கட்டுக்கடங்கா காட்டாறு அவன். திக்குகளின்றி சுற்றித் திரியும் காற்று அவன். பற்றி, பற்றி பற்றிக் கொள்பவரை எல்லாம் தீயாய் மாற்றும் பெரு அக்னி அவன். கணிதக் கூட்டுக்களைக் கொண்ட கட்டுப்பட்ட நிலையைக் கொண்ட மட்டுப்பட்ட மனிதனில்லை அவன். எல்லோரும் சாதாரணமாய் சுவாசிக்க. அவன் சுவாசம் எங்களுக்கு ஸ்வரமாகிப் போனது. வார்த்தைகளைக் கடந்த பெரும் மெளனத்தை சுமந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்திலிருந்து அதை பிழிந்தெடுத்து இசையாக்கிக் கோர்த்துக் கொடுக்கும் பிரம்மா அவன்.... அவன், அவன் என்று விளிப்பதாலேயே அவன் ஒன்றும் அவன் இல்லை. அவன், அவள், அது, இது, என்று சுட்டியுணரமுடியாத பேரியக்கத்தின் இசை வெளிப்பாடு அவன். 1970களுக்குப் பிறகு பிறந்த பிள்ளைகளை எல்லாம் யார் யாரோ பெண்கள் பெற்றெடுத்து தாயென்று அறிவித்துக் கொண்டாலும் அத்தனை பிள்ளைகளையும் அவன் இசைதான் தாலாட்டியது. கர்நாடக சங்கீத பாரம்பரியத்துக்குள் பாடல்கள் சாமானியனுக்கு எட்டாக்கனியாய் இருந்த போதும் சரி, அதே இசை தபேலாக்களுக்குள் நின்று கதைகள் பேசிய போதும் சரி, சங்கீதம் என்பது நமக்கு அன்னியமாய்த்தான் இருந்தது. அவன்..... ஆர...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....