Skip to main content

Posts

Showing posts with the label கவிதை தேடல்

யுத்தம்..!

சிறு ஓய்வுக்குப் பிறகெழுந்து உடை தரித்தாயிற்று தலைக்கவசத்தை மனைவி எடுத்துத் தருகிறாள் வாசல் வரை சென்று மீண்டும் வந்து பிள்ளைக்கு முத்தமிடுகையில் மறந்து போன உடைவாளினை எடுத்து இடுப்பில் தரித்துக் கொள்கிறேன் காலையிலிருந்து கால் மாற்றி மாற்றி நின்று கொண்டிருக்கும் என் புரவி கனைத்து என்னை அழைக்கிறது... அதன் கழுத்து தடவி வயிற்றில் கால் உதைத்து கடிவாளம் சொடுக்கி முறுக்குகையில் திமிறி எழுந்து களம் நோக்கி... விரைகிறதென் புரவி, அடுத்தென்ன நிகழுமென்றறியா அதிரகசிய வாழ்க்கையொன்றைப் பருகியபடி சலனமற்று நகருமென் வாழ்வில் நித்தம் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கிறது முடிவில்லா யுத்தம்...! தேவா சுப்பையா...

சுவடுகள்...!

திசைக்கொன்றாய் என் கனவுகளைப் பிய்த்தெறிந்து விட்டேன் எழுதிக் கொண்டிருந்த கவிதையொன்றின் குரல்வளையைப் பிடித்து துடிக்க துடிக்க அதனை கொன்று முடிப்பதற்கு முன்பாக நெருப்பில் என் ஆசைகளை எரித்து விட்டேன், இனி எப்போதும் நான் முன்பு போல் இருக்கப் போவதில்லை..என்று என் கடைசி சொட்டு இரத்தம் மண்ணில் விழும் போது எனக்கு தோன்றியதுதான் எனது கடைசி ஞாபகம், முன்பொரு நாள் நான் நானாயிருந்த போது யார் யாரோ வந்தார்கள், ஏதேதோ கேட்டார்கள், பேசிச் சிரித்தார்கள், பூக்களை சிலர் பரிசளித்தார்கள், புன்னகையை சிலர் என்னிடமிருந்து பறித்துச் சென்றார்கள், கோபித்துக் கொண்டார்கள், ஏமாற்றினார்கள், ஏமாந்தேன் என்றார்கள்.... சில பிணந்தின்னி கழுகுகள் என் மீது வந்தமர்ந்தன என் கண்ணில் ஒளி இருப்பதாய் சொல்லி ஒரு கழுகு என் கண்ணைக் கொத்திய போது என் உதடுகளிலிருக்கும் புன்னகை பிடித்திருப்பதாகக்கூறி இன்னொரு கழுகு என் உதடுகளைக் கொத்தியது... அப்போதும் துடித்துக் கொண்டிருந்த என் இதயத்தில் நிரம்பிக் கிடந்த காதல் யாருக்கானதாய் இருக்கும் என்று இருவர் வாதிட்டுக் கொண்டே சராலென்று என் இதயத்தைப் பிடுங்கி நெருப்பிலிட...

எதுவமற்றதின் குரல்...!

யார் உருவாக்கினார் நியதிகளை? நேற்றைய பகலைப் போலத்தானே இருக்கிறது இன்றைய பகலும் அதைத் தொடர்ந்து  வரும் இரவும்... இருக்கிறது.. குளிரையும் வெப்பத்தையும் தவிற வேறெதுவையும் உமிழ்ந்திருக்கிறதா காலம்...? சூரியனைச் சுற்றி வரச் சொல்லி பூமியிடம் சொன்னது யார்? சூரியனுக்கு அப்பாற் எத்தனை கோடி பூமிகள் மொத்தமிருக்கும்...? இருப்பதற்கு ஏன் இவ்வளவு சங்கடம்...? அந்த குயிலுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை..., மத்தியானத்திலிருந்து கூவி விட்டு இப்போதுதான் பறந்து செல்கிறது... நிசப்தத்தில் மிதந்து கொண்டிருக்கும் அதன் சப்தத்தைப் போல... எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கிறது ஒரு இன்னிசையை காலமெப்போதும்... காரம்பசுக்கள் கழுத்தின் மணி அசைய வீடு திரும்பத் தொடங்கி விட்டன... முதல் பனி ஒன்று மெல்ல ஒரு புல்லின் நுனியில் வந்தமர்கிறது... இந்த குளிர் இரவில் யாரோ ஒரு வழிப்போக்கன் எங்கிருந்தோ வாசிக்கிறான் தன் புல்லாங்குழலை... வெதுவெதுப்பான கனவுகளோடு கம்பளியை இழுத்துப் போர்த்திக் கொண்டு என்னோடு புரண்டு கொண்டிருக்கிறது வாழ்க்கை...! தேவா சுப்பையா....

