ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு வித சூழ்நிலைகள் உருவாகி அதன் போக்கில் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நகர்ந்து செல்லவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் வாழ்வென்றால் என்ன? நாம் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ஏன் செய்து கொண்டிருக்கிறோம் என்ற கேள்வியோடு தேடலில் இருப்பவர்கள் நிச்சயமாய் தொடர்ந்து நான் எழுதுவதை வாசிக்கிறார்கள். அதே நேரத்தில் தேடலில் இல்லாதவர்களும் புரிகிறதோ இல்லை புரியவில்லையோ...என் மீது கோபம் கொண்டாவது என்னதான் எழுதி இருக்கிறான் என்று விமர்சிக்க வேண்டியாயினும் வாசித்து விடத்தான் செய்கிறார்கள். பெரும்பாலும் மனம் மறுத்தாலும் ஆன்மா வாசிக்கத்தான் தூண்டும். இது கண்ணாடியில் நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் ஒரு பாங்கு ஆதலால்.... ஒரு வித கவனம் ஈர்க்கப்படுவதும் அதை மறுத்து மனம் வெளியே கூட்டிச் சென்று கேளிக்கைகளை வேடிக்கைப் பார் இங்கே ஒன்றுமில்லை என்று கட்டளைகள் போடுவதையும் நாம் அறியாமலில்லை. ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பங்களின் மூலம் அடைய நினைப்பது ஒரு நிம்மதி நிலையை, இந்த நிம்மதியை வேண்டித்தான் மறைமுக ஓட்டமாக பொருளீட்டலும், புகழ் தேடலும், இன்ன பிற சுகங்களைத் தேடலும் தொடருகிறது. ப...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....