பார்வைகளின் பரிணாம மாற்றத்தில் பரிமாறிக் கொண்ட மின்சார ஒத்தடங்களின் ஓரங்களில் தேங்கி நின்ற காமம்... உடைப்பட்ட கணத்தில் தகிப்புகளுக்கிடையேயான... முடிவுறா யுத்தங்களின்... மூர்க்கத்தில்..கொடுத்து எடுத்து எடுத்து கொடுத்து... எல்லாம் தொலையும் உச்சத்தில் கரைந்து போன நிமிடங்களில் அழுந்தி தள்ளப்பட்ட... காலமில்லா பெருவெளியில் மிதந்து..மிதந்து போக்கிடம் மறைந்து...பொய்மை அழிந்த திருப்தியின் வேர்களில் மெளனாமாய் மூழ்கி இருக்கையில் ஆண் என்ன? பெண் என்ன? ஜனித்ததெல்லாம் அறிந்த.. சூட்சுமத்தின் சுவடுகள்.. வேண்டுமென்றே ஒளிக்கப்பட்டு புலன்கள் அறியா கோடுகளில் பிரிந்து கொண்டு...இடும் சட்டங்களின் பின்புலத்தில் கேளியாய் ஒளிந்திருக்கின்றன.. பொய்மையின் சித்திரங்கள்... மெளனமாய் கோடுகளை அழிக்கும் காமமோ பொழுதுகளை அழித்து விட்டு பெரும்பாலும் மலர்கிறது... அர்த்தமற்ற ஜாமங்களில்...! விளக்கம் வேண்டுமென்று தோணவில்லை....ஒன்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. ஆன்மாவில் ஆண் என்றும் பெண் என்றும் தனித் தனி இல்லை. தேவா. S
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....