ஒவ்வொரு பதிவிட்ட பின்பும் தோன்றும்..... அட ஜெய்லானியும் ஜெயந்தியும் நமக்கு விருது கொடுத்தார்களே (ஜெ.ஜெ), சக பதிவர்கள் எல்லாம் இதுக்கு விழாவே எடுக்குறாங்களே நாம ஒரு நன்றி கூட சொல்லவில்லையே என்று....விருது கொடுத்து ஊக்குவித்த... நல்ல இதயங்களுக்கு என் நன்றிகளை காணிக்கையாக்குகிறேன்! சரி....அறைவீட்டுக்குள் நுழைவோமா...... இதுவரை - http://maruthupaandi.blogspot.com/2010/05/blog-post_28.html இனி.... தூசு வாசனையும், காற்றுபுக வசதியில்லா அந்த அறையில் நிரம்பி வழிந்த ஒரு நூற்றாண்டு வாசனையும் எனக்குள் ஒரு வித...பயம் கலந்த ஒரு எதிர்பார்ப்பை உருவாக்க இருட்டில் தட்டுத் தடுமாறி....அறையின் சுவிட்ச் போர்டை தேடி...அந்த 60 வால்ட் மஞ்சள் குண்டு பல்புக்கு உயிர் கொடுக்கிறேன்...அது திக்கி திணறி ஒரு மஞ்சள் நிறத்தை சிறிய அறை எங்கும் பரப்ப...அறையின் வலது புற மூளையில் ஒரு மண்ணால் ஆன குதிர் என்று சொல்லக்கூடிய நெல் கொட்டி வைக்கும் பாத்திரம் அதை ஒட்டி ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கும் மண்பானைகள்....இடது புற மூளையில் வரிசையாய் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட ரங்கு பெட்டிகள்....கதவு திறந்தவுடன் அதன் பின்புறத்தி...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....