நான் யாரென்று கேட்கிறீர்களா? தெரியவில்லை. என் பெயரும், ஊரும் சுற்றமும் என் நினைவிலிருந்து அழிக்கப்பட்டு விட்டது அல்லது யாரோ அழித்து விட்டார்கள். இப்போது நடந்து கொண்டிருக்கிறேன் கொஞ்சம் முன்பு படுத்திருந்தேன் அதன் முன்பு எங்கோ போய்விட்டு வந்திருந்தேன். வேறு ஒன்றும் என்னைப் பற்றி எனக்கு சரியாய் சொல்லத் தெரியவில்லை. வெகு காலம் முன்பு இந்த வீதியில் நடந்து பயின்ற ஞாபகமொன்று மட்டும் மெலிதாய் என் நினைவிலிருந்தபடியால் இந்த வீதிக்குள் நடந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை இந்த வீதியாய் அது இல்லாமலுமிருக்கலாம் யாரவது வந்து என்னை யார் என்று கேட்டு விடாத வரைக்கும் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. ஒரு மாடு ஒன்று என் முன்பு வந்து நின்றது. அது முறைத்துப் பார்ப்பது போல தோன்றியது. உற்றுப் பார்த்த போது அதுவும் என்னைப் போலவே வெறுமனே நின்று கொண்டிருக்கிறது என்று புரிந்தது. ஏனோ தெரியவில்லை அதன் கண்கள் என்னைப் பார்த்து நீ யாரென்று கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றியது. நீ யார் என்று அதனிடம் மெல்ல கேட்டேன். அது மெளனமாய் நின்றது. நீ மாடு என்பது உனக்குத் தெரியுமா? இல்லை நான் உன்னிடம் நீதான் மாடு எ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....