எவ்ளோ பரபரப்பா போய்ட்டு இருக்கு வாழ்க்கை. ரோபட்டிக் லைஃபா போச்சு எல்லாமே. எல்லோருக்கும் அவசரம். எல்லாத்துக்கும் அவசரம். வார விடுமுறைய கூட ப்ளான் பண்ணி அவசர அவசரமா அனுபவிக்க வேண்டிய ஒருஅழுத்தம். எப்போ மாறினிச்சு இப்டி வாழ்க்கை? அறிவியல் வளர்ச்சி மொத்தமா நம்மள தின்னுடுச்சா? சுயநலம் பெருகிப் போனதுனால ஏற்பட்டிருக்க ஒரு இன்செக்கியூரிட்டினால நம்மள காப்பாத்திக்க நாம என்ன வேணா செய்யலாம்னு சொல்லி மனசாட்சிய அடகு வச்சிட்டோமா? ஆசைதான் துன்பத்துக்கு காரணம்னு 3 ஆம் கிளாஸ்ல படிச்ச புத்தனோட வாக்கு அப்போ 2 மார்க் கேள்வி பதிலா தெரிஞ்சுச்சு......இன்னிக்கு அதுல ஏதோ ஒரு அர்த்தம் இருக்க மாதிரி தோணுது.... ஒண்ண நோக்கி போகும் போது அந்த ஒண்ணு கிடைச்சுடுச்சேன்னு சந்தோசப்பட்டுக்கிட்டு இருக்கும் போது அது தொடர்பான பத்து நம்ம குரல்வளைய நெரிக்க ஆரம்பிச்சுடுது. இதுக்கு அந்த ஒண்ணு கிடைக்காமலேயே இருந்திருக்கலாமோன்னு யோசிக்கவும் தோணுது. அரசியல், சினிமா, ஆன்மீகம், மதம்னு எதை எதையோ நிறுவ ஓடிட்டு இருக்கற அவசரத்துல ரசனையில்லாம இந்த வாழ்க்கை மாறிட்டு இருக்கறத யாரும் கவனிக்கிறதே இல்லை. டிவி பொட்டி ந...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....