யாம் பிறந்து விழுந்த பொழுதினில் எம்மில் இருந்து தெரித்து விழுந்த ஒலியாய் வெளிப்பட்ட தாயே.....என் தமிழே...! மானிடரின் சப்தங்கள் மட்டுமே மொழியாய் போன ஒரு உலகத்தில் எம்மின் உணர்வுகளை எல்லாம் வெளிக் கொணர சப்தமாய் வெளிப்பட்டு உன்னை மொழியென்றும் எம் தாயென்றும் தமிழென்றும் கொண்டோம். உலகம் மொழியறியா காலத்தில் கவிசெய்தோம் நாம். இயல், இசை, நாடகம் என்று உன்னில் எத்தனை எத்தனை வித்தைகள் செய்தோம். உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த எம்மிடம் சப்தம் இருந்ததால், சப்தமென்ற தமிழிருந்தால் வலியையும், சந்தோசத்தையும், துக்கத்தையும், சரியான பாகத்தில் எம்மால் வெளிக்கொணர இயன்றதால் மானிடரின் உணர்வு விளங்கும் தெளிந்த நிலையை எய்தினோம். ஒப்பற்ற ஒரு இனமாய் உலகுக்கு அறிமுகமானோம்! காலங்கள் தோறும் மனிதர்கள் வந்தனர். உம்மை கற்றுத் தெளிந்து தம்மை புலவர் என்று தாமெ தம்மையே விளித்துக் கொண்டனர். உன்னைக் கொண்டு கவிசெய்தனர், புதினம் செய்தனர், பாடல் செய்தனர் இசை செய்தனர். உன்னைக்கொண்டு ஒரு வாழ்வு உம்மால் ஒரு வாழ்வு...என்று காலங்கள் தோறும் நீ வளர்த்திருக்கிறாய் மனிதர்களை. எத்துனை சுவை கொண்டவள் நீ....அடுக்குத் தொடராய், இரட்டைக் கிளவி...
இவன் ஜெயிக்கப் பிறந்தவன்....