சென்சார் போர்டு அனுமதி கொடுத்த ஒரு திரைப்படத்தை கமல்ஹாசன் ஒரு தனிப்பட்ட பிரிவினருக்கு போட்டுக்காட்டி இருக்கத் தேவையில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், தமிழக அரசு முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கோடு இந்த விசயத்தில் மூக்கை நுழைத்து தங்களின் வாக்கு வங்கியை நிலைப்படுத்திக் கொள்ள முயன்றிருக்கும் ஒரு கேவல அரசியலும் விசுவரூபம் படத்தின் தற்காலிக தடையின் மூலம் அரங்கேறி இருக்கிறது. ஜனநாயக வலிவு கொண்ட இந்த தேசத்தின் கட்டமைப்புகள் தனிமனிதர்களாலோ, அல்லது ஏதோ தனிப்பட்ட பிரிவுகளாலோ, மத, சாதீய அமைப்புகளாலோ அரசியல் ரீதியாக நிர்ப்பந்திக்கப்பட்டு தகர்த்தெறியப்படுமே ஆனால்.. அது இந்த தேசத்தின் உள் கட்டமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் அத்தனை இந்திய பிரஜைகளுக்கும் விடப்பட்ட சவாலாகவே கருதப்படவேண்டும். விசுவரூபம் படத்தின் கதை இன்னது என்று முழுமையாக நாம் அறியாவிட்டாலும் ஓரளவிற்கு ஊகங்களின் அடிப்படையில் இப்படியாய் இந்த மக்களைப் பற்றி எடுத்திருக்கிறார் என்று நம்மால் அனுமானிக்க முடியும். ஆப்கானிஸ்தானத்தில் நடந்த தாலீபன்களின் ஆட்சியில் எல்லாம் சுகமா...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....