Skip to main content

Posts

Showing posts with the label கதை

ஈஸ்வரா...

எல்லோரும் போன பின்பு சடலம் மட்டும் தனியாய் கிடந்தது. மாலை பூக்களை எல்லாம் எடுத்துக் கொண்டிருந்தவளுக்கு ஐம்பது வயது இருக்கலாம். நாலு ஆட்களை ஒன்றாய் அடித்து வீழ்த்தும் திடகார்த்தர உடம்பு. சவக்கு சவக்கு என்று வெற்றிலையை மென்றுகொண்டே  தலையில் போட்டிருந்த கட்டை அவிழ்த்துக் கொண்டே நிமிர்ந்தவள் என்ன தம்பி நீங்க போல இன்னும்? இன்னுமில் அதட்டல் அதிகம் இருந்ததது. இல்லங்க போகணும், யாரு இவுக உங்களுக்கு? மாம பயனுங்க, ஒரே செட்டு  தொண்டையை அடைத்த அழுகையை விழுங்கிக்கொண்டேன். நகராட்சி மின் மைதானம், மின் மைதானமென்றால் மின்சாரம் இல்லை. கேஸ் அடுப்பு வைத்து எரிப்பார்க்ள். அதேவிறகுதான் ஆனால் எரியூட்டுவது கேஸ் அடுப்பு. பூங்காவைப் போல சுற்றிலும் சுத்தமாய் அமைதியாய் இருந்த அந்த இடத்தை மயானம் என்று சொல்லவே முடியாது. சுடலையின் பொடி பூசி எரியும் பிணங்கள் முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருப்பானாம் சிவன். ரெளத்ரம் பொங்க யோசிக்கும் அந்த இரவுகளில் ருத்ரனை பார்க்கவே அகோரமாயிருக்குமாம். அந்த அகோரி விடியற்காலையில் எரிந்த பிணத்தின் கபாலம் ஏந்தி பிட்சை பெற ஊருக்குள் வருவானம். கபாலி, கபாலி என்று ஊரே...

வீட்டுப் பூனை

வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும் இறங்கவில்லை. பொதுவாய் வாக்கிங் போக வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு சடாரென்று இறங்கி ஓடவோ நடக்கவோ ஆரம்பித்து விடுவார்கள் அதே வேகத்தில் திரும்ப கிளம்பியும் போய்விடுவார்கள். என்னைப் போன்ற சில அவதாரங்கள்தான் இப்படி வந்து காருக்குள்ளேயே அமர்ந்து பிராக்கு பார்த்து விட்டு, பிறகு போகும் போதும் இப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்... யார் அந்த பிராந்தன் அல்லது பிராந்தி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே கார் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உயரமான அந்த மனிதர் இறங்கினார். கருப்பு டிசர்ட் போட்டிருந்தவரைப் பார்த்தால் வாக்கிங் போக வந்தவர் போலத் தெரியவில்லை. சார்ஜா யுனிவர்சிட்டி ஏரியா எல்லா நேரத்திலும் அமைதியாகத்தான் இருக்கும். ஒரு சில கார்களும் மனிதர்களையும் தவிர பெரிய நசநசப்பு அங்கு இருக்காது. அப்போதுதான் கவனித்தேன் இறங்கியவர் கையில் ஒரு கருப்பு கலர் பூனைக்குட்டி (பெரிய பூனையைக் கூட பூனைக்குட்டின்னுத...

கோதை...!

