அர்த்தம் இல்லாத கவிதைதான் இது.....காதலுக்கு அர்த்தம் தேடினால்.... நமக்கு சிக்குவது எல்லாம்....குழந்தைத்தனமாகத்தான்....இருக்கும்! அப்படித்தான் இந்த கவிதையும்..... காதலியை பார்த்து விட்டு....தன் வீடு நோக்கி திரும்பும் ஒரு கிராமத்து இளைஞன்...அவள் காதலிக்கிறாளா இல்லையா என்று கூட இவனுக்குத் தெரியாது....ஆனால் அவளைப் பற்றிய நினைவுகள் அழுந்தப் பதிந்துவிட்டன இவனது மனதில்....அதனால் தான் சில் வண்டு சப்தம் கூட இவனை கேலி செய்வது போல தோன்றுகிறது..... சாராலாய் அவனைச் சுற்றி ஏற்பட்ட சூழ் நிலையும் அவனது காதலை ஊக்குவிக்கும் வினையூக்கி ஆகிப் போனதுதான் அழகு.....! சூழலுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்... வசதியாய்....பிறகு படியுங்கள் கவிதையை.....அர்த்தங்கள் பிடிபடலாம்.....அழகாக.....! அது ஒரு மழை நேரத்து... மாலை நேரம்-என் ஒற்றையடிப்பாதை.... நடையோடு துணைக்கு வந்த ... நிலாவையும்...தாண்டி... பின் தொடர்ந்தன...உன் நினைவுகள்... வழி நெடுகிலும்.. நடை பயின்று.. ஒயிலாய்...வந்த... ஒரு ஊதக் காற்று... காதோரம் வந்து.... உன் பெயரை...கிசு கிசுத்து விட்டு... ஓடி மறைந்தது.....! தூரத்திலிருந்து... ஒரு நட்சத்திரம்.... உன்னைப் போலவே....
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....