ஆதியின் பாடல்....!

பெ யர்த்தெடுக்க முடியாத பெரு மெளனமொன்று  சடாரென்று முகமறைந்து  அகம் நிறைத்து.... ஒற்றைப் புள்ளிக்குள்  ஒடுங்கி எழுதிக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தின்... ஆதி பாடலொன்றை..., திசைகளில்லா பயணமொன்றுக்கு  சிறகுயர்த்தி எழும்புகிறது செந்நாரை ஒன்று... எங்கோ அடித்துப் பெய்கிறது மழை...! தேவா சுப்பையா...

சாமி....!

ஒரு மிகப்பெரிய இழப்பிற்கு பின் நான் சிவன் கோயிலுக்கு வந்திருந்தேன். படைத்தவன் இல்லாத போது படைப்புகளே படைத்தவன் இருந்தான் என்பதற்கு  சாட்சியாக எஞ்சி நிற்கின்றன. என்னை படைத்தவன் அன்று கோயிலுக்கு நான் சென்ற போது இல்லை. நான் என்னைப் படைத்தவனையும் படைத்தவனை பார்த்துக் கொண்டிருந்தேன். இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவே இல்லை. சிவலிங்கம் எப்போதும் போல மெளனமாயிருந்தது. அந்த கோயில் மிகப்பழமையானது அல்ல. மிக புதியதும் அல்ல. மத்திம காலத்தில் அது கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று மனது சொன்னது. பழைய மதுக்கூர் சுற்றிலும் வயல்கள் நிறைந்த அழகிய கிராமம். வேளாண்மை செய்து வாழும் மக்கள் நிறைந்த ஊர். இயற்கையோடு தொடர்பில் இருந்து இருந்து மிகப்பெரிய பக்குவ நிலைக்கு வந்திருக்கும் மக்கள் நிறைந்த இடம். இயற்கையோடு இயைந்த வாழ்க்கை  வாழ்க்கையின் நிலையாமையை எளிதாக போதித்து விடுகிறது. மழை பெய்ய வேண்டும், ஆற்றில் தண்ணீர் வரவேண்டும், இன்ன பிற காலச் சூழல்கள் பொருந்தி வரவேண்டும், பல மனிதர்களின் கூட்டு உழைப்பு வேண்டும். ஆமாம் விவசாயம் மனித வாழ்வின் சூட்சுமத்தை மனித தொடர்புகளின் அவசியத்தை, விட்டுக் கொடுத்தலின...

யாருமற்ற பொழுதுகள்..!

தெரியாது என்ற வார்த்தையோடு நான் முடித்துக் கொண்டேன் என்று நினைக்கையில் ஏன் தெரியாது என்று எப்போதும் யாரோ தொடங்கி வைக்கிறார்கள் ஒரு வாழ்க்கையையோ அல்லது உரையாடலையோ...! அறியாத பக்கங்களை எல்லாம் நுனி மடக்கி யாராவது கொடுத்து வாசிக்கச் சொல்கையில் வேண்டாம் என்று... உதடு பிரிக்கும் முன்பே திணிக்கப்படுகின்றன விஷயக் குப்பைகள்..! எல்லாம் மறுத்து விசய ஞானங்கள் அறுத்து நச்சாய் நினைத்து ஒதுக்கி... மெல்ல சுருண்டு ஒடுங்கி ஜன்னலரோப் பேருந்தில் வேடிக்கைப் பார்க்கும் முகமற்ற பயணியாய் பயணிக்கவே எப்போதும் விரும்புகிறது மனது...! செய்திகளோடு வருபவர்களை எல்லாம் தூர நிறுத்தி திருப்பி அனுப்பி... புன்னைகையோடு வரும் மனிதர்களை மட்டும் சேர்த்து வார்த்தைகள் இல்லாமல் என்னோடு வாசம் செய்யுங்கள் என்ற கட்டளையை கண்களால் இட்டு மெளனத்தை பகிர்ந்து நகரும் என் இருட்டு பொழுதுகளில் வெளிச்சமில்லை என்று சொல்பவர்களுக்கு எப்படி  தெரியும்... இருளில் ஜனித்ததுதான் வெளிச்சமென்று...! தேவா சுப்பையா...