வானிடை வாழும் அவ் வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி கானிடைத் திரிவது ஓர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வது ஒப்ப ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கு என்று உன்னித்து எழுந்த என் தட முலைகள் மானிடவர்க்கு என்று பேச்சுப் படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே... என்று சடாரென்று சொன்னாளாம் கோதை. கேட்ட விஷ்ணு சித்தருக்கு தலை சுற்றியே போய்விட்டதாம், பெருமாளைப் போய் எப்படியம்மா என்று கலங்கி நின்ற பொழுதியில் கோதை உறுதியாய் சொல்லி விட்டாளாம். நான் மணமுடித்தேன் என்றால் அது அந்த அரங்கனைத்தான் மணமுடித்தேன் என்று அவள் சொன்ன போது அரங்கனே விஷ்ணு சித்தரின் கனவில் வந்து கோதை சூடி பார்த்த மாலைதான் வேண்டும் என்று கேட்டதும் அவரின் நினைவுக்கு வந்ததாம்.  ரங்கநாதன் மீது கொண்ட காதலின் காரணமாய் கோதை  என்னும் ஆண்டாள் எழுதித் தீர்த்த பாசுரங்களில் செந்தமிழ் மீதேறி காதலும் பக்தியும் விளையாடும் பேரனுபவத்தை வாசிக்கும் போது நம்மாலும் உணர முடியும். ஆண்டாளை அரங்கனே ஆட்கொண்டு மணமுடித்தான் என்று ஆண்டாளின் கதையை மனதிற்குள் அசை போட்டபடி அமர்ந்திரந்தேன். இன்னும் சரியாய் ஒன்றரை மணி நேரம் இரு...

பனை மரக் காடே.... பறவைகள் கூடே..!

ஊருக்கு நடுவேயிருந்த  பெருந்திண்ணைகளை காட்டி கேட்டான் பேரன் இது என்னப்பத்தா..? இதான் மொளக்கூட்டுத் திண்ணைப்பே...மாரியாத்தாளுக்கு பொங்க வச்சு இங்கனதேன் மொளப்பாரி எடுப்போம் என்றாள் அவள்... யாருமற்ற திண்ணையை வெறித்தபடி கடந்தான் சிறுவன். ஒரு  வீட்டுத் திண்ணையில் சுருங்கிப் படுத்திருந்த  மீசைக்கார தாத்தாவைக் காட்டி இது யாருப்பத்தா இம்புட்டு பெரிய மீசை...? அவருதேன் நம்மூரு நாட்டமைப்பே...நாட்டாமைன்னா  என்னப்பத்தா...? நம்மூருல எதுவும் பெரச்சினையின்னா முன்னாடி எல்லாம் அவருகிட்டதேன் போய்ச்சொல்லுவோம், நீ பாத்தியே மொளக்கூட்டுத் திண்ணை அங்கதேன் வச்சு நாயம் சொல்லுவாக...? முன்னால் நடந்து கொண்டிருந்தாள் கிழவி... உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வெறிச்சோடிக் கிடந்தது தெரு. தெரு முழுதும் செம்மண் புழுதி. செருப்புல்லாம நடக்கிறியே அப்பத்தா கால் சுடலையா உனக்கு....? பழகிப்போச்சப்பே...வெரசா வா என்று கையைப் பிடித்து அழைத்து நடந்தாள் அப்பத்தா. ஏம்பத்தா இதென்னப்பத்தா இம்புட்டு மேடா இருந்துச்சு இது மேல ஏத்திக் கொண்டு வந்து  என்ன நிப்பாடி வச்சிருக்க ஒரே கு...

பாம்பு வந்திருச்சு....!

திடீரென்று ரமாதான் கத்தினாள். ஞாயிற்றுக் கிழமை மதியத்தை ஓய்வாய் ஈசிஸேரில் படுத்து கழித்துக் கொண்டிருந்த பரந்தமான் கையிலிருந்த குமுதத்தைத் தூக்கி எறிந்து விட்டு  பதறி அடித்துக் கொண்டு அடுக்களைக்குள் ஓடினார். வாசலில் பம்பரம் விட்டுக் கொண்டிருந்த பாபு பம்பரத்தை திண்ணையில் வீசி விட்டு வீட்டுக்குள் ஓடினான்.டேய்.. தம்பி உள்ள வராதடா.....அடுக்களைக்குள்ள பாம்பு வந்திருக்குடா என்று மாலு கத்தியபடியே திண்ணைக்கு ஓடி வந்த போது அவள் சப்தத்தைக் கேட்டு அறைவீட்டிற்குள்ளிருந்து லுங்கியை தூக்கிக் கட்டியபடி எங்கடி பாம்பு...? என்று வெளியே வந்த முரளியிடம் கிச்சன்ல அண்ணா என்று பயந்தபடியே சொன்னாள் மாலு... முரளி கிச்சனுக்குள் சென்ற போது அவளுடைய அம்மா ரமாவும், அப்பா பரந்தமானும் கையில் விறகுக் கட்டைகளோடு நெல் கொட்டி வைத்திருக்கும் பத்தாயத்துக்குப் பின்னால் இருந்த அண்டா குண்டக்களைத் தட்டிக் கொண்டிருந்தார்கள். டேய்... நீ சின்னப் பையன் வெளில போடா பாம்பு உன்னைப் பிடுங்கி கிடுங்கி வைக்கப் போகுது...போய் வாசல்ல தம்பி தங்கச்சிகள பாத்துக்க என்று சொன்ன ரமாவைப் பார்த்து அப்போதுதான் கொஞ்சமமாய் அரும்பிக் கொண்ட...

