சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றினை இதுவரையில் ஜனரஞ்சகமாக வெகுஜனம் அறிந்து கொள்ளும் வகையில் யாரும் பதிவு செய்து வைக்கவில்லை. ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் வரலாற்றுத் தகவல்களும், ஒரு சில மிக சுவாரஸ்யமற்ற நடையில் எழுதப்பட்ட புதினங்களும், கார்லே, வேல்ஸ் போன்ற வெள்ளைக்காரர்கள் பதிவு செய்து வைத்திருக்கும் சில விபரங்களையும் தாண்டி தொடர்ச்சியான ஒரு நீண்ட நெடிய புதினம் தமிழர்களுக்கு தருவிக்கப்படவே இல்லை. சோழ தேசத்தில் வளர்ந்தவெனினும் அடிப்படையில் நான் பாண்டிய தேசத்தவன். காளையார்கோயிலிலும் மறவமங்கலத்திலும் இன்னபிற சிவகங்கைச் சீமையின் செம்மண் புழுதிகளுக்குள் சுற்றி திரிந்திருக்கிறேன். கருவேல மரங்களுக்கு நடுவே படுத்துக்கிடக்கும் பிரம்மாண்டமான கண்மாய்களில் கண்கள் சிவக்க குளித்து விளையாடி இருக்கிறேன்... ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் இருக்கும் கணக்கில்லாத ஊருணிகளும், காரைக்கற்களால் கட்டப்பட்டு இடிந்து மண்மேடாய்க் கிடக்கும் கற்குவியல்களுக்கு நடுவே ஒளிந்து பிடித்து விளையாடிய போது இவைகளுக்குளெல்லாம் சிவகங்கைச் சீமையின் வீரமிகு வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது என்று நான் அப்போது கருதியதில்லை. காளை...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....