புத்தனின் கனவு...!

மேகங்களுக்கென்று திசையொன்றும் இருப்பதில்லை காட்டு மலர்கள்  யார் பார்க்கவும் பூப்பதுமில்லை ப்ரியங்கள் என்னும் விதையில் விரிந்து கிடக்கிறது அகண்டப் பெருவெளி...! இரவுகளை உடுத்திக் கொண்டு வருவதெல்லாம் பகல்களென்றும் பகல்களுக்குள் படுத்திருப்பது இரவென்றும் யார்தான் அறிவார்..? கனவுகளை எல்லாம் விழிகளொன்றும் காண்பதில்லையே... அவை புலனறிவுக்கு அகப்படாத புத்த நிலையின் தத்துவ விளக்கங்கள்தானே....! பெயரில்லாத ஒன்றுக்கு எத்தனை பெயரிட்டாலும் அது பெயரில்லாததே.... திட்டமிடாத புத்தி எந்த திசையைத்தான் கால்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட முடியும்..? தேவா. S

காட்டுப் பூக்கள்...!

சுத்த சரீரங்களை சுரமாகக் கொண்ட வாசகன் விரும்பும் மெல்லிசையல்ல எமது எழுத்துக்கள்...! அவை கர்ண கொடூரமான கரடு முரடுகளைச் சுமந்த கேட்கவொண்ணா சப்தங்களால் ஆனா முரட்டு ராட்சசனின் கர்ஜனைகள்! நளினங்களை கூட்டிக் கழித்து விழிகளுக்கு விருந்து கொடுக்கும் ஓவியங்களை எப்போதும் நாம் சமைப்பதில்லை...., மாறாக... புலன்களைக் கடந்த புத்திகளுக்குள் ஜனிக்கும் கோணல் மாணல் கோடுகளை கோரமாய் வெகுண்டெழச் செய்து விரும்பத்தகா பிரமாண்டங்களாக்கவே முயன்று கொண்டிருக்கிறோம்..! அழகியலைப் பட்டியலிடும் கூட்டத்தில் யாம் எப்போதும் வரிசையில் நிற்பதும் கிடையாது உயரங்களில் இருப்பதாலேயே எல்லோரையும் அண்ணாந்து பார்ப்பதும் கிடையாது...! வாழ்க்கையை எழுத்தாக்கையில் வசீகரம் எதற்கு... வசீகரமாகவே எல்லாம் இருந்து விட்டால் வாழ்க்கைதான் எதற்கு...? ஆமாம்... இது கரடு முரடான பாதைதான் காட்டருவி கொட்டும் கடக்க முடியா வழிமுறைதான் ஆனால் மறுத்து நகர்ந்தாலும் இயற்கை என்பது இயல்புதானே? இல்லை என்றாலும் இருப்பு என்பது நிஜம்தானே...? அதனால்.... அக்னியில் கோடுகள் கிழித்து முற்கள் தைத்த வார்த்தைகளால் எமது முதுகெலும்பின் நீட்சிகளை உடைத்து எப்போதும் இராட்சச வடி...

கடவுளின் காதல்...!

என்னை யாரென்று... அவளுக்குத் தெரியாது! அவளிடம் நான் பேசியது கூட இல்லை; புகைப்படத்தில்தான் என்னை அவளும் அவளை நானும் பார்த்திருக்கிறோம்.... என் இயல்புகளை அவள் அறிந்ததில்லை அவளின் இயல்புகளை நானறிந்ததுமில்லை எங்களிடம் தினசரி பகிர்தல்கள் இல்லை; பொய்யான புரிதல்கள் இல்லை; எப்போதும் புகைப்படங்களில் மட்டுமே புன்னகைகளை பரிமாறிக் கொள்வோம்... அவள் வாழ்க்கையை அவள் வாழ்கிறாள் என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன்... அவளை காதலிப்பதாக நானும் என்னை காதலிப்பதாக அவளும் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை என் கவிதை வரிகளில் பல நேரம் அவள்தான் பவனி வருவாள் என்பது கூட அவளுக்குத் தெரியாது; பரிட்சையம் இல்லாத இந்த உறவினை... மனம் காதலென்கிறது; புத்தி கடவுள் என்கிறது; அவ்வளவுதான்...! தேவா. S

விலக்கப்பட்ட கனி...!