கிணற்றடி...!

வீடு கட்டுவதற்கு முன்பு வெட்டிய கிணறு அது என்று பாட்டி சொன்னாள். தாத்தா அப்போது ரங்கூனில் இருந்தாராம். குடிசை வீடாய் இருந்த போது தரைக் கிணறாய் இருந்ததை மாற்றி சுற்றுச் சுவரெழுப்பி கயிறு போட்டு கையால்தான் தண்ணீர் இழுத்திருக்கிறாள் பாட்டி. ரங்கூனிலிருந்து வந்த தாத்தா பக்கத்தூர் செவ்வாய்க்கிழமை சந்தையில் உசைன் பாய் கடையில் வாங்கி வந்து மாட்டி இருக்கிறார் அந்த சகடையை. சாரக்கயிறை போட்டு தாத்தா தண்ணீர் இறைக்கும் லாவகமே தனியாம், வீடு கழுவ, பாத்திரங்கள் கழுவ, எப்போதும் வீட்டுப் பெண்களும் அவ்வப்போது ஆண்களும் கிணற்றடியில் குளிப்பார்களாம்... பாட்டிக்கு பத்துப் பிள்ளைகள். பத்து பிள்ளைகளின் அத்தனை தேவைகளையும் தீர்த்து வைத்தது அந்தக் கொல்லைப்புறக் கிணறுதான். விடியற்காலையில் ஓட ஆரம்பிக்கும் சகடை பின்னிரவு வரை ஓடித் தீர்த்து விட்டு ஒரு சில மணி நேரம் மட்டுமே கொஞ்சம் ஓய்ந்து கிடக்குமாம். பிரம்ம முகூர்த்தத்தில் மனிதர்கள் விழிக்கும் முன்பு சகடை விழித்துக் கொண்டு காத்திருக்குமாம்... காலை நாலு மணிக்கு கர்ர்ர்க்ரர்க்க்க்ர்ரகரவென்று அந்த கிராமத்து வீடுகளின் எல்லா வீட்டுக் கிணறுகளிலும் சகடைகள் உர...

சப்தத்தின் மெளனம்...!

மழை வரும் போலிருக்கிறதே என்று யோசித்தபடியே ஜன்னலை நன்றாக திறந்து வைத்தேன். வீட்டில் அமர்ந்து வேலை செய்வதில் இருக்கும் சுகமே தனிதான். ஒய்வாய் இருப்பது போலவும் தோன்றும் வேலை செய்வது போலவும் தோன்றும் ஒரு அற்புதமான காம்போ அது. வருங்காலங்களில் யாரும் அலுவலகம் சென்று வேலை செய்யும் ஒரு செக்கு மாட்டு வாழ்வு இருக்காது என்று யோசிதுக் கொண்டிருந்த போதே  மேசை மீதிருந்த காபியில் ஆவி பறந்து  என்னை எடுத்து குடிக்கிறாயா என்று செல்லமாய் மிரட்டிக் கொண்டிருந்தது. சிறு சாரல் மழையும், சூடான காபியும் என்னை சொடக்குப் போட்டு இந்த பூமி விட்டு வேறு கிரகம் நாம் செல்ல வேண்டாமா என்று கேள்வி கேட்க.... பார்த்திக் கொண்டிருந்த வேலையைப் பாதியிலேயே நிறுத்தி விட்டு... லேப் டாப்பை மூடி வைத்தேன்.... ஏண்டா மழை பெய்ற மாதிரி இருக்கு இப்போ வண்டிய எடுத்துக்கிட்டு எங்க கிளம்பிட்ட பத்தாக் குறைக்கு கேமரா வேற எடுத்துட்டுப் போற....? வாசலில் நின்று அன்பைக் கண்டிப்பாய் மாற்ற முயன்று தோற்றுக் கொண்டிருந்த அம்மாவைப் பார்துப் புன்னகைத்தபடியே...மழை பெய்யப் போகுதும்மா அதான் கிளம்புறேன் என்று நான் சொன்னதைக் கேட்டு...

