Skip to main content

Posts

Showing posts with the label போதி தர்மா

போதி தர்மன் பேசுகிறேன்...!

நான் போதி தர்மன்....! உங்களோடு எதுவும் நான் பேசவில்லை...! என் உணர்வுகளுக்குள் நானே நானாய் ஸ்பூரித்துக் கொள்கிறேன்.... கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில், பல்லவச் சக்கரவர்த்தியின் மகனாய் நான் பிறந்திருந்தேன். என்னை ஜனிப்பித்து வெளிக் கொணர்ந்த பூமியில் படர்ந்து கிடந்த போதி மரத்தின் நிழலிலும், பரவிக் கிடந்த காற்றிலுமிருந்து என்னுள் புகுந்து கொண்ட வழிமுறைதான் பெளத்தம். பெரும்பாலும் நான் பேசுவது இல்லை. இப்போது கூட என்னுள்ளேயே நான் ஸ்பூரித்துக் கிடக்கும் என் அந்திமத்தில் நானே நானாய் என் எண்ணங்களூடேதான் நகர்கிறேன். இல்லாமல் சுழலும், எல்லாமாயிருக்கும் இந்த பிரபஞ்சத்திலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட பூமிப் பந்தின் மூலமும் சரி, அதைச் சுற்றி விரிந்து பரந்து கிடக்கும் பேரண்டமும் சரி கருத்துக்கள் அற்றது. விளக்க வேண்டிய அவசியங்களுமற்றது. எல்லாம் இயல்பாயிருக்க மனிதன் மனத்தோடு பிறந்தான். மனம் மதத்தைப் படைத்தது. மதம் கடவுள்களைப் படைத்தது. கடவுளர் இல்லை என்று சொன்ன இடத்தில் புத்தன் பிறந்தான். புத்தனால் இயல்பு பிறந்தது. வாழ்க்கையின் இயங்கு தன்மை விளங்கியது. இயல்பில் இரு. தேவையானதை அறி. அறிந்ததை தெளி. தெளிந்ததைப் ...