பள்ளங்களில் இறங்கியும் மேடுகளேற காத்திருந்தும், வளைவுகளின் போக்கிற்கேற்றபடி வளைந்தும் சரேலென்று விழவேண்டிய இடத்தில் அருவியாய் விழுந்தும் எல்லா வித அசெளகர்யங்களையும் தனது செளகர்யமாக்கிக் கொண்டு நகரும் நதிதான் எத்தனை அழகானது.... வசீகரமானது..!வற்றிப் போனாலும் மீண்டும், மீண்டும் தனது தடங்களில் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு கடந்த காலத் தழும்புகளை வெளிக்காட்டாமல் உற்சாகமாய் கரை புரண்டோடும் நதியின் வாழ்வோடு எத்தனையோ உயிர்களுக்கு தொடர்பு உண்டுதானே....? நதி என்று ஒன்றும் கிடையாது, நதித்தல் என்ற ஒன்று மட்டுமே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நதியின் பிரவாகத்தில் கணத்திற்கு கணம் அங்கே புதிய வாழ்கை நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஓடிக் கொண்டே இருக்கும் நதியை இதுதான் இன்னதுதான் என்று வரையறை செய்து விட முடியாது, அது நிகழ்ந்து கொண்டிருப்பது, தேங்கிக் கிடப்பதல்ல...அது எப்போது புதியது, சற்று முன் நீங்கள் பார்த்தது அல்ல இப்போது பார்த்துக் கொண்டிருப்பது என்று ஓஷோ சொல்வதைப் போல... நதிகள் வாழ்க்கையின் மையக் கூறினை, அதன் அடித்தளத்தைத் தானே நமக்கு எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எழுதும் போ...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....