எம் சிறகினை முறித்துப் போட்டாய் காலமே... கால்கள் கொண்டு திக்குகளெட்டும் நடந்து காட்டினோம்...! பேச்சற இரு என்று எம் நாவினை நீ வெட்டி போட்டாய் காலமே... எம் மெளனத்தால் அன்பென்னும் பூக்களை எம்மைச் சுற்றி கோடிக்கணக்கில் மலரச் செய்தோம்...! எம் விழிகளை குருடாக்கினாய் காலமே... இருளென்னும் கருமையில் கலங்காது நின்று வர்ணங்களை எம் புத்தியில் தேக்கி வைத்து எமக்குள் யாமே மகிழ்ந்து காட்டினோம்! சோகங்களை கொடுத்தாய்; பொருளாதாய உலகில் மனிதர்களின் கோர முகங்களைக் காட்டினாய்; பாசமென்னும் மாயையின் ஆழத்தைக் அறிவித்தாய்; சுற்றி சுற்றி மாயைகள் விரட்ட ஓடும் கால்களுக்கு எல்லாம் எம்மை சொந்தமாக்கி விட்டு எக்காளமிட்டு சிரித்தாய்....! என்னதான் செய்து விடுவாய் காலமே...நீ? காலனை அனுப்பி எம்மை மரணிக்கச் செய்யும் முன்பு நான் காலத்தை நிறுத்தி வாழ்பவன் என்ற சத்தியம் உணர்..! பொய்களின் நகர்வுகளில் எமக்கு சமைக்கப்படும் சங்கடங்கள் எல்லாம் சத்திய அக்னியில் எரிந்தே போகும் என்ற நிதர்சனம் அறி! கோபங்கள் கொள்ளும் மூளைகள் எல்லாம் சதைக் கோளங்களாகி புழுக்களைப் பிறப்பித்து மண்ணில் மட்கி மறையும் என்பதை தெளி..! எம்முள் படிந்து கிடப்பது ப...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....