கரடு முரடான காய்ந்த நிலமாய் நான் கிடந்த பொழுதொன்றில் சிறு மழையாய் வந்து என்னை மிருதுவாய் நனைத்துச் சென்றவள் நீ... உயிர் பறிக்கும் வாழ்க்கையினூடே நான் களமாடிக் கொண்டிருந்த மிருக பொழுதுகளில் எனக்காய் எங்கிருந்தோ நீ வாசித்த கவிதை வரிகளை சுவாசித்து சுவாசித்து என் இரவுகளை உன் கனவுகளால் மட்டுமே நான் நிரப்பிக் கொண்டு என் இரணங்களுக்கு உன் காதலால்தான் மருந்திட்டுக் கொண்டேன்..! உன் நினைவுகள் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் இந்த மயான இரவில் என் கர்ஜனைகளால் உனக்காக எழுதிக் கொண்டிருக்கும் வார்த்தைகளுக்குள் மண்டியிட்டுக் கிடக்கும் என் வீரத்தை.... தீராக்காதலென்று அறிக பெண்ணே...! தேவா சுப்பையா...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....