய் இன்று இருக்கும் யூதர்கள் ஏன் உலகம் முழுதும் பேசப்படுகிறார்கள்...? என்பதில் ஆரம்பித்து, காரல்மார்க்ஸ், சே, பிரபாகரன், சாலமன் ருஷ்டி, தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்கள், திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்தியா... என்று நமீதாவின் குத்தாட்டம் வரை எல்லாம் பேசுவோம்..... எங்களுக்குள் என்ன உறவு இருந்தது, அவள் என்னவாக என்னை நினைத்திருப்பாள் என்று கூட நான் இது...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....