விலக்கப்பட்ட கனியை புசித்து முடித்திருக்கையில் வக்கிர புன்னகையை மெலிதாய் துடைத்துக் கொண்டான் சாத்தானுக்குள் இருந்த கடவுள்..! மறுக்கப்பட்டதின் விதிகளை படைப்புகள் எப்போதும் அத்துமீறும் என்பதாலேயே மீறலுக்காய் மறுத்து வைத்த பாவ பரிமாற்றமாய் மாறிப் போனது பிரபஞ்சத்தின் மைய முடிச்சு...! எட்டாவது படிக்கையில் எதிர் வீட்டு ஜெயஷ்ஸ்ரீ அக்காவுக்கு முத்தம் கொடுத்த பக்கத்து வீட்டு அண்ணனுக்குள் ஒளிந்திருந்து... அது எட்டிப் பார்த்தது; கீதா டீச்சரிடம் சேட்டைகள் செய்த முருகேசன் வாத்தியாரின் மூளைக்குள் பிடிவாதமாய் சம்மணக் காலிட்டு.. அமர்ந்திருந்தது; நெரிசலான பேருந்தில் ஒரு பெரியம்மாவை இடித்துப் பார்த்த தடியனுக்குள் கம்பீரமாய் நின்று கொண்டும்; நாடார் கடையில் சாமான் வாங்கையில் செல்வி அத்தையின் இடுப்பை முறைத்துப் பார்த்த பொட்டணம் போடும் கணேசனின் விழிகளில் கள்ளத்தனமாய்... எட்டிப் பார்த்தும்... ஆதியில் விலக்கப்பட்டதாய் கற்பிதம் கொண்ட ஒன்று எப்போதும் பல் இளித்து இருப்பினைக்காட்டி விட்டு .... இல்லை....இல்லை...இல்லை என்று பொய்யாய் கை விரித்து கட்டுப்பாட்டு விதிகளுக்குள் கபடமாய் ஒளிந்தே கொள்கிறது! திருமண பந்தமென்ற...

வெளிச்சம்...!

தெரியாது... என்ற வார்த்தையோடு ஒரு உரையாடலை நான் முடித்துக் கொள்ள நினைக்கையில் ஏன் தெரியாது என்று கேட்டு எப்போதும் யாராவது தொடங்கி விடுகிறார்கள் அர்த்தமற்ற வார்த்தைகளின் அணி வகுப்புக்களை! அறிந்திராத பக்கங்களை எல்லாம் நுனி மடக்கி யாராவது வாசிக்கச் சொல்கையில் வேண்டாம் என்று... உதடு பிரிக்கும் முன்பு மனம் அவற்றை... எட்டி உதைத்து நிராகரித்து தூர தள்ளிதான் விடுகிறது..! முக ஸ்துதிகளின்... நச்சு முனைகளை ஒடித்து குப்பையில் எறிந்து மெல்ல சுருண்டு ஒதுங்கி ஒடுங்கிக் கொண்டு ஜன்னலரோப் பேருந்தில் வேடிக்கைப் பார்க்கும் முகமற்ற பயணியாய் எப்போதும் பயணிக்கிறது மனது! அறிவின் கனத்தை கழுத்தில் மாட்டிக் கொண்டு ஆணவ இரைச்சலோடு வருபவர்களை எல்லாம் தூர நிறுத்தி திருப்பி அனுப்பி புன்னைகையோடு வரும் மனிதர்களை மட்டும் சேர்த்துக் கொண்டு வார்த்தைகள் இல்லாமல் என்னோடு வாசம் செய்யுங்கள் என்ற கட்டளையை கண்களால் இட்டு பகிர்தலாய் நகர்கிறது என் இருட்டு பொழுதுகள்! தேவா. S

நான் அவன் இல்லை....!

