விஜய் அஜீத்துக்கு எல்லாம் பிடிச்ச லூசு சூர்யாவுக்கும் பிடிச்ச கதைதான் அஞ்சானோட சோகக்கதை. ராஜு பாய் வாய்ல குச்சியோட சுத்துறாரே வாய்க்குள்ள இருக்க குச்சி வாய்ல குத்திடாதேன்னு தான் பதற முடியுதே தவிர அதைப் போய் எப்டிங்க ஸ்டைல்னு எடுத்துக்குறது? கருமம் பிடிச்ச அதை எல்லாம் எப்டிங்க ஸ்டைல்னு சொல்லி படமா எடுத்திங்க லிங்குசாமி. தலைவால விஜய் என்ன கொடுமை பண்ணினாரோ அதே கொடுமைல கொஞ்சம் ஆனியன் கேரட் எல்லாம் தூவி அஞ்சான்ல சூர்யா பண்ணி இருக்காரு.... வில்லன் யாருன்னு தெரிஞ்சு போச்சு, ப்ரண்ட கொன்னவன ராஜு பாய் திரும்ப வந்து கொல்லுவாப்ளன்றது ஒண்ணுந் தெரியாத பாப்பா சமந்தாவுக்கே தெரியும் போது நமக்கெல்லாம் தெரியாதா? என்ன துப்புக் கெட்ட படத்தை எடுக்க இம்புட்டு துட்டு செலவு பண்ணி இருக்காய்ங்களேன்னு நினைக்கிறப்பதான் கப்புன்னு தொண்டைய அடைக்குதுங்க... இவங்களுக்கு எல்லாம் சூப்பர் ஸ்டார் மாதிரி மாஸ் ஹீரோவா ஆகணும்ன்ற ஆசை இருக்கே தவிர கதைய கேட்டு நடிக்கணும்ன்ற அறிவு இல்லாமலேயே போய்டுது. ராஜு பாய்... ராஜு பாய்னு... ஸ்கீரீன் புல்லா கூவுறானுங்கோ, எனக்கு என்னமோ பாஷா பாய் பாஷா பாய்னு தான் கேட்டுகினே இருந்துச...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....