Skip to main content

Posts

Showing posts with the label சிறுகதை தொகுப்பு II

சாத்திரம் பேசுகிறாய்....கண்ணம்மா...!

எல்லாக் கதைகளும் மழையில் அழிந்த அலங்காரக் கோலங்கள் போல காணாமல் போய்விடுகின்றன. வாசம் வீசும் மல்லிகையின் நறுமணத்தை காற்று எப்போதும் களவாடிச் சென்று விடுகிறது. தெருக்களில் ஊர்ந்து செல்லும் எறும்புகளின் வாழ்க்கையிலும் காமமுண்டு, பசி உண்டு, இருப்பிடமுண்டு.... கோபமுண்டு... என்று அறிந்த பொழுதில் இங்கே நமக்கென்று விதிக்கப்பட்டதை விஸ்தரித்துப் பார்த்து அர்த்தம் கொள்வது அறியாமைதானே...? யோசித்தபடியே... பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்.  இருவரின் உடலுக்குள்ளும் காமம் கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த அந்தச் சூழலில் இருவருக்குமே இந்த உலகத்தைப் பற்றிய கவலை ஏதுமில்லாமல் இருந்தது. கட்டுப்பாடுகளை எங்களுக்குள் பரவி இருந்த தீ எரித்துக் கொண்டிருக்க..காதலை இங்கே வகைப்படுத்தத் தெரியாத ஒரு நிதானம் எங்கள் நிர்வாணத்தில் ஒளிந்து கொண்டிருந்தது. பனியனைக் கழட்டுடா...என்று "ட்டுடா" விற்கு அவள் கொடுத்த அழுத்ததிற்கு பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்கு காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்..... முழு நிர்வாணம் என்பது கருத்துக்கள் அற்ற நிலை. நிறமற்ற வர...