என்னிடம் கேள்விகள் எதுவும் கேட்காதீர்கள்... உங்களுக்கான பதில்களை கொடுக்கிறேன் என்று என்னால் நடிக்க முடியாது ஏனென்றால் உங்கள் கேள்விகள் எல்லாம் பதில்கள் என்ற பொய்யை பெற எழுப்பப்பட்ட பொய்கள் என்று நானறிவேன்..! நான் யாரென்று... இனியும் என்னிடம் கேட்காதீர்கள் ஒற்றை வார்த்தையில் நான் உங்களுக்கான... பதிலானவன் அல்ல...! என் கனவுகளின் எல்லை எதுவென்று கணக்குக் கூட்டி கூட்டி நீங்கள் தொலைந்து போகாதீர்கள்; நான் எல்லைகளுக்குள் ஏதோ ஒரு திசையை நோக்கி எப்போதும் பயணிப்பவன் அல்ல..! என் சித்தாந்த வேர்களை தேடிப் பிடித்து.. என்னைக் கணிக்க... கனவிலும் முயன்று தோற்காதீர்; நான் சித்தாந்தங்களை எல்லாம் செதுக்கி எறிந்து வெற்றில் நிரம்பிக் கிடப்பவன்! என் காதல்கள் எல்லாம் யாருக்காயிருக்கும் என்று உங்கள் புத்திகளை உலுக்கிக் கொண்டு பொழுதுகளை வீணடிக்காதீர்கள்; நான் தேகம் கடந்த வெளியில் தேவைகளற்ற காதலில் லயித்துக் கிடப்பவன்...! என் இறுதி என்னவாயிருக்கும் என்று கூடிக் கூடி பேசி ஓய்ந்து போகாதீர்கள் நான் நெருப்பில் சுடப்பட்டாலும் மண்ணில் புதைபட்டாலும் மரித்துப் போய்விடுபவன் அல்ல...! நெருப்புக்குள் நான் குளிரானவன் குளிருக்...

வழிப்போக்கனின்...வழியில்!

நிலவின் அழகில் தடுமாறி... தளும்பி கிறங்கிக் கிடந்த... ஒரு குளக்கரை இராத்திரியின்.. நிசப்த நிமிடங்களுக்குள் நான் ஊறியே கிடந்தேன்...! மொழிகளின்றி இரைச்சலாய் மெளனத்தை பகிர்ந்து கொண்டிருந்த தூரத்து மலைகளை ஒற்றிக் எடுத்துக் கொண்டிருந்த வாடைக் காற்றின் ஓரத்தில் ஒட்டிக் கொண்டு பறந்த ஒற்றைக் குயிலின் சப்தம் என் காதுகளை தடவிச் செல்கையில் கிறங்கிக் கிடந்த என் விழிகளை அடைத்து மூடி எங்கோ ஒரு கனவு வெளிக்கு இழுத்துச் செல்ல காத்திருந்த இமைகளை மெல்ல பிரித்தெடுத்து மீண்டும் மூழ்குகிறேன்... அந்த மோன நிலைக்குள்...! கேட்கவும் சொல்லவும் யாருமற்று... தேவைகள் எல்லாம் தொலைந்து போன பூமியின் அந்த சொர்க்க இராத்திரியின் நிமிடங்களில் மானுட ஜனித்தலின் அர்த்தங்களை எல்லாம் கை குவித்து நீர்பருகும் ஒரு தாகக்காரனாய்... விழி குவித்து காட்சிகளாய்... பருகிக் கொண்டிருந்தேன்..! சந்தோசங்களின் உச்சங்களுக்கு துணை தேவையில்லை..., சரித்திரத்தின் பக்கங்களுக்குத்தான் நிகழ்வுகளின் அழுத்தங்களும் மனிதர்களின் நகர்வுகளும் அவசியமாகின்றன...! கருக் கூடி ஜனிக்கையில்... உரு மறைந்து மரிக்கையில்... அற்றுப் போகும் வாழ்க்கையில் இடையில் துளிர்க்கு...

ஒரு நதி நகர்கிறது...!

ஒரு நதி நகர்கிறது சலனங்களை எல்லாம் விழுங்கிவிட்டு... இரைச்சலான நிசப்தத்தோடு....! அவ்வப்போது கலைந்து போகும் தவத்தில் யாரேனும் மானுடரின் அத்துமீறல் இருக்கும்.... பல நேரம் கரையோர பறவைகளின் மோன மொழியின் போதையில் கிறங்கியே கிடக்கும்! தன் சுயமே இல்லாமல் வற்றிப் போகும் கோடையிலும் கூட தடத்தினை நியாபகமாய் விட்டுச் செல்லும்...! நிலவின் கிரகணங்களில் ஜொலிக்கும் அலங்காரமாகட்டும் அமாவசை இரவுகளின் அடர்த்தியான அமைதியாகட்டும் சப்தமான ஆழங்களை தன்னுள் தேக்கி... சலனமற்றுதான் நகர்கிறது இந்த நதி!!!! தேவா. S

வார்த்தைகளற்ற மொழிகள்!

