அட்டகாசமாய் தொடங்கும் படத்தின் ஆரம்பத்திலேயே நமக்குப் பரபரப்புத் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு காட்சியையும் எப்படி பரபரவென்று திரி பற்றிக் கொண்டு செல்வது போலவே கொண்டு செல்வது என்பதில் முருகதாஸ் கில்லாடி. முழுக்க முழுக்க லாஜிக்கை சினிமாவில் கொண்டு வர முடியாது என்றாலும் அதே திரைப்படத்தில் செவுட்டில் அடித்தாற் போல பகிரப்படும் கருத்துகள் திரைப்படத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாய்க் கருதி நகரும் தமிழ் ரசிகப் பெருமக்களின் வாழ்க்கையில் மிகப் பிரம்மாண்டமாகவே பிரதிபலிக்கவும் செய்கிறது. கத்தியைப் பொறுத்தவரையில் முருகதாஸ் அண்ட் விஜய் கேங்க் கையிலெடுத்திருக்கும் பிரச்சினை தமிழ்நாட்டிலிருக்கும் எல்லா சாமானிய தமிழர்களுக்கும் தெரிந்த ஒரு பிரச்சினைதான். கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான பணமும் அதற்கு அதிகாரவர்க்கம் வலது கையாய் இருந்து செய்யும் உதவிகளும் அதில் சாமானியன் நசுங்கி செத்துக் கொண்டிருப்பதும் நமது தெருவில், நமது ஊரில் நமது மாவட்டத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகள்தாம். இதைப்பற்றி எல்லாம் மக்களிடம் எடுத்துச் சொல்லி போராட எத்தனையோ சமூக நல குழுக்கள் நம்மிடையே இருக்கவும்தான...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....