பாலகுமாரன் தாக்கம் நிறைய இருக்கு நீங்க எழுதுற எழுத்துலன்னு நிறைய பேர் என்கிட்ட சொல்லவும் செய்றாங்க, மின்னஞ்சலும் செய்றாங்க. சில பேர் அதை மாத்திக்கச் சொல்லியும் ஆலோசனை சொல்றாங்க...! என்கிட்ட கண்டிப்பா பாலகுமாரனோட தாக்கம் இருக்கத்தாங்க செய்யும். என்னைப் பொறுத்தவரைக்கும் எழுத்து அப்டீன்றதோட ஆழத்தை நான் ருசிச்சு அனுபவிச்சது பாலகுமாரன்கிட்டதான். இன்னிக்கு வரைக்கும் அந்த ருசி மாறாம இருக்கு. ஆனா தயவு செஞ்சு பாலா சார் மாதிரி எழுதுறேன்னு மட்டும் சொல்லிடாதீங்க... நிறைய பேர் அப்டி தான் எழுதுறதா நம்புறாங்க, வெளிலயும் சொல்லிக்கிறாங்க. ஆனா பாலா சார் மாதிரி ஒருத்தர்தாங்க இருக்க முடியும். அவருடைய தாக்கத்தை நாம நம்ம வழியில நின்னு சொல்லும் போது சில வார்த்தையாடல்களில் நமக்குள் நம்முடைய ஆஸ்தான குரு வந்து உக்காந்துடுவார். குரு அப்டீன்ற வார்த்தை ரொம்ப பெரிய வார்த்தை மட்டும் இல்லை இருக்குற அத்தனை வார்த்தைகளிலும் ரொம்ப புனிதமானதும் வலிமையானதும் கூட. ஒரு குரு எப்போதும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் தன்னை நேசிக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. அவர் ஒரு தன்னிச்சையான நிகழ்வாத்தான் இருக்கிறார். வெளில இருந்து பேசுறவ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....