மொழி - I மூச்சுக் காற்றின் ஓசை கேட்கும் தருணங்கள்; காதோரம் காற்று சொல்லிச் செல்லும் ரகசியத்தின் கூச்சங்கள்; கடும் காய்ச்சல் ஓய்ந்து போன தினத்தின் அயற்சியான எண்ணமற்ற நினைவுகள்; விடியலில் எழுந்து மீண்டும் போர்வை போர்த்திக் கொண்டு உறங்கத் தொடங்கும் அதிகாலை பகுதி விழிப்பு நிலையின் ஓரங்கள்; கூச்சலற்று தனித்தமரும் தருணங்கள் கொடுக்கும் ஞானங்கள்; அவள் விழிகளிலிருந்து புறப்பட்டு என் விழி சேர்கையில் காதலாய் உருமாறி சிறகு முளைக்க வைக்கும் பார்வை வீச்சுக்களின் தாக்கங்கள்; நிலை குலைத்துப் போடும் வாழ்க்கையின் வலிகள் அழுந்தப் பதிக்கும் தடங்கள்; கெட்ட சொப்னங்கள் கிழித்து தாயின் மடி தேடி எழுந்து கண்ணீரோடு நெஞ்சு கட்டிக் கொண்டு பால்யத்தை கனவு காணும் இரவுகள்; லெளகீக துரத்தல்களில் பணத்திற்காய் பிசாசாய் வேலை செய்யும் அலுவலக அயற்சிகள் ஏற்றி வைக்கும் மனச் சுமைகள்; மூளை அழுத்தங்கள்..... என்று என் அனுபவித்தல்களின் ஆழங்களில் நான் மட்டுமே தனியாய்தானிருக்கிறேன்... என் இருப்பினைச் சுமந்த படி....! *** மொழி - II கடந்து போன ரயிலொன்றின் தூரத்து சத்தம் சுமந்து வந்த காற்று.. விட்டுச் செல்கிறது அடர்த்தியான நிசப்தத்தை! வெ...

செல்லரிக்கும் கனவுகள்..!

தொன்மத்தின் வாசனைகள் துருத்தும் எலும்பாய் எட்டிப்பார்த்த ஒரு இராத்திரியின் வானத்திலிருந்து வழிந்த நியான் ஓளியின் வெளிச்சத்தில் மரணித்துக் கொண்டிருந்தேன் நான்..! உயிரின் பிசிறுகள் விசிறியடிக்கப்பட்ட அகண்ட வெளியில் கரித்துக் கொண்டிருந்த கூக்குரல்களினூடே பயணித்துக் கொண்டிருந்த ஏதேதோ அதிர்வுகள் என் உயிர் நகர்த்தும் ஆசையில் இச்சையோடு என்னை புணர்ந்து கொண்டிருக்கையில் மூளை மடிப்புகளிலிருந்து சாயம் போய் வழிந்து கொண்டிருந்த நினைவுகளின் எச்சத்தில் மெலிதாய் எதிரொலிக்கிறது ஒரு மெல்லிய தாலாட்டு..! அடர்த்தியான இரவினை கெட்டியாக்கிக் கொண்டிருந்த கருமையினூடே மெல்ல நகர்ந்து அரவமாய் உடல் நெளித்து நகர்ந்து நகர்ந்து ஜென்மங்களில் ஏந்தி வந்த உணர்வோடு நியூரான்களை கடந்து செல்லும் கலர்க் கனவுகளை அரிக்கும் கரையான்கள்! மெலிதாய் இழையோடும் புழுக்களோடு மட்கத் தொடங்கியிருந்த உடலருகே திப்பி திப்பியாய் இறைந்து கிடக்கும் சில காதல்களும் காமங்களும், இச்சை தாண்டிய கடவுள் தேடு கனவுகளும் சூட்டில் பட்ட நீராய் ஆவியாகி மறைதலோடு மறைந்தே போகிறது எல்லாமும்...! தேவா. S

காற்று....!

