Skip to main content

Posts

Showing posts from April, 2017

வீட்டுப் பூனை

வேகமாய் வந்து எனக்கு முன் இருந்த பார்க்கிங்கில் அந்தக் கார் நின்ற போது மணி இரவு 8 இருக்கும். அப்படியும் இப்படியுமாய் நடை பயிற்சி செய்பவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். கார் நின்று கொஞ்ச நேரம் யாரும் இறங்கவில்லை. பொதுவாய் வாக்கிங் போக வருபவர்கள் காரை நிறுத்திவிட்டு சடாரென்று இறங்கி ஓடவோ நடக்கவோ ஆரம்பித்து விடுவார்கள் அதே வேகத்தில் திரும்ப கிளம்பியும் போய்விடுவார்கள். என்னைப் போன்ற சில அவதாரங்கள்தான் இப்படி வந்து காருக்குள்ளேயே அமர்ந்து பிராக்கு பார்த்து விட்டு, பிறகு போகும் போதும் இப்படி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்... யார் அந்த பிராந்தன் அல்லது பிராந்தி என்று நினைத்துக் கொண்டிருந்த போதே கார் கதவை மெதுவாய் திறந்து கொண்டு உயரமான அந்த மனிதர் இறங்கினார். கருப்பு டிசர்ட் போட்டிருந்தவரைப் பார்த்தால் வாக்கிங் போக வந்தவர் போலத் தெரியவில்லை. சார்ஜா யுனிவர்சிட்டி ஏரியா எல்லா நேரத்திலும் அமைதியாகத்தான் இருக்கும். ஒரு சில கார்களும் மனிதர்களையும் தவிர பெரிய நசநசப்பு அங்கு இருக்காது. அப்போதுதான் கவனித்தேன் இறங்கியவர் கையில் ஒரு கருப்பு கலர் பூனைக்குட்டி (பெரிய பூனையைக் கூட பூனைக்குட்டின்னுத