கனவு வியாபாரம்...!

எந்தச் சொல்லில் இருந்து தொடங்குவது என்று தெரியாமல் ஆரம்பிக்கும் என்னுடைய எல்லா ஆக்கங்களும் யாருக்காக ஆரம்பிக்கிறது? அது எங்கே செல்கிறது? யாருக்கான பொருள் அதில் நிரம்பிக் கிடக்கிறது என்பதெல்லாம் எனக்குத் தெரியவே தெரியாது. ஒவ்வொரு முறையும் பார்வையற்ற ஒருவனைப் போல எனக்குள் புதைந்து கிடக்கும் கனவுகளையும், வலிகளையும், சந்தோசத்தையும் தடவித் தடவிப் பார்த்து அதன் அர்த்தம் விளங்கி மெல்லமெல்ல இதுதான் இன்னதுதான் வரைகிறோம் என்று தெரியாமல் உருவமற்ற ஓவியத்தை வரைந்து கொண்டிருக்கும் ஓவியனின் தூரிகையிலிருந்து சிதறும் எந்த வித உத்தேசமும் இல்லாத வர்ணங்களாய்த்தான் இந்த சொற்கள் வந்து விழுந்து கொண்டிருக்கின்றன. திடீரென்று ஒரு மழை நேரத்து மாலை எனக்கு நினைவில் வரும். மாலைக்குப் பின்னால் அடர்த்தியாய் நின்று கொண்டிருக்கும் இருட்டு நினைவுக்கு வரும், நான் நடந்து கொண்டிருப்பது ஒற்றையடிப்பாதையாய் இருக்கும். துணைக்கு யாரோ ஒரு மூதாட்டி தலையில் முந்தானையைப் போட்டு மழையைச் சமாளித்தபடி மெல்ல மெல்ல நடந்து கொண்டு பழங்காலத்து அவளின் கதைகளை அப்போது எனக்குச் சொல்லிக் கொண்டு வருவாள். மின்சார விளக்குகள் இல்லாத அந...

கோணல் மாணலாய் ஒரு கதை - 2

முந்தைய பகுதி.. இனி... ரமேஷுக்கு என்னைத் தெரியாது. நீ மட்டும் வந்தேன்னு சொல்லி சமாளிச்சுடு சுமதி. ஏற்கெனவே அவனுக்கும் உனக்கும் நிறைய மிஸ் அண்டர் ஸ்டாண்டிங்.. .. .அண்ட்... யூ கேன் கோ வித் ஹிம் ..... ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப முற்பட்டேன்.... சுமதி... எழுந்து நின்று அவசரமாய் என் பின்னந்தலைக்குள் கை கொடுத்து கலைத்து....கண் கலங்கியபடியே...சாரிடாமா.... ஐயம் வெரி சாரி.... ஐ டோண்ட் வாண்ட் யூ டூ லீவ் லைக் திஸ்....பட்ட்ட்ட்ட்.....இழுத்தாள்.... இட்ஸ் ஓ.கே சுமதி....நான் கிளம்புறேன்.. டேக் கேர்...... சொல்லி விட்டு வேகமாய் வெளியே வந்தேன்...நான் வெளில வர்றப்ப...ரமேஷ் ஹோட்டல் உள்ளே போனான். ரமேஷ் யார்னு எனக்குத் தெரியும். சுமதி போட்டோவுல காட்டி இருக்கா... ஆனா நான் யார்னு ரமேஷ்க்கு தெரியாது. தெரியாமல் இருந்தது பெரிய பிரச்சினையை இப்போது சரிக்கட்டி இருக்கறதா எனக்குத் தோணுச்சு.... ரூமிற்கு சென்று கொண்டிருந்தேன். என்ன மாதிரியான லைஃப் இது...? என்னோட கேரக்டர்தான் என்ன...? அவள் பொண்டாட்டி, அவன் புருசன்....இடையில நான் யாரு...? நான் ஏன் சுமதிய கூட்டிட்டு வரணும்...? உதவி...