எந்த ஸ்வரத்தினை ஓதுகிறாய் மரத்திடம் நீ தலைசயசைத்து...தலையசைத்து... ரசனையாய் சிரிக்கிறது எப்போதும்! தண்ணீரைத் தடவிச் செல்லும் ஸ்பரிச சந்தோசத்தில் அலை அலையாய் வெட்கத்தை இறைக்கிறது அந்த மரத்தோரத்து நதி...! பூக்களுக்குள் புகுந்து.. மகரந்தங்களை கலைத்துப் போட்டு வண்டோடு அது கொண்ட காதலை சொல்லிச் சிரித்தபடி செல்லும்... இந்த காற்றின் பயணம்தான் ... எதை நோக்கி...? புல்லாங் குழலுக்குள் புகுந்து இசையாய் உடை உடுத்தி செவிகளுக்குள் பயணப்பட்டு இசையாய் மயங்க வைக்கிறது ... மனித மனங்களை...! ஆக்ரோசங்களை எல்லாம் தன்னுள் அடைகாத்துக் கொண்டு சந்தோசங்களை பரப்பும் காற்றை யார்தான் கட்டிப்போட...? வயல் வெளிகளுக்குள் புகுந்து பயிர்களிடம் செய்யும் சில்மிஷங்களை பகுத்தறிவு கொண்டு நிறுத்தவா முடியும்? மனிதருக்குள் புகுந்து நினைவுகளில் நிறைந்து உயிராய் ஊடுருவியிருக்கும் ஓசையற்ற சூட்சுமத்தினை உணரத்தானே முடியும்...? கையிலெடுத்து காட்டவா முடியும்...! எல்லாம் கூட்டிக் கழித்து விடைகளின் வேரினில் கிடைக்கும் பதில்களில் இருந்து எழும் ஒற்றை கேள்வி..இதுதான்... காற்றுதான் கடவுளா? தேவா. S

தழல்...!

சுற்றி எழும் நெருப்பின் பொசுங்கலின் வீச்சம் காற்றில் பரவவிடுகிறது மனித மமதைகளை! தெறித்து விழுந்து... ஜுவாலைகளில் பொடிந்து காற்றில் கால்சியத்தையும் மெக்னீசியத்தையும் கலக்கிறது உருவங்களை கட்டிக்காத்த எலும்புக் கூட்டம்...! அக்னியின் ஒற்றைச் சீற்றம் அழைத்துப் போகிறது வெள்ளை மூளைகளை பஸ்பங்களின் படிமாணத்துக்குள்! சுருங்கிய தோல்கள் கழன்றனவா? இல்லை கருகினவா? அடையாளம் சொல்லக்கூட ஆளில்லாமல் காற்றில் எரிந்து போகின்றன மனித உடல்கள்...! எல்லாம் பொழிந்து நொறுங்கும் பிணமெரியும் அர்த்த ராத்திரிகள்...எல்லாம் எங்கே தொலைக்கின்றன மனித மனங்களை மட்டும்? தேவா. S

ஏக்கம்...!

மாமிசமும் இரத்தமுமில்லா ஒரு இடம் தேடிய எனது ஓட்டத்தில் எப்போதும் தூக்கிச் செல்லும்... தோல்பை கொடுக்கும் கனத்தில்...தடைப்பட்டுப் போகிறது எனது நகர்தல்...! என்னுள் இருந்து ஏதேதோ சிந்திக்கும் குழைவான திடப்பொருள்தான் நானென்று சொல்லும் சித்தாந்தங்களை எல்லாம்.. செதுக்கி எறிந்துவிட்டு... கூடு விட்டு பறக்கத் துடிக்கிறது என் ஆத்மா...! எல்லாம் கடந்து..... எங்கேயோ நான் இருந்து...... காற்றைப் போல பரவி கட்டில்லாமல் சிதறி ஓசைகள் தாண்டிய.. சப்த இறக்கங்களில் நான் சரிந்து கொண்டே போய்.... நிசப்த பள்ளத்தாக்கில் நிரந்தரமாய் வசிக்கும்.... ஆசையெல்லாம்...பெருமூச்சுகளில்... வெளிப்படுகிறது எப்போதும்... ஏக்கங்களின் வெளிப்பாடாய்....! தேவா. S