ஆதியிலே இருந்து அசைவற்ற சிவம், சூன்யம், சத்தியம் எப்போது இயங்கத் தொடங்கியதோ அங்கே தொடங்கியது கலை. இல்லாததை சொல்பவன் கலைஞன் ஆனால் அதுவும் முழுமையிலிருந்துதான் வரும். எல்லாமாய் தன்னுள் எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கும் இந்த பிரபஞ்சம் தேக்கி வைத்திருக்கும் ரகசியங்களும் அற்புதங்களும் கோடானு கோடி என்று சொல்வதும் ஒரு மட்டுப்பட்ட நிலைதான்.. நான் ஒரு இசைக்கலைஞன் மனிதர்களை விட ஸ்வரங்களோடு எனக்கு ஸ்னேகிதம் அதிகம். இசையும் பாடலும் எனது இரு கண்கள்....எனது குரல்வளையிலிருந்து வெளிப்படும் சப்தங்கள் எல்லாம் பிராணனிலிருந்து வெளிப்படும் காற்றின் ஏற்ற இறக்கமே...! ஒரு ராகத்தை ஆரோகணத்திலிருந்து படிப்படியாக அவரோகணத்திற்கு கொண்டு வந்து ஸ்வர சுத்தமாக ஆரோகணத்திற்குக் கொண்டு சென்று விளையாட முழுக்க முழுக்க மூச்சுப் பயிற்சி அவசியம்...பிரணாயமத்தில் சுவாசத்தை கட்டுக்குள் கொண்டு வந்து சப்தத்தினை பயில, பயில குரல்வளையிலிருந்து வெளிப்படும் காற்றின் அளவுகள் தேவைக்கு ஏற்ப ஸ்வரங்களுக்குள் நின்று இராகங்களை மெருகூட்ட...எனது குரல் உங்களுக்குப் பிடித்துப் போகிறது. முழுக்க முழுக்க பூமியோடு பந்தப்படாத ஒரு சிந்தனைக்குள்...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....