அதிர்வு I அதிர்வு II மனதைப் பிசைந்து கொண்டிருக்கிறது உடையார் நாவல் . விளையாட்டாய் நான் தொட்ட எல்லாமே ஏதோ ஒரு தளத்திற்கு என்னை தர தரவென்று இழுத்துச் சென்று மூர்ச்சையாக்கி வாழ்வின் அடுத்த பாகத்திற்கான புரிதலை என்னுள் திணித்து பிரமாண்ட மெளனத்தைக் கொடுத்து விட்டுச் செல்லும் . இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம் . ஒரு மெளனம் கடும் தடிமனாய் அடர்ந்தது என்று ஒவ்வொரு முறையும் எண்ணும் போதும் அதை விட அடர்த்தியாய் மீண்டுமொரு மெளனம் கிடைக்கும் . அப்படியான ஒரு தளத்திற்கு ஒவ்வொரு முறையும் பாலாவின் எழுத்து என்னை இழுத்துச் சென்று இருக்கிறது . இதோ உடையாரின் மூலம் மீண்டுமொரு மெளனம் . கதையை மட்டும் வாசிக்க எப்போதும் வெறும் புத்தகம் வாசிப்பவனல்ல நான் . மாறாக அதன் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் ஒரு மிகப்பிரமாண்ட வாழ்க்கையை ஒரு சக்கரவர்த்தியின் ஆசையினை , அவன் கோயில் செய்த பின்னணியினை அதை எழுத்தாக்கிய என் எழுத்துலக தகப்பன் அய்யா பாலகுமரனை மொத்தமாய் உள்வாங்கிக் கொண்டு பேச்சற்று கண்ணீரோடு கசிந்து உருகிக் கிடக்கிறேன் ....
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....