மேலே இருக்கும் ரெம்ப்ராண்ட்டின் ஓவியத்தை மெர்சியிடம் மார்க் கிராஸ் காட்டுகிறார். மார்க் கிராஸ் ஒரு ஓவியரும் கூடத்தான், ஓவியரும் கூடத்தான் என்று சொல்லும் போதே அவர் வேறு எதுவாகவோ இருக்கவேண்டும் தானே...?! ஆமாம் அவர் களிமண்ணால் சிற்பங்கள் செய்யும் சிற்பியும் கூட. அந்த பாத்திரத்தில் நடித்தவருக்கு குறைந்தபட்சம் 70 வயதாவது இருக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கொஞ்சம் ஐன்ஸ்டீனின் சாயல்வேறு அவருக்கு. அவர் பெண்களை மட்டுமே படமாக வரைந்து கொண்டு பின் களிமண்ணால் செதுக்கி செதுக்கி சிற்பம் செய்வார். பெண் என்றால் ஏதோ ஒரு பெண்ணின் சிலையாய் அது இருந்து விடமுடியாது. நிர்வாண மாடலாய் ஒரு பெண்ணை நிற்க வைத்து முதலில் பெண்ணின் உடலை வரைந்து கொண்டு பின் அந்தப் பெண்ணை கொண்டு அவர் சிலையும் செய்தாக வேண்டும். நிர்வாணம் என்ற சொல் வெறுமனே விஷமற்ற பாம்பைப் போன்றது ஆனால் பெண்ணின் நிர்வாணம் என்பது கலை என்னும் விஷம் நிரம்பிய நாகத்தைப் போன்றது. அது அழகு. அதுவே விஷம். பெண்ணின் உடல், அதன் வளைவு நெளிவுகள், அந்த உடலில் இருக்கும் சூட்சும குறிப்புகள், மேடு பள்ளங்கள் என்று காமம் என்ற சொல்லை ஒரு உளி எடுத்து...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....