
இரவுகளின் தாரகை நான்...
மாலை வேளைகளில் தான்...
என்....பெண்மைக்கு....
தூரிகையால் அலங்காரங்கள்....
வாசனைகளில் என்னை நிரப்பி...
வரும் வாடிக்கையாளனுக்கு...
காத்திருப்பேன்....வாசலிலே...!
கண் இமைக்கும் நேரத்தில்...
காதல்....
கை சொடுக்கும் நேரத்தில்....
காமம்.. .!
பணப்பையின் கனத்திற்கு...
ஏற்றார் போல கூடிக் குறையும்..
எங்களின் உணர்வுகள்!
எச்சமிட்டு பறக்கும்...
காகம் போல....
உச்சத்திற்கு....பிறகு...
பறக்கும் மனிதர்களுக்கு நடுவே...
வயிற்றுக்காக உடல் விற்கும்...
அவலங்கள் நாங்கள்!
பிரபஞ்ச சுழற்சியின்...
சூட்சுமத்தை.....வர்ணமாக்கி...
விலைக்கு விற்கும்...
தலைமுறை கடந்த வியாபாரிகள் நாங்கள்!
உடல் தொட்ட எந்த விரல்களும்...
எங்கள் உள்ளம் தொட்டதில்லை...!
விரக தாபத்திற்கு...'
விளக்கம் தெரியாமல்...
விரகத்தை விளக்கில் எறிக்கிறோம்...!
எங்களுக்குள்ளும் ...இருக்கிறது...
காதலும் காமமும்...காய்ந்துபோன நிலமாய்...
தேய்ந்து போன நிலாவாய்....!
உழைப்பிருந்தும் உற்பத்தியின்றி..
முடங்கிக் கிடக்கின்றன...
எங்களின் கருவறைகள்...
தெய்வமில்லா…கோவிலின் ...
திருவிழாவாய்....தொடர்கிறது....
எங்களின்...இரவுகள்!
ஒரு சீரியசான தொடர் பதிவுக்கு நடுவே...சட்டென்று.... டர்ண் செய்து.....இந்த கவிதை பதிவினை வெளியிடுகிறேன்.....காரணம் எதுவும் கிடையாது.. என்னைப் பொறுத்த வரையில் எந்த தாக்கத்தையும் உள்ளே வைக்கக் கூடாது....அதே நேரத்தில்...வாழ்க்கை எல்லாவித பரிமாணங்களையும் கொண்டது.. எதையும் மிச்சம் வைக்காமல் அலசி ஆராய வேண்டும்....! ஒரு பயணிக்கு சுற்றுப்புறங்களை வேடிக்கைப்பார்த்து உள்வாங்கிக்கொள்வது தவிர வேறு என்ன வேலை இருக்கிறது..... வாழ்க்கைப்பேருந்தின் பயணிகள் தானே... நாம்....!
விலை மாதுக்கள் என்பவர்கள் நமது கலாச்சாரத்தோடு பிண்ணிப் பிணைந்தவர்கள்....! அந்த காலங்களில் அவர்களிக்கு மரியாதை செய்து தெய்வத்துக்கு சமமாய் மதித்த காலங்களும் அதற்கான கதைகளும் நம் பாரம்பரியத்தில் நிறையவே உண்டு....! தெய்வத்துக்கு தொண்டு செய்து....அவர்கள் மனிதர்களின் இச்சைகளை தேவையின் பொருட்டு தீர்த்து வைத்தார்கள் அதனால்தான் அவர்களை தேவரடியார் என்று அழைத்தனர்.
இன்னும் சொல்லப்போனால் அவர்கள் விருப்பப்பட்டால் தான் சல்லாபம்....யாருடைய குடியையும் கெடுக்கும் பொருட்டு செயல்படவும் மாட்டர்கள்....வேண்டும் என்றே பொருள் ஈட்டவும் தங்களின் காமத்தை விற்கவும் மாட்டார்கள். இவர்களை மரியாதையாக ஒவ்வொருவரும் நடத்த வேண்டும் என்றுதான்.. இவர்களை இறைவனை மணந்து கணவனாக ஏற்று வாழ்ந்து வந்தார்கள், இறைவனின் மனைவி என்றால் யாரும் தவறாக நடக்க மாட்டர்கள் அல்லவா.... வற்புறுத்த மாட்டார்கள் அல்லவா? அதுதான் லாஜிக்.....இதற்கு நமது இலக்கியங்களில் ஓராயிரம் விளக்கங்கங்களும் உதாரணங்களும் இருக்கின்றன.....!
நாளடைவில் இவர்களை சமுதாயம் அறுவெறுப்பு பொருளாக்கியது......ஆண்கள் அத்து மீற ஆரம்பித்தார்கள்.....போகத்துக்காக மோகம் கொள்ள ஆரம்பித்தனர்... ! தொடர்ந்து இன்னலுக்கும் அவமரியாதைக்கும் நடுவே...இவர்கள் நலிவடைந்து நலிவடைந்து....கடைசியில் பொருளீட்டும் பொருட்டு வியாபாரப் பொருளாய்...சந்தைக்கு வந்து விட்டார்கள்....வறுமை தான் இன்றைய விபச்சரத்தின்...மூல காரணமாய்ப் போய் விட்டது. பழைய காலத்து உதாராணங்களை வைத்துக் கொண்டு வரப்போகும் நவீன யுகத்திற்கும் நமக்கு தேவரடியார்கள் தேவையில்லை......
வறுமையைகருவறுப்போம்.....மனிதர்களை....மனிதர்களாய்...வாழச்செய்வோம்.....!
தேவா. S
தேவா. S
Comments
தேவா கலக்கிட்டீங்க