எதேச்சையாக சானல்களைத் திருப்பிக் கொண்டிருந்த போது ஜெயா டிவியில் தப்புத்தாளங்கள் படம் ஓடிக் கொண்டிருந்தது. ரொம்ப நாளுக்கு முன்னால் அந்தப் படத்தைப் பார்த்தபோது எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. அதுவும் ரஜினியை அழுது வடிந்து கொண்டு திரையில் பார்க்க எந்த ரஜினி ரசிகனுக்குத்தான் பிடிக்கும் சொல்லுங்கள்...? இப்போது பாதிக்கு மேல் படம் ஓடி இருந்தாலும் பரவாயில்லை என்று பாதியிலிருந்து படத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். வாழ்க்கைக்கு என்று ஒரு ஒழுங்கு கோட்பாட்டினை வரையறுத்து அந்த மாய நெறிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களை கெட்டவர்களாய் பார்க்கும் சமூக மாண்பினை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை. வாழ்க்கையைத் திரைப்படங்கள் பிரதிபலித்துக் காட்டும் அதே நேரத்தில் வாழ்க்கைக்கான நீதிகளையும் அவைபுகட்ட வேண்டும் என்ற நியதியைத்தான் தமிழ் சினிமா எப்போதும் வரையறுத்து வைத்திருக்கிறது. கதாநாயகனை நல்லவனாகக் காட்டவேண்டும் என்ற காரணத்திற்காகவே வில்லன் தரப்பு நியாயங்களை இயக்குனர்கள் ஒளித்து வைத்து விடுவார்கள். தமிழ் சினிமா ரசிகனின் மனப்பாங்கு கட்டுப்பாடுகளுக்குள்...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....