நடுக்கும் இந்த சமவெளியின் பெருங்குளிரை இன்னும் ரசிக்க வைக்கிறது நான் போர்த்தியிருக்கும் கம்பளி....! *** முழு நிலவு ததும்பும் குளம், உடலோடு ஒட்டிக் கிடக்கும் குளிரை வேடிக்கைப் பார்க்கும் வசீகர நட்சத்திரங்கள்...., மரங்களோடு கிசு கிசுப்பாய் ரகசியம் பேசும் காற்று...! ஓ....கடவுளே... இந்த இரவை விடிய வைத்து விடதே...! *** தொலைந்து போன ஆட்டுக்குட்டியை முன்னிரவில் தூரத்தில் தேடிக்கொண்டிருக்கிறான் மேய்ப்பனொருவன்.... நடுங்கும் குளிரில்... நான் கம்பளியை இழுத்துப் போர்த்தி புரண்டு படுத்து.. தொடர முயலுகிறேன்... பாதியில் நின்று போன ஒரு இனிய கனவை...! *** பனிக்காலம் ஆரம்பித்து விட்டது... இரவுகளில் யாரும் வெளியே வரமாட்டார்கள்... இனிதான்.. நான் நடுங்கிக் கொண்டாவது வெளியே நடக்கவேண்டும்..! *** அதிகாலை...பூசணிப்பூவின் மீது படர்ந்திருக்கும் பனி புற்களை வெற்றுக் காலோடு நான் மிதிக்கையில் சிலீரென்று... என் பாதங்களையும் தொடுகிறது... நான் கடந்து போவதா..? இல்லை... அப்படியே நிற்பதா..? தேவா. S
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....