நண்பர் ஜீவன் (தமிழ் அமுதன்) சொல்லித்தான் என்னுடைய " பணம் தேவையில்லை மனமே போதும்" என்ற கட்டுரை விகடன் குட் பிளாக்ஸ் வரிசையில் வந்திருகிறது என்று தெரியும். எழுத்தின் வீச்சில் என்னுடைய வலைப்பூ தீப்பிடித்து எரிவததோடு வலைப்பூவினை விட்டு விட்டு வெளியேறும் போது ஒரு சிறு பொறியை கொண்டு செல்லுமானால் அது எழுத்தின் நோக்கதிற்கு கிடைத்த வெற்றி.
என்னைப்பற்றி அறிவதைவிட....என் எழுத்துக்களின் பின் புலத்தில் இருக்கும் வீச்சு முழுதாய் ஒருவரிடம் சென்றடைந்தால் அதுவே நிம்மதி....! ஆதங்கங்களை.... மனித அவலங்களை மக்களிடம் கொண்டு செல்லும் ஒரு ஒப்பற்ற வேலையை இன்று நமக்கு ஊடகங்கள் செய்கின்றன. நல்ல எழுத்துக்களை விரும்பிப்படிக்கு வாசகர்களின் வட்டம் அதிகரிக்க வேண்டும் ஆனால் அதற்கு எதிர்மறையாக ....உணர்ச்சி சார்ந்த விசயங்களுக்கும், மதம் சார்ந்த விசயங்களுக்கும், சினிமா சார்ந்த விசயங்களும் மக்கள் அதீத ஆர்வம் காட்டுவதற்கு காரணம்.... அறிவின் விரிவாக்கத்திற்கு என்று சொல்ல முடியாது.. .மிகைப்ப்ட்ட நேரங்களில் இவை எல்லாம் உணர்ச்சியினை தூண்டி விட்டு.... மனிதர்களை செயல் படச் செய்வதாகவே எனக்குப் படுகிறது.
சில நண்பர்கள் விரும்பிப்படிக்கிறார்கள் என்னை கேட்காமலேயே பதிவுகளுக்கு வாக்குகளும் பின்னூட்டங்களும் இடுகிறார்கள் .... வாக்குகளை எதிர்பார்த்து வாசகருக்கு எது தேவை என்று பார்த்து பார்த்து யோசித்து அலங்காரங்கள் கூட்டி எப்போதும் பதிவு எழுதுவதில்லை..! பெரும்பாலும் ஆதங்கங்கள் ஏற்படும் போது எல்லாம்.....அதை வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிவிடுபவன் மற்றபடி வாசகரை அபகரிக்க வேண்டும் என்ற.... நோக்கில் எழுதும் எழுத்து வியாபரியும் அல்ல...ஓட்டுக்காய் வாக்காளனிடம் கையேந்தும் அரசியல்வாதியுமல்ல!
நம்மைச் சுற்றி நடக்கும் ஓராயிரம் அநீதிகளை பார்த்துக் கொண்டு சும்மா செல்லாமல் எழுதியாவது வைப்போமே என்ற எண்ணத்தில் நான் கிழிக்கும் சிறு சிறு தீக்குச்சிகள் தான் வலைப்பதிவுகள் .....! பதிவுகளை பாராட்டும் சிலரை விட..... என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை என்று கேட்டவர்கள் தான் அதிகம். என்னுடைய ஒரு பதிவுத் தொடருக்கு (சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா) ஒருத்தர் கமெண்ட் போட்டிருந்தார்... அதை பதிவில்தான் போட வேண்டும் கமெண்டில் போடக்கூடாது என்று அப்போதே முடிவெடுத்தென்....அது....
" டேய் பன்னாட....எப்படா திருந்தப் போறீங்க"ன்னு
ஒரு பெயரில்லாமால் கருத்து தெரிவித்திருந்தார் அவர் தான் உண்மையான வாசகர்....ஒன்றிப் போய்விட்டார் கட்டுரையோடு சேர்ந்து அதில் லயித்து அதில் ஏற்பட்ட ஆதங்கம்...சரி....இது போல ஒவ்வொருவரும் தனக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும் என்றுதான் கட்டுரையே ஆரம்பித்தேன்.... ! அவரின் கமெண்ட் என் கட்டுரையின் அபார வெற்றி! அவருக்கு எனது நமஸ்காரங்கள்!
கடந்த பதிவினை படித்து விட்டு நண்பர் ஒருவர் சிங்கப்பூரிலிருந்து ஆன்லைனில் தொடர்பு கொண்டு....கட்டுரையை பார்த்தேன்....தமிழிசில் ஓட்டுப் போட்டு விட்டேன் என்றார்... ! எனக்குள் சந்தோசமில்லை...ஒட்டு என்பது கட்டுரையில் திளைத்து அதற்கான நன்றி நவிழல் மேலும் மிகைப்பட்ட பேருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு முயற்சி...அவ்வளவே...! அது எந்த அளவிலும் எழுத்தாளனை பாதிக்க கூடாது.....பாதித்தால்.. நல்ல எழுத்துக்களை வெளிக்கொணர முடியாது....என்பது எனது கருத்து....மீண்டும் ஒரு தீக்குச்சி கிழிப்பது போல இந்தப்பதிவும்....! தீ பரவலாம் அல்லது ...என்னோடனே அணையாலாம்... ஆனால் ஒரு விசயம் ....எனக்குள் ஏற்படும் எண்ணங்களை பதிவாக்கும் காலத்தின் சாட்சிகளில் நானும் ஒருவன்!
தேவா. S

Comments
.....தேவா, நன் முதன் முறையாக எதேச்சையாக உங்கள் பதிவுகளை வாசிக்க நேரிட்டபோது, உங்கள் எழுத்தில் இருந்த அனலும் கருத்தில் இருந்த சிறப்பும், என்னை மீண்டும் மீண்டும் உங்கள் இடுகைகளை தவறாமல் வாசிக்க வைத்தது. உங்கள் எழுத்துக்கள் தான் உங்களை, எங்களுக்கு அறிமுகப் படுத்துகின்றன. தொடர்ந்து எழுதுங்கள். பரிந்துரையும் ஓட்டும், நம்மை உற்சாகப் படுத்தும் டானிக் தான். உணவு அல்ல. சரிதானே? :-)
நெகிழ்ச்சியுடன் கூடிய எனது சந்தோசத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!
இது இது இது தான் தம்பி உண்மையில் எனக்கு பிடித்த